தவறாக வழிநடத்தியமை தொடர்பில் மஹியாங்கனை பிரதேச சபையின் உறுப்பினர் வட்டரக்க விஜித தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர். தேரர் செய்த முறைப்பாடு பொய்யானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். வட்டரக்க விஜித தேரர், பாணந்துறை பிரதேசத்தில் வீதிக்கு அருகில் தாக்குதலுக்கு உள்ளாகி விழுந்து கிடந்த நிலையில் அண்மையில் மீட்கப்பட்டார்.
இதன் பின்னர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், இனந்தெரியாத நபர்கள் தன்னை கடத்திச் சென்று தாக்கிய பின்னர், குறித்த இடத்தில் கைவிட்டுச் சென்றதாக பொலிஸாரிடம் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் வட்டரக்க விஜித தேரரின் உடலில் காணப்பட்ட காயங்கள் மற்றும் அவரை நிர்வாணப்படுத்தி கைகள்,கால் என்பன கட்டப்பட்ட நிலையிலும் அவரது ஆணுறுப்புக்கூட சுண்ணத்து செய்யும் நோக்குடனும் வெட்டப்பட்டிருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் முன்னர் தெரிவித்திருந்தன. ஆனால் தற்போது இலங்கை அரசு மீது மேற்கொள்ளப்பட்டுவரும் வெளிநாட்டு அழுத்தங்களிலிருந்து விடுபடும் ஒரு நோக்கத்திற்காக இந்த செய்தி சோடிக்கப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகின்றது.
இது போன்றே கடந்த இரு மாதத்திற்கு முன்னர் கொழும்பில் குறித்த தேரரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பும் அங்கு சென்ற பொதுபலசேனா அமைப்பினரின் மிரட்டலால் அதே மாநாட்டில் வைத்து மன்னிப்புகேட்கும்படி மிரட்டப்பட்டு குறித்த தேரர் மன்னிப்பும் கேட்டார் அந்த காணொளியும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் தீயிட்டு எரிக்கப்பட்ட நோ லிமிற் வர்த்தக நிலையமும் மின்சார ஒழுக்கே காரணம் என பொலிசார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.