மலையகப் பேரவலத்திற்கு யார் பொறுப்பு? - TK Copy மலையகப் பேரவலத்திற்கு யார் பொறுப்பு? - TK Copy

  • Latest News

    மலையகப் பேரவலத்திற்கு யார் பொறுப்பு?


    இயற்­கையின் கோர­தாண்­டவம் மீண்டும் ஒரு­முறை
    நாட்டின் ஒரு பகு­தியை வாட்­டி­யெ­டுத்­துள்­ளது. கொஸ்­லந்தை பகுதி எங் கும் மக்­களின் அழு குரல்­களே கேட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. 

    உற­வு­களை இழந்­த­வர்கள் மற்றும் உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்று தெரி­யாமல் தவிப்­ப­வர்­களின் வேதனை, வார்த்­தை­க­ளினால் விப­ரிக்க முடி­யா­த­வை­யாக உள்­ளன. அந்த மக்­க­ளுக்கு ஆறுதல் கூறு­வ­தற்குக் கூட பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இன்று யாரும் இல்லை. பல்­வேறு கன­வு­க­ளுடன் வாழ்ந்­து­வந்த பல­ருக்கு இன்று என்ன நடந்­தது என்றே தெரி­ய­வில்லை. 

    மண்ணில் மாய­மா­ன­வர்­களை மீட்பு பணி­யா­ளர்கள் எப்­போது மீட்­கப்­போ­கின்­றனர் என்­பதே அனை­வ­ரது முகங்­க­ளிலும் காணப்­ப­டு­கின்ற ஆனால் எழுப்­பப்­ப­டாத கேள்­வி­க­ளாக உள்­ளன. கடந்த 2004 ஆம் ஆண்டு நாடு சந்­தித்த மிகப்­பெ­ரிய இயற்கை அனர்த்­தத்தின் பின்னர் தற்­போது மிகப்­பெ­ரிய மனித பேர­வ­லத்தை எதிர்­கொண்­டுள்ளோம். 

    2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்­பட்­ட­போது முன்­னெச்­ச­ரிக்­கையில் காணப்­பட்ட பல­வீனம் குறித்து பேசப்­பட்­டது. ஆனால் 10 வரு­டங்­களின் பின்­னரும் நவீன தொழில்­நுட்ப வளர்ச்­சி­யுடன் முன்­னெச்­ச­ரிக்கை செயற்­பாட்டில் வளர்ச்­சி­ய­டைந்­துள்ள நிலை­யிலும் இன்றும் அதே­போன்ற சேதத்தை எதிர்­கொண்­டுள்ளோம். 

    முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கைகள் உரிய முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்தால் மற்றும் அரச அதி­கா­ரிகள் பொறுப்­புடன் செயற்­பட்­டி­ருந்தால் அப்­பாவி உயிர்­களை காப்­பாற்­றி­யி­ருக்­கலாம் என்ற தர்க்­கத்தில் நியாயம் இருக்­கின்­றது. காரணம் 1970 ஆம் ஆண்டு பசறை குரூப் மீதும்­பிட்­டிய தோட்­டத்தில் ஏற்­பட்ட மண்­ச­ரிவில் பாரிய சேதம் ஏற்­பட்­டி­ருந்­தது. இந்த அனர்த்­தத்தில் இப்­ப­கு­தியில் 600 ஏக்கர் பகுதி மண்ணில் புதை­யுண்­ட­துடன் வீதி­களும் அடை­யாளம் தெரி­யாமல் காணாமல் போயின. 

    இவ்­வா­றான பாரிய வர­லாற்றுப் பாடத்தை பெற்­றுள்ள எமது நாடு இன்னும் இயற்கை அனர்த்­தங்­களை எதிர்­கொள்ள தயார் நிலையில் இல்­லையா? பொரு­ளா­தாரத் துறையில் மற்றும் மனித வள அபி­வி­ருத்திச் சுட்­டியில் முன்­னேறிச் செல்­லு­வ­தாக கூறப்­படும் எமது நாடு இன்னும் இயற்கை அனர்த்­தங்­களின் போது முன்­னெச்­ச­ரிக்­கை­யுடன் செயற்­பட தயா­ரா­க­வில்­லையா? கொஸ்­லந்தை மனித பேர­வ­லத்தை பார்க்­கும்­போது இவ்­வா­றான கேள்­விகள் எம்முள் எழுந்து மறை­கின்­றன. 

