வொசிங்டனில் இருந்து ஏபி செய்தி நிறுவனத்துக்காக
‘சிறிலங்கா மீது அழுத்தங்களை தீவிரப்படுத்தும் ஐ.நாவின் புதிய விசாரணை’ என்ற தலைப்பில் MATTHEW PENNINGTON எழுதிய செய்திக் கட்டுரை.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த ஐ.நாவின் புதிய விசாரணை, அதன் அரசாங்கத்துக்கு அனைத்துலக அழுத்தங்களை அதிகரிக்கும் என்பதுடன், அதற்குப் பொறுப்பான அமெரிக்காவுடன் தொடர்புடைய சிறிலங்காவின் உயர் அதிகாரிகளையும் விசாரிக்கக் கூடும்.
2009ல், போரின் இறுதி ஐந்து மாதங்களில் அரசாங்கத்தின் பீரங்கித் தாக்குதலில், ஏறக்குறைய 40 ஆயிரம் பொது மக்கள் இறந்திருக்கலாம் என்று முன்னைய ஐ.நா அறிக்கை ஒன்று கூறியிருந்தது. சரணடைய முயன்ற தமிழ்ப் போராளித் தலைவர்களையும் படுகொலை செய்ததாக அரசாங்கப் படைகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
தனது பணியகத்தின் 10 மாத விசாரணைக்கு ஆலோசனை வழங்குவதற்காக, ஒரு நோபல் பரிசாளர், கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் குறித்து விசாரிக்க ஐ.நா பின்புலத்துடன் அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் பணியாற்றிய நீதிபதி ஒருவர் ஆகியோரை உள்ளடக்கியதாக, கனதியான குழுவொன்றை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடந்த புதன்கிழமை, நியமித்துள்ளார்.
அமெரிக்கப் பின்னணியில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், மோதலின் போது இருதரப்பின் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மையைக் கண்டறிந்து, தண்டனையில் இருந்து தப்பிப்பதை தவிர்த்தல் மற்றும் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதே இதன் இலக்காகும். இனத்துவத் தாயகம் கோரிய 26 ஆண்டு கால விடுதலைப் புலிகளின் போராட்டத்தை தோற்கடித்த போது, பொதுமக்களை இலக்கு வைத்ததாகவும், மோசமான மீறல்களில் ஈடுபட்டதாகவும், கூறப்படும் குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
“இந்த விசாரணையை நாங்கள் வேண்டப்படாத ஒன்றாகவே பார்க்கிறோம்.” என்றார், பாலித கொஹன்ன. இவர் போர் முடிவுக்கு வந்த போது சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலராக இருந்தவர், இப்போது ஐ.நாவுக்கான தூதுவராக இருக்கிறார். “இது ஒரு தீவிரவாதக் குழுவை வறிய, மூன்றாவது உலக நாடொன்று தோற்கடித்து விட்டதென்பதற்காக தண்டிக்கப்படுவது போலுள்ளது.” என்கிறார் அவர்.
போர் முடிவுக்கு வந்ததில் இருந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில், உள்நாட்டில் தனது அதிகாரத்தை இறுக்கி வைத்திருந்த போதிலும், இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படக் கூடும் என்று அதிபர் ராஜபக்சவின் ஆளும் வட்டாரங்கள் கவலை கொண்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்க குடியுரிமை பெற்ற, அவரது ஒரு சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே, போராளித் தலைவர்களைக் கொல்ல உத்தரவிட்டார் என்ற குற்றச்சாட்டுகள் பின்தொடர்கின்றன.
தென்னாபிரிக்க மனித உரிமை சட்டவாளர் ஒருவரின் அண்மைய அறிக்கையிலும் கூட, சரணடைதல் தொடர்பான இணக்கப்பாடு குறித்து கொஹன்னவுக்குத் தெரியும் என்றும், தற்போது ஐ.நாவின் அவரது பிரதிநிதியாக பணியாற்றுபவரான, மூத்த இராணுவ அதிகாரிக்கு உள்ள பங்கு குறித்தும் ஆராயப்பட்டிருந்தது. 2009 மே மாதம், போரின் இறுதி இரண்டு நாட்களில், புலிகளின் இரண்டு உயர்மட்ட அரசியல் தலைவர்களான பாலசிங்கம் நடேசன், எஸ்.புலித்தேவன் ஆகியோர், சரணடைய விருப்பம் வெளியிட்டதாக, வெளிநாட்டு இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.
அது தொடர்பான தகவல் இராஜதந்திரிகளால், சிறிலங்கா தலைவர்களுக்கு பரிமாறப்பட்டது- ஆனால், அது மரணத்தில் முடிந்தது. ஆறு மாதங்களுக்குப் பின்னர், வெற்றிபெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஒரு சிறிலங்கா இதழுக்கு, அளித்த செவ்வியில்- சரணடைய முனையும் போராளித் தலைவர்களைக் கொன்று விடுமாறு, இறுதித் தாக்குதலில் பங்கேற்ற இராணுவத்தின் 58வது டிவிசன் தளபதிக்கு, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.
