சைபர் தாக்குதல் மூலம் முடக்கப்பட்டது சிறிலங்கா அதிபரின் இணையத்தளம் - TK Copy சைபர் தாக்குதல் மூலம் முடக்கப்பட்டது சிறிலங்கா அதிபரின் இணையத்தளம் - TK Copy

  • Latest News

    சைபர் தாக்குதல் மூலம் முடக்கப்பட்டது சிறிலங்கா அதிபரின் இணையத்தளம்


    சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இணையத்தளம் உள்ளிட்ட சிறிலங்கா அரசாங்கத்தின் பல அதிகாரபூர்வ இணையத்தளங்கள் சைபர்தாக்குதலுக்கு உள்ளாகி செயலிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்தே, சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

    சிறிலங்கா அதிபரின் இணையத்தளம் சைபர் தாக்குதலால் முடக்கப்பட்டது என்பதை, அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்றிரவு கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளார். 

    எனினும் தற்போது அது செயற்படத் தொடங்கியுள்ளதாகவும், திங்கட்கிழமை தொடக்கம்அ பதவேற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

    கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட சைபடிர் தாக்குதல்களின் மூலம், சிறிலங்கா அதிபர், திறைசேரி, லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் ஆகியவற்றின் இணையத் தளங்கள் முடக்கப்பட்டதாகவும், சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

    சிறிலங்கா அதிபரின் இணையத்தளம் தற்போது இயங்கி வருவதாக, அதிபரின் ஊடகப் பேச்சாளர் அனுராத ஹேரத் தெரிவித்துள்ளார். 

    திறைசேரி இணையத்தளமும் இயங்கத் தொடங்கியுள்ளது. 

    ஒப்பரேசன் சிறிலங்கா என்ற பெயருடையவர்களே, சிறிலங்கா அதிபரின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: சைபர் தாக்குதல் மூலம் முடக்கப்பட்டது சிறிலங்கா அதிபரின் இணையத்தளம் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top