ஒன்றுபட்ட ஒரே கொள்கையுடன் தலைமைக்கு கட்டுப்பட்டு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீமின் இல்லத்தில் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் தவிர ஏனைய ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
இந்தத் தகவலை கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்ட ஒரே கொள்கையுடன் தலைமைக்கு கட்டுப்பட்டு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு முடிவு செய்ததை தலைவர் ஹக்கீம் ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலுள்ள சிலர் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு கட்சித் தலைவருக்கு பாரிய அழுத்தங்களைக் கொடுத்து வந்த போதிலும், கட்சியின் மக்கள் பிரதிநிதிகளின் ஒருமித்த குரலினாலும் அசையாத நிலைப்பாட்டின் மூலமும் அந்த சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து மக்களின் கோரிக்கைக்கு ஏற்பவும் கட்சியின் போராளிகளினதும், கல்விமான்கள், கட்சியின் அபிமானிகளின் கோரிக்கைக்கு அமைவாகவும் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் முடிவை கட்சி நாளை பகிரங்க அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.