போருக்குப் பின்னர், ஒரு எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்த, பொன்சேகா தனது கூற்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக கூறியிருந்தாலும், அவரது கருத்துக்காக கடுமையான அவசரகாலச்சட்ட விதிகளின் கீழ், 2011ல் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். எனினும், 2012ல் அவர் விடுதலை செய்யப்பட்டார். சிறிலங்கா இராணுவ அதிகாரியாக இருந்த கோத்தாபய ராஜபக்ச, 1990களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து, தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றினார்.
தனது சகோதரரின் அதிபர் தேர்தலுக்கு உதவுவதற்காக, 2005ல் அவர் தாய்நாடு திரும்பினார். அவர் சிறிலங்காவில் வசித்தாலும், அமெரிக்க குடிமகன் என்ற வகையில், அமெரிக்க போர்க்குற்ற சட்டங்களின் கீழ் அவர், வழக்கை எதிர்கொள்ளக் கூடும். தெற்காசிய நாடான சிறிலங்காவின் போர்க்குற்றங்களில் தொடர்புடைய, அமெரிக்க குடிமக்கள் விசாரணை செய்யப்படும் வாய்ப்புள்ளதா என்பது குறித்து, கருத்து வெளியிட அமெரிக்க நீதித் திணைக்களம் மறுத்து விட்டது.
1996ம் ஆண்டு அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும் இன்னமும் அது பயன்படுத்தப்படவில்லை. ஆனால், அமெரிக்க அதிகாரிகள் ராஜபக்ச குறித்து விசாரித்ததாக, சிறிலங்கா அரசாங்கம் முன்னர், வொசிங்டனிடம் முறைப்பாடு செய்திருந்தது. அப்போது அமெரிக்க பச்சைக் குடியுரிமை அட்டை வைத்திருந்த பொன்சேகா, அமெரிக்கா சென்றிருந்த போது, ஒக்லஹோமா நகரில், உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களத்தினால், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டதாக, கூறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள இராஜதந்திர தகவல் குறிப்பை 2009 நொவம்பரில்,விக்கிலீக்ஸ் வெளியிட்டது.
அந்த தகவல் குறிப்பில், பாதுகாப்புச் செயலரால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு ஆதாரமாக, நேர்காணலைப் பயன்படுத்திக் கொள்வதே, அதன் நோக்கம் என்று பொன்சேகாவுக்கு கூறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நேர்காணல் இடம்பெறுவதற்கு முன்னரே பொன்சேகா அமெரிக்காவை விட்டு புறப்பட்டிருந்தார். ஆனால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், தனது தகவல் குறிப்பில், போரின்போது கோத்தாபய ராஜபக்சவின் நடவடிக்கைகள் தொடர்பாக, அமெரிக்க அதிகாரிகள் பொன்சேகாவிடம் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது என்று, கொழும்பில் பெரியதொரு கவலை ஏற்பட்டுள்ளதாகவும், தலைமைப்பீடத்தை இறுக்கமான நிலையில் வைத்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
ஐ.நாவின் 10 மாத விசாரணையில், ராஜபக்சவின் செயற்பாடுகள், அல்லது சிறிலங்காவின் ஏனைய தலைவர்களின் செயற்பாடுகள் குறித்து விசாரிக்கப்படுமா என்பது தெளிவாக இல்லை. ஆனால், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அதற்காக அழுத்தம் கொடுக்கிறார்கள். அனைத்துலக அளவில் தடைவிதிக்கப்பட்ட புலிகளால், இழைக்கப்பட்ட, பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தியது குறித்த மீறல்கள் குறித்தும் கூட விசாரிக்கப்படும். ஆனால், போராளித் தலைமை காணாமற்போய் அல்லது கொல்லப்பட்டு விட்ட நிலையில், அவர்கள் இதனால் இழப்பதற்கு எதுவுமில்லை.
நோபல் பரிசு பெற்ற பின்லாந்தின் முன்னாள் அதிபர், மார்டி அதிசாரி, கம்போடியாவில் இடம்பெற்ற போரக்குற்றங்கள் குறித்து விசாரிக்கும் ஐ.நா பின்புலத்துடனான தீர்ப்பாயத்தின் நீதிபதியாகப் பணியாற்றிய டேம் சில்வியா கார்ட்ரைட், பாகிஸ்தான் மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோரின் ஆலோசனையுடன் இயங்கும், 12 பேர் கொண்ட விசாரணைக் குழுவுடன் ஒத்துழைக்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்து விட்டது.
இந்த விசாரணை, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு கூடிய விரைவில் வழிவகுப்பதற்கு வாய்ப்புகளில்லை. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு இதனைக் கொண்டு செல்வதை, ரஸ்யாவும், சீனாவும் எதிர்க்கின்றன. ஆனால் இதன் முடிவுகள், மீறல்களுடன் தொடர்புடைய எந்தவொரு இலங்கையரும், அனைத்துலக அரங்கில், நெருக்கடிக்குள்ளாக நேரிடலாம். போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான இலங்கையர்கள் எவரும், அமெரிக்காவுக்குள் நுழைவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கோரியுள்ளனர்.