    ஆனால் இவற்­றுக்கு விடை­களே இன்னும் கிடைக்­காமல் உள்­ளன. காலப்­போக்கில் நாம் அனை­வரும் கூட இதன் தாற்­ப­ரி­யத்தை மறந்­து­வி­டுவோம். மீண்டும் ஒரு அனர்த்தம் வரும்­போது தான் பழைய பல்­ல­வியை பாட அனை­வரும் ஆரம்­பிப்பர். இந்த தேக்க நிலைக்கு முற்­றுப்­புள்ளி அவ­சி­ய­மில்­லையா? இயற்கை அனர்த்­தங்­களை மனி­தனால் தடுக்க முடி­யாது. 

    ஆனால் நவீன விஞ்­ஞான தொழில்­நுட்­பங்­களின் மூலம் அனர்த்தம் ஏற்­ப­டு­வ­தற்கு முன்னர் அவை குறித்து அறிந்து முன்­னேற்­பா­டு­களை மேற்­கொண்டு அனர்த்­தத்­தினால் ஏற்­ப­டக்­கூ­டிய சேதங்­களை தடுக்­கலாம். அல்­லது முடி­யு­மா­ன­ளவு குறைக்­கலாம். இந்த பொறி­மு­றையே அவ­சியம் என்று வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது. அதனை செய்­வ­தற்கு திரா­ணி­யற்­ற­வர்­க­ளா­கவே நாம் இருக்­கின்றோம். மண்­ச­ரிவு என்­பது மலை­ய­கத்தைப் பொறுத்­த­வரை சாதா­ரண விட­ய­மாகும். மலை­ய­கத்தில் காணப்­ப­டு­கின்ற மலை­களில் மண் அடுக்­கு­க­ளுக்கு கீழ் கற்­பா­றைகள் காணப்­படும். 

    இவற்­றுக்கு நடுவில் நீரோட்­டங்கள் இருக்கும். இந்­நி­லையில் இந்த நீரோட்­டங்கள் ஊற்­றாக வெளிப்­ப­டு­வ­துண்டு. இது சாதா­ரண விட­ய­மாகும். ஆனால் அதிக மழை­வீழ்ச்சி ஏற்­ப­டும்­போது மலையில் உள்ள நீர் ஊற்­றுக்கள் மேல்­வரும். அப்­போது கடு­மை­யான பாறை­க­ளுக்கு மேல்உள்ள சிறிய கற்­பா­றைகள் சரிய ஆரம்­பிக்கும். இந்த விட­யத்­தையே மண்­ச­ரிவு என்­கின்றோம். பதுளை மாவட்­டத்தில் கொஸ்­லந்தை பகு­தியில் அமைந்­துள்ள இந்த மீரி­ய­பெத்த தோட்டம் இரண்டு மலை­க­ளுக்கு நடுவில் உள்­ளது. 

    இரண்டு மலை­களும் சுமார் 300 அடி உய­ர­மா­ன­வை­யாகும். இந்­நி­லையில் சம்­பவ தினத்­தன்று காலை 7.45 மணி­ய­ளவில் திடீரென பாரிய சத்­தத்­து­டன் ஒரு மலை­யி­லி­ருந்து மண் திட்­டுக்­களும் பாரிய கற்­களும் சரிந்து விழுந்­துள்­ளன. இத­னா­லேயே இந்த பாரிய மண்­ச­ரிவு அனர்த்தம் ஏற்­பட்­டுள்­ளது. இதனால் மீரி­ய­பெத்த தோட்டம் முழு­மை­யாக மண்ணில் புதை­யுண்­டு­விட்­டது. 

    மண்­ச­ரி­வினால் 7 லயன் குடி­யி­ருப்­புக்கள் ஒரு பசும்பால் சேக­ரிப்பு நிலையம் 90 வருடம் பழை­மை­யான கோயில், இரண்டு வர்த்­தக நிலை­யங்கள் ஒரு சன­ச­மூக நிலையம் ஒரு உத்­தி­யோ­கத்தர் இல்லம் என்­ப­னவே இருந்த இடம் தெரி­யாமல் மறைந்­துள்­ளன. மீரி­ய­பெத்த தோட்டம் என்ற ஒரு கிராமம் இருந்­த­மைக்­கான அடை­யா­ளமே இல்­லாமல் குறித்த பிர­தேசம் தரை­மட்­ட­மாகி மைதானம் போன்று காட்­சி­ய­ளிக்கும் அள­வுக்கு இயற்கை தனது சீற்­றத்­தைக்­காட்­டி­யுள்ளான். 

    அதே­வேளை பாதிக் கப்­பட்ட மக்­களின் கண்­ணீ­ரினால் மீரி­ய­பெத்த தோட்­டமே மூழ்­கி­யுள்­ளது. மேலும் இந்த அனர்த்­தத்தில் இது­வரை 192 பேர் காணாமல் போயுள்­ள­தாக கணக்­கெ­டுப்­புக்­களில் காட்­டப்­பட்­டுள்­ளது. ஆனால் இந்த எண்­ணிக்கை கூடு­வ­தற்கும் வாய்ப்பு உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது­வரை ஒரு சில சட­லங் களே கண்­டெ­டுக்­கப்­பட்­டுள் ­ளன. இந்­நி­லையில் காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற உற­வி­னர்­களின் ஆதங்­கத்­துக்கே பதில் கிடைக்­காமல் உள்­ளது. 

    தமது உற­வு­களைத் தேடி பாதிக்­கப்­பட்ட மக்கள் மண்­ச­ரிவு ஏற்­பட்ட இடங்­களில் கூடி கண்­ணீர்­வ­டித்­த­வண்ணம் உள்­ளனர். பிள்­ளை­களை இழந்த தாய்மார்களினால் தமது துயரை வெளிக்­காட்­டக்­கூட முடி­யாத நிலையில் தவித்­துக்­கொண்­டுள்­ளனர். தமது துய­ரத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு தமது குடும்­பத்தில் யாரும் எஞ்­சி­யில்­லாத சிலரும் உள்­ளனர். இந்த மனித பேர­வ­லத்­தினால் முழு கொஸ்­லந்தை பிர­தே­சமே சோக­ம­ய­மா­கி­யுள்­ளது. 

    உற­வு­களை இழந்த மக்­க­ளினால் தமது துய­ரத்தை தாங்க முடி­ய­வில்லை. வய­து­போன தாய்­மா­ருக்கு தற்­போ­தைய நிலை­மையில் கத­றி­ய­ழு­வ­தைத்­த­விர வேறு தெரி­வுகள் இல்­லா­ம­லேயே உள்­ளன. லயன் குடி­யி­ருப்­புக்­க­ளி­லி­ருந்து 35 அடி­வரை மண் நிறைந்து காணப்­ப­டு­கின்­றது. 300 அடி உய­ர­மான மலை­யி­லி­ருந்து நீர் ஊற்­றுக்கள் கலங்­கிய நிலை­யி­லேயே மண்­மேடு சரிந்து விழுந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

    இந்­நி­லையில் மீட்புப் பணிகள் மிகவும் மந்த கதி­யி­லேயே இடம்­பெ­று­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மண்­ச­ரிவு ஏற்­பட்ட பகு­தி­களில் தொடர்ந்து மண்­திட்­டுகள் சரிந்து வரு­வதால் மீட்பு பணி­யா­ளர்­களும் மிகவும் அவ­தா­னத்­து­ட­னேயே மீட்பு பணி­களில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர். அத­னா­லேயே மீட்பு பணி­களும் மந்த கதி­யி­லேயே இடம்­பெற்­று­வ­ரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. காணாமல் போன­வர்­களை மீட்கும் பணி­களில் 500 க்கும் மேற்­பட்ட படை­யினர் ஈடு­பட்­டுள்­ளனர். எனினும் கடந்த புதன்­கி­ழமை சட­லங்கள் மீட்­கப்­பட்­டன. 

    காணாமல் போன­வர்­களின் நிலை குறித்து எதுவும் தெரி­யா­த­தனால் பிர­தேசம் முழு­வதும் சோக­ம­ய­மா­கி­யுள்­ள­துடன் காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்­களும் தவிப்­பி­லேயே உள்­ளனர். இந்­நி­லையில் சுமார் மூன்று நான்கு கிலோ மீற்றர் அள­வுக்கு மண்­ணினால் புதை­யுண்ட பகு­தியில் எத்­தனை நாட்­களில் மீட்பு பணிகள் நிறை­வ­டையும் என்­பதே இங்கு ஆரா­யப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும். 

    இது இவ்­வாறு இருக்க இந்த குறித்த மீரி­ய­பெத்த தோட்­டப்­ப­குதி மக்கள் குடி­யி­ருப்­புக்கு உகந்த இட­மல்ல என்­ப­தும் கடந்த 2011 ஆம் ஆண்டே அடை­யாளம் காணப்­பட்டு எச்­ச­ரிக்­கையும் விடுக்­கப்­பட்­டி­ருந்­த­தாக முன்னாள் இடர் முகா­மைத்­துவ அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்த விட­யமே அனை­வ­ரையும் தூக்­கி­வா­ரிப்­போ­டு­வ­தாக உள்­ளது. 

