அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 04 - TK Copy அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 04 - TK Copy

  • Latest News

    அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 04

    தற்போதைய இந்திய அரசியல் நிலையும் மேலைத்தேய
    இராசதந்திர நகர்வுகளும் எவ்வாறு இணைந்து பயணிக்கின்றன என்பதை காண்பது இந்த கட்டுரை தொடர்களின் முக்கிய விடயமாகும். இதன் அடிப்படையில் ஈழதமிழ் மக்கள் அரசியலை அளவிட்டு கொள்வதற்கு ஏற்ற வகையில் உள்ள தரவுகளை காணவேண்டிய தேவை உள்ளது. இந்தியதேர்தல் முடிவு பெற்று பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மோடி அவர்கள் தெரிவு செய்யப்படுவார் என்பதிலே உலகம் தெளிவாய் இருந்து ஆனால் எதிர்பார்த்ததை விட பலம் மிக்க அரசாங்கம் ஒன்று அவர்கைகளுக்கு போயுள்ளதை கண்டு உலக நாடுகள் அதிர்ந்து போயுள்ளன என்பது தான் உன்மை.

    இதனால் இந்தியா தொடர்பான கொள்கைகளில் அனைத்துலகநாடுகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக எண்ணுகின்றன. தற்போதைய நிலையில் பெரும்பாலான மேலைத்தேய ஆய்வாளர்கள் பிரதமர் மோடி அவர்களின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் குறித்த விபரங்களிலும் அவரது வாழ்க்கை அனுபவங்களிலும் அவரது ஆர்வங்களையும் குறித்த ஆய்வுகளிலே கூடுதல் கவனம் செலுத்துகின்றன. அரசியல் வலு கொண்ட ஒரு தனிமனிதனின் அனுபவமும் பட்டறிவும் சிந்தனையும் எவ்வாறன கொள்கை மாற்றங்களை ஏற்படுதத வல்லது என்பதை இந்த இந்த ஆய்வாளர்கள் சுட்டிகாட்டுகின்றனர். தீவிர இந்து தத்துவத்தின் அடிப்படைகளுடன் சமூக பொருளாதார வளர்ச்சியையும் ஒருமுனையில் கொண்டு செல்ல கூடிய கொள்கை மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் உலகம் தயாரகிறது. 

    இதை இன்னொரு வகையில் சொல்வதானால் சந்தனப்பொட்டும் குங்குமப்பொட்டும் வைத்த வெள்ளையர்களை இனிமேல் இந்திய வீதிகளில் அதிகம் காணலாம். மோடி அவர்களின் ஆட்சி இந்தியாவில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்த உள்ளதாக பல்வேறு ஆய்வாளர்களின் பார்வையாகவும் உள்ளது. இந்து அடிப்படை வாதமும் முதலீடுகளின் வரவும் மேலோங்கவுள்ள அதேவேளை எதிலே அதிக ஆர்வமோ அதுவே விதியை நிர்ணயிப்பதாகவும் மாறலாம் என்பதுவும் பொதுவான கருத்தாகும். குஜாரத்தில் பாரிய சமூக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்திய முதலமைச்சர் மோடி இந்த மாற்றங்களை அகில இந்தியா பூராகவும் ஏற்படுத்துவார் என்பது ஒவ்வொரு வாக்காளர்களின் கணிப்பாக பார்க்கப்படுகிறது. அனைத்துலக நிறுவனங்களின் பலஆயிரம் கோடிரூபா ஒப்பந்தங்களின் மூலம் இன்று குஜாரத்தை இந்தியாவின் ஒர் உதாரண மாநிலமாக மாற்றி இருக்கிறார். 

    ஆதற்கு ஏற்றாற்போல் இந்தியாவை தற்போது பிரதமர்; மோடி கைப்பற்றி இருக்கிறார். பிரதமர் மோடி அவர்களின் வெற்றிக்குப் பின்னால் பல்வேறு காரணிகளை காணகூடியதாக உள்ளது. இதிலே அவருடைய அரசியல் தந்திரங்களும் தமக்கே உரித்தான தனிப்பாணியில் எதையும் சாதிக்கும் திறமையும் மிக முக்கியமானதாகும். இதிலே சாமான்ய மக்களின் உயர்வை மையமாக கொண்டு மோடி அவர்கள் இடும் திட்டங்கள், பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஆதரவாக அமைந்திருப்பதாக பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறது. முதலமைச்சராக அவர் குஜாரத் மாநிலத்தை கட்டி அமைத்த போது முதலீட்டாளர்கள் மத்தியிலே உருவாