சீனாவுடனான நட்புறவு தொடரும்-எதிரணியினர் - TK Copy சீனாவுடனான நட்புறவு தொடரும்-எதிரணியினர் - TK Copy

  • Latest News

    சீனாவுடனான நட்புறவு தொடரும்-எதிரணியினர்

    தாம் ஆட்சிக்கு வந்தால், சீனாவை ஓரம்கட்டி
    விட்டு, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவோம் என்று கூறிய, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்தப் போவதாக, சீன செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில், தெரிவித்துள்ளார்.


    சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு மகிந்த ராஜபக்ச அளித்துள்ள செவ்வியில், இலங்கையின் உண்மையான நண்பன் சீனா என்றும் தாம் ஆட்சிக்கு வந்தால் சீனாவுடனான உறவுகள் தொடர்ந்து பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

    இலங்கையின் பிரதான அபிவிருத்திப் பங்காளராக சீனாவே உள்ளது.சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட போது, அப்போது ஆட்சியில் இருந்த எ.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐதேக அரசாங்கமே அதற்கு அங்கீகாரம் அளித்திருந்தது.

    அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் சீன மக்கள் குடியரசு மீது தடைகளை விதித்திருந்த போதிலும், 1952ம் ஆண்டு இறப்பர் – அரிசி உடன்பாட்டில், ஐதேக அரசாங்கம் தான் கையெழுத்திட்டது.

    இது தான், இலங்கை – சீன உறவுகளுக்கு அடித்தளமாக உள்ளதுடன் அதற்குப் பின்னர் சிறிலங்காவில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சீனாவுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் காரணமாகியது.

    இந்த உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட பிரதான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான உடன்பாடுகளில் தரம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளனவா என்பது குறித்து மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தினால் பரிசீலிக்கப்படும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

    அதேவேளை, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில், தாம் தேர்தலில் வெற்றி பெற்றால், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், நட்புறவு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும், ஒத்துழைப்புகள் வலுப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.


    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: சீனாவுடனான நட்புறவு தொடரும்-எதிரணியினர் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top