    காரணம் மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்ட நிலையில் மண்­ச­ரிவு ஆபத்து நிகழும் வரை அரச இயந்­தி­ரமும் அதி­கா­ரி­களும் என்ன செய்­து­கொண்­டி­ருந்­தனர்? இந்த தோட்­டப்­ப­கு­தியை இயக்கி வந்த பெருந்­தோட்ட நிறு­வனம் இந்த எச்­ச­ரிக்கை விட­யத்தில் என்ன செய்­தது? அதி­கா­ரிகள் அச­மந்த போக்­குடன் செயற்­பட்­ட­னரா? மீரி­ய­பெத்த தோட்­டத்தை பொறுத்­த­வரை அங்கு மக்கள் குடி­யி­ருப்­புக்கள் இருப்­ப­தற்­கான சூழல் இல்லை என்­ப­தனை அறிந்­தி­ருந்தும் அனர்த்தம் ஏற்­படும் வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­காமல் இருந்­துள்­ள­மையே அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

    அதா­வது குறித்த பகுதி குடி­யி­ருப்­புக்­க­ளுக்கு உகந்த பிர­தேசம் அல்ல என்று எச்­ச­ரிக்கை விடுத்­து­விட்டு மக்­களை வெளி­யே­று­மாறு மட்டும் கூறி­வி­டு­வ­துடன் கட­மையும் பொறுப்பும் முடி­வ­டைந்­து­வி­டுமா? இல்லை. மீரி­ய­பெத்த பகு­தியில் இவ்­வாறு மண்­ச­ரிவு அபாயம் உள்­ளது என்று உண­ரப்­பட்­ட­போது அங்­குள்ள மக்­க­ளுக்கு மாற்றுக் காணிகள் மற்றும் வீடு­களை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்து மக்­களை அந்த இடங்­க­ளி­லி­ருந்து பாது­காப்­பாக அகற்ற நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­க­வேண்டும்.

    ஆனால் இங்கு அவ்­வாறு செய்­யப்­பட்­டுள்­ளதா? ஏன் அவ்­வா­றான முன்­னேற்­பாட்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை? எமது நாட்டின் அரச இயந்­தி­ரத்தின் செயற்­திறன் என்ன மட்­டத்தில் உள்­ளது என்ற கேள்வி இங்கு எழு­கின்­றது. மக்கள் வெளி­யே­று­வ­தற்கு ஆர்வம் இல்­லாமல் இருந்­தி­ருந்­தால்­கூட அவர்­களை கட்­டா­யப்­ப­டுத்தி பாது­காப்­பான இடங்­களில் குடி­யேற்­று­வது பொறுப்­பல்­லவா? ஆபத்­தான சூழலில் உள்ள மக்கள் தாங்­க­ளா­கவே வேறு இடங்­க­ளுக்கு செல்­லும்­வரை அதி­கா­ரிகள் பொறு­மை­காக்க முடி­யுமா? இது எவ்­வ­ளவு ஆபத்­தா­னது என்­ப­தனை ஏன் யாரும் உண­ர­வில்­லையா என்­பது ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரி­யது.

    இலங்­கையை பொறுத்­த­வரை இவ்­வா­றான மண்­ச­ரிவு ஆபத்­துள்ள இடங்­களில் வீடுகள், கட்­டி­டங்கள் அமைக்­கப்­பட அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை. இவை குறித்து ஆராய தேசிய கட்­டட அகழ்­வா­ராய்ச்சி நிலையம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் மலை­யக பகு­தி­களில் வீடுகள் பாதைகள் மற்றும் கட்­ட­டங்கள் அமைக்­கப்­ப­டும்­போது இந்த நிறு­வனம் அனு­மதி வழங்­கப்­ப­ட­வேண்டும். மலை­யக மக்­களைப் பொறுத்­த­மட்டில் இன்னும் பிரிட்டிஷ் காரர் கட்­டிக்­கொ­டுத்த லயன் அறை­க­ளி­லேயே வாழ்ந்­து­வ­ரு­கின்­றனர்.

    நாட்டின் ஏனயை பகு­தி­களில் வீட­மைப்புத் துறையில் பாரிய முன்­னேற்றம் அடை­யப்­பெற்­றுள்­ள­போதும் இந்த மக்கள் மட்டும் இன்னும் லயன் அறை­க­ளி­லேயே உள்­ளனர். அதா­வது பிரிட்டிஷ் காரர் அக்­கா­லத்தில் புவி­யியல் ஆராய்ச்­சி­களை மேற்­கொள்­ளாது தமது தேவைக்கு ஏற்­பவும் வச­திக்கு அமை­வா­கவும் 1877 ஆம் ஆண்டு முதல் நிர்­மா­ணித்த லயன் அறை­களே இன்னும் உள்­ளன. அந்த மக்­க­ளுக்கு விடி­வு­காலம் எப்­போது என்ற கேள்­வியே எம்­மத்தியில் எழு­கின்­றது.