தென்னாபிரிக்க சட்டவாளர் யஸ்மின் சூகாவின் அண்மைய அறிக்கையில், போரின் இறுதிக்கட்டத்தில், 'வெள்ளைக் கொடிச் சம்பவம்' என்று அழைக்கப்படும் சம்பவத்தில், 100இற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமற்போனது குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராயப்பட்டிருந்தது. யஸ்மின் சூகா, முன்னர் சிறிலங்கா தொடர்பான, ஐ.நா நிபுணர் குழுவில் பணியாற்றியவர்.
குறிப்பாக, ஜொகன்ஸ்பேர்க்கைத் தளமாக கொண்ட சூகாவின் மனித உரிமைகள் நிறுவகம், புலிகளின் தலைவர்கள் சரணடைய விரும்பிய, இறுதி 48 மணி நேரத்துக்குள், நடேசன் மற்றும் புலித்தேவனுக்கும், வெளிநாட்டு, சிறிலங்கா நடுநிலையாளர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பாடல்கள் குறித்து விசாரணை மேற்கொண்டது. கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், இது அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தை மீறும், போராளித் தலைவர்களைப் படுகொலை செய்வதற்கான “உயர்மட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத் திட்டம்” என்று அந்த விசாரணை முடிவுக்கு வந்தது.
2009 மே 18ம் நாள் பொழுது விடிந்த போது நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு, வெள்ளைக்கொடியை பிடித்தவாறு, அரசாங்கப் படைகளிடம் சென்றதாக, பெயரை வெளியிடாத நான்கு நேரில் கண்டசாட்சிகள் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 58வது டிவிசன் தளபதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே அந்தக் குழுவை பொறுப்பேற்றதாக, ஒரு சாட்சி கூறியுள்ளார். ஒரு மணிநேரம் கழித்து, தலைவர்களின் சடலங்கள் வீதியோரம் கிடப்பதையும், அவற்றைச் சுற்றி நின்று படையினர் ஒளிப்படங்களை எடுத்துக் கொண்டிருப்பதையும் கண்டுள்ளார் அதே சாட்சி. உயிரற்ற உடல்கள் எரிகாயங்களுடன் கிடக்கும் காட்சி பின்னர், இணையத்தில் காணப்பட்டது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், 2009 ஒக்ரோபரில், அமெரிக்க காங்கிரசுக்கு அளித்த அறிக்கையில், சரணடைந்த குழுவினரை நோக்கி சிறிலங்காப் படையினர் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டதையும், அனைவரும் அதில் கொல்லப்பட்டதையும் தாம் கண்டதாக, அந்தப் பகுதியில் இருந்து தப்பிய பெயர் வெளியிடப்படாத, நேரில் கண்ட தமிழர் ஒருவர், கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. புலிகளின் தலைவர்கள் சண்டையில் கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியது.
ஆனால், அது எப்படி நடந்தது என்பது குறித்து முரண்பாடான தகவல்கள் கொடுக்கப்பட்டன. சிறிலங்காப் படைகளால் அவர்கள் சண்டையின் போது குழப்பத்தில் சுடப்பட்டிருக்கலாம் என்று ராஜபக்ச கூறினார். போராளிகளால் பின்புறம் இருந்து அவர்கள் சுடப்பட்டதாக, முன்னர், பாலித கொஹன்ன கூறியிருந்தார். தற்போது ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதரகத்தில், கொஹன்னவின் பிரதிநிதியாக பணியாற்றும், சவேந்திர சில்வாவிடம், செவ்விகாண ஏபி வேண்டுகோள் விடுத்த போதிலும், அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.
கொஹன்ன தனது முன்னைய கூற்றில் இருந்து இப்போது விலகி நிற்கிறார். தற்போது அவர், என்ன நடந்தது என்று தனிப்பட்ட ரீதியாக தனக்கு ஏதும் தெரியாது என்கிறார். போராளிகள் எவ்வாறு சரணடைவது என்று ஆலோசனை கூறும் வகையிலான, தகவல் குறிப்பை தாம் ஐரோப்பிய இடைத்தரகருக்கு அனுப்பியதை அவர் உறுதிப்படுத்துகிறார். ஆனால், சரணடைதல் பற்றிய இணக்கப்பாடு குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கொலை உத்தரவு ராஜபக்சவினால், வழங்கப்பட்டிருக்கும் என்றோ, சவேந்திர சில்வாவினால் படுகொலை நிறைவேற்றப்பட்டிருக்கும் என்றோ, தாம் நம்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ”குற்றச்சாட்டுகளை சுமத்துவது மிகவும் இலகுவானது. கோடரிக்காம்புகள் மத்தியில் ஒரு சாட்சியைக் கண்டுபிடிப்பதும் மிக இலகுவானது. ஆனால், அதன் நம்பகத்தன்மை என்பது வேறு விடயம்” என்கிறார், சிறிலங்காவின் உயர்நீதிமன்ற முன்னாள் சட்டவாளரான பாலித கொஹன்ன.

மொழியாக்கம் கார்வண்ணன். வழிமூலம் – அசோசியேட்டட் பிரஸ்