கதவோர விழிகள்.... - TK Copy கதவோர விழிகள்.... - TK Copy

  • Latest News

    கதவோர விழிகள்....

    கதவின் ஓரமாக நின்று வெளியே நோக்கிய போது, அவனும் தன்னைத் திடீரென்று விழிகளால் நிலை கொண்டதைக்கண்டு கொண்டாள்.
    நான் நினைக்கிறேன்.அவளின் தாய் பிரசவ காலத்தில் கருங்கடலில் பயணம் செய்திருக்கவேண்டும்.
    வானில் கருமை இருந்தால் மழை பொழிந்து நிலம் குளிர்ச்சி...
    நிறத்தில் கருமை இருந்தால் கருணை இருந்து முகம் குளிர்ச்சி..
    தலைக்கு எண்ணையும், நெற்றியில் திருநீறும் அவளிடத்தில், அவள் முகம் மட்டும் தான் வெளியே தெரிந்தது. சில வேளையில் அவள் ஊனமாகக் கூட இருக்கக் கூடும் என்று எண்ணிய வேளையில்,
    'பயணிகள் கவனத்திற்கு, நீங்கள் கிளிநொச்சிக்குச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பஸ் வண்டிகள் இன்னும் முப்பது நிமிடங்களில் இங்கிருந்து புறப்படும்.'

    அவள் புறப்பட முன் உடனடியாக எனது விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். அவள் திடீரென்று அந்த மறைவில் இருந்து வெளியே வந்தாள். அவள் இடையிலே பிறந்த மேனியோடு அழகான குழந்தை. அவனது இதயத்தில் கரம் விளையாடியது போல் இருந்தது.
    'பயணிகள் கவனத்திற்கு, உங்களுக்கான உணவுப் பொதிகள் வழங்கப் படுகின்றன. வரிசையாக மாடுகளை போல்வந்து பெற்றுக் கொள்ளவும்.'
    'நீங்களும் போறீங்களா'
    'இங்க இருந்து பிள்ளையும் நானும் எவ்வளவு நாளைக்குக் கஸ்ரப்படுறது'
    'உங்கட அவர்'
    'எங்கள விட்டுட்டு ஓடிப் போயிட்டார்.
    நானும் அம்மாவும் அகதிகளா வன்னியில இருந்து வந்தம். இங்க வந்த ஒருவர் எங்கள இந்த முகாமைவிட்டுவெளியேற ஒழுங்கு செய்வதாகச் சொல்லி பிறகு என்னக் கலியாணஞ் செய்ய விருப்பப்படுறதா அம்மாட்டக் கேட்டார். அவர் மேல எனக்கும் விருப்பம் இருந்ததால அம்மா சம்மதிச்சா. ஆறு மாசம் தான் ஒன்றா இருந்தம். பிறகுசொல்லாமல் எங்கயோ ஓடிப்பொயிற்றார். இந்த அதிர்ச்சியில அம்மாவும் இறந்திற்றா. இது எனக்கு மட்டுமில்ல.என்னப் போல எத்தினயோ பேருக்கு நடந்திருக்கு.
    'ஆட்ஷேபனை இல்ல எண்டா நான் உங்களக் கலியாணம் செய்து கொள்ளவா'
    'பயணிகள் கவனத்திற்குஇ எஞ்சி இருக்கும் பயணிகள் உடனடியாக பதின்மூன்றாம் இலக்க பஸ் வண்டி இடத்திற்குச்செல்லவும்.'
    அவள் பிள்ளையோடு விறுவிறுவென்று நடந்தாள்.
    'என்ன உங்களுக்குப் பிடிக்கேல்லயா'
    '..............'
    'ஒரு நிமிசம் நில்லுங்க பிளீஸ்'
    'பைத்தியமா உங்களுக்கு?நான் ஒரு பிள்ளைக்குத் தாய். விருப்பப் பட்டுத்தான் அவரக் கலியாணஞ் செய்தனான்.'
    'எனக்கு உங்கட பழைய கதை தேவ இல்ல'
    'உங்களுக்கு வேற பொம்பிள இல்லாமலா என்னட்ட வந்தனீங்கள்..'
    'ஒண்டு விளங்கிக் கொள்ளுங்கோ நான் கலியாணம் செய்தா உங்களத்தான்'
    'இஞ்ச பாருங்கோ இந்த யுத்தத்தால பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்துக்கு மேல விதவைகள் இருக்கினம். வேலைவாங்கித்தாறன் எண்டு கூட்டிக் கொண்டு போய் என்னென்னவோ நடக்குது.  இப்ப என்ன நீங்க கண்டிராட்டிக்கலியாணமே செய்திருக்க மாட்டீங்களா'
    'உங்களக் காணுமட்டும் எனக்குக் கலியாணஞ் செய்கிற எண்ணமே இல்லை'
    'சரி சரி நான் ஓம் படுறன் .நான் உனக்கு வாழ்கை தந்திருக்கிறன், நீ முதல்ல இன்னொருத்தனோட வாழ்ந்தனிதான் எண்டு அடிக்கடி சொல்லிக் காட்டி என்ர மனதக் காயப்படுத்த மாட்டீங்களா?'
    'உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத கற்பனை '
    'பிறகும் இந்தப் பிள்ளையோட பாசமாக இருப்பீங்களா?'
    'எங்களுக்கு இதுவே போதும் சரியா?'
    'நம்பலாமா எந்தப் பிரச்சனையும் வராதா?'
    'ம்.. புருஷன்ர நினைவுகள் உங்களுக்கு இருக்காத மட்டும்'
    'என்ன சொல்லுறீங்கள்?'
    'உங்கட மனசில கணவரோட நினைவு வரவே கூடாது'
    'முதற் காதலக் கூட மறக்கேலாது கலியானத்த எப்பிடி மறக்கிறது.'
    'நான் ஏதாவது பிழையாக் கேட்டுட்டனோ?'
    'பிள்ளைய ஒவ்வொரு முறையும் பார்க்கேக்க எனக்கு அவரிட ஞாபகம் தான் வரும். என்னப் பார்த்த ஒருநிமிசத்திலயே உங்களால என்ன மறக்கேலாமல் இருக்கு, பல மாசம் அவரோடு வாழ்ந்திட்டு அவரை எப்பிடி மறக்கிறது'
    அவள் பிள்ளையோடு பைகளையும் சுமந்து கொண்டு நடந்தாள்.
    bag ஐத் தூக்கிக் கொண்டுவந்து தரவா?'
    ''என்ர மனச் சுமைய விட இது ஒண்டும் எனக்குச் சுமயில்ல நான் போறன்.''

    முற்றும்.
     -ஜெ-
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: கதவோர விழிகள்.... Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top