    இந்­நி­லையில் இந்த விட­யம் குறித்து பேரா­சி­ரியர் சந்­தி­ரபோஸ் எம்­முடன் கருத்து பகிர்­கையில் கொஸ்­லந்தை அனர்த்­தத்­துக்கு அர­சாங்க அதி­கா­ரி­களே பொறுப்­புக்­கூ­ற­வேண்டும். மலை­யக மக்­க­ளுக்கு இது­வரை பொருத்­த­மான காணிகள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு அவர்­க­ளுக்கு தனி­வீ­டுகள் கட்­டிக்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை. சுமார் இரண்டு இலட்சம் லயன்­வீ­டு­களில் இது­வரை 23,000 தனி­வீ­டு­களே அர­சாங்­கங்­க­ளினால் அமைத்­துக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

    எஞ்­சிய 180,000 வீடுகள் இன்னும் லயன் அறை­க­ளுக்­குள்­ளேயே முடங்­கி­யுள்­ளன. எனவே மலை­யக மக்­க­ளுக்கு பொருத்­த­மான காணி­களை அடை­யாளம் கண்டு அவர்­க­ளுக்கு அவ­ச­ர­கால அடிப்­ப­டையில் பாது­காப்­பான இடங்­களில் வீடு­களை அமைத்­துக்­கொ­டுக்­கா­விடின் கொஸ்­லந்தை போன்ற பல அனர்த்­த­ங்­களை நாங்கள் எதிர்­கா­லத்தில் எதிர்­நோக்­க­வேண்­டி­யேற்­படும்.

    இலங்கை வீட­மைப்­புத்­துறையில் உலக மட்­டத்தில் புகழ்­வாய்ந்த இடத்­தி­லேயே உள்­ளது. இலங்­கையின் கோரிக்­கைக்கு அமைய வீடமைப்­புத்­து­றையில் சர்­வ­தேச தினம் ஒன்­று­கூட பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால் மலை­ய­கத்தில் மட்டும் நிலைமை இன்னும் மாற­வில்லை. சுமார் 300 வீடுகள் ஒரு வளா­கத்­துக்­குள்­ளேயே கட்­டப்­பட்­டி­ருக்கும். ஐந்து அல்­லது ஆறு லயன் குடி­யி­ருப்­புக் கள் ஒரே இடத்தில் இருக்கும். இந்த நிலைமை மாறவேண்டும். தற்போது லயன் குடியிருப் புக்களில் வாழும் 1,80,000 பேருக்கும் தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும்.

    இதற்கு மலையக காணிப்பரப்பில் 4 வீதமான காணியே தேவைப்படும். அதாவது சுமார் 5,000 ஹெக்டெயர் நிலத்தில் இந்த வீடு களை கட்டிக்கொடுக்கலாம். காலம் காலமாக நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள மலையக மக்களுக்கு இந்த சேவையையாவது அவசரகால அடிப்படையில் அரசாங்கம் உடனடியாக செய்யவேண்டும். இல்லாவிடின் எதிர்காலத்தில் இந்த சமூகம் அதிகமான பாதிப்புக்களை சந்திக்க நேரிடும். இவ்வாறு இந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதை மலையக மக்களின் எதிரிகள் கூட எதிர்க்கமாட்டார்கள்.

    எனவே அரசாங்கம் உடனடியாக இதில் தலையிடவேண்டும். கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து மலையக மக்களின் வீட்டுப்பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டியது அவசியமாகும் என்கிறார். உண்மையில் மலையக மக்களுக்கான வீட்டுப் பிரச்சினை என்பது மிகப்பெரிய மனிதாபிமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள மலையக தோட்ட மக்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைத்துக்கொடுக்க முடியாதா? அந்த மக்களுக்கு எப்போது விடிவுகாலம் கிடைக்கும்? இன்னும் கொஸ்லந்தை போன்ற அனர்த்தங்களை சந்திக்கப்போகின்றோமா? மக்களை அந்த அழிவிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படாதா? காலம் இவற்றுக்கு பதில் கூறவேண்டும்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: மலையகப் பேரவலத்திற்கு யார் பொறுப்பு? Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top