இளைஞர்களை உள்வாங்க வேண்டும் விக்கினேஸ்வரன் - TK Copy இளைஞர்களை உள்வாங்க வேண்டும் விக்கினேஸ்வரன் - TK Copy

  • Latest News

    இளைஞர்களை உள்வாங்க வேண்டும் விக்கினேஸ்வரன்

    இலங்கைத் தமிழரசுக் கட்சி முதிய தலைவர்களுக்குக்
    கொடுக்கும் முக்கியத்துவத்தை இளைய தலைமுறை தலைவர்களுடன் பகிராதிருப்பது ஒரு தளர்வு நிலையாகத் தோன்றுகின்றது என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கைத் தமிழரசுக் கடசியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் மூன்றாவது நாளாகிய ஞாயிறன்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

    தாம் இல்லாது போனால் பொது மக்களுக்கு என்ன நடக்கும் என்று சிந்திக்காது ஆயூதம் ஏந்தியவர்கள் போர் நடத்திய நிலையில், எமது சிரேஷ்ட தலைவர்கள் தாங்கள் சடுதியாகப் போய்விட்டால் என்ன நடக்கும் என்று சிந்தித்துச் செயலாற்றுகிறார்களா என்ற கேள்வி பூதாகாரமாக இருந்து வருகின்றது என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு போர்க்காலத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட பெண்போராளிகள் நம்மத்தியில் பலர் இருக்கிறார்கள் அவர்களை உள்வாங்கி செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதேவேளை, இங்கு தலைமையூரையாற்றிய தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகிய மாவை சேனாதிராஜா,

    அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் அதேபோன்று சிறிலங்கா முஸ்லிம் கட்சியூம் ஓரணியில் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகளாகிய ஈபிஆர்எல்எவ், டெலோ, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்களும் கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் மட்டுமன்றி தென்பகுதியைச் சேரந்த முற்போக்கு கட்சிகளும், மலையகத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வலியூறுத்தியிருக்கின்றனர்.

    ஆயினும், புதிய தலைமை பொறுப்பின் கீழ் வந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியானது, இளைஞர் யூவதிகளையூம் அரசியலிலும் சமூகச் செயற்பாடுகளிலும் ஈடுபாடு கொள்ளச் செய்து தமிழ் மக்களின் அரசியல் செயற்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

    சமஸ்டி ஆட்சிமுறை என்பது சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினை என்றே பொருள்படுவதாகக் குறித்துக் காட்டிய அவர், அதன் உண்மையான நிலையை அவர்களுக்கு விளக்கிக் கூறி உணரச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவூம் குறிப்பிட்டார்.

    இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமாகிய ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், நவசமசமாஜக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தலைவர்கள், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் மற்றும் யாழ்ப்பாணத்திற்கான இத்தியத் துணைத் தூதுவர் தெட்சணாமூர்த்தி மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: இளைஞர்களை உள்வாங்க வேண்டும் விக்கினேஸ்வரன் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top