இலங்கைக்கு ஜெனிவாவில் எழுந்துள்ள நெருக்கடியை, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி, ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எழுப்பப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவும்.
மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையும் அதிபராகத் தெரிவு செய்யப்படுவது சிறிலங்காவின் நலன்களுக்கு விரோதமாக அமையும்.தேர்தலில் ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற்றால், நாடு அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.மகிந்தவின் ஆட்சிக்கு முடிவு கட்டப்படாமல் போனால், இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்படலாம்.
இலங்க்கு எதிராகச் செயற்படும் அனைத்துலகச் சக்திகளை தோற்கடிக்க வேண்டுமாயின், புதிய அரசாங்கத்தினால் மட்டுமே அது முடியும்.அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இழுத்துச் செல்லப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
போர் முடிந்த பின்னர், சிறிலங்கா அதிபரும், வெளிவிவகார அமைச்சரும் தான், பொறுப்புக்கூறல் குறித்து விசாரிக்க ஐ.நாவை அழைத்தனர் என்பதை அவர்கள் இப்போது மறந்து விட்டனர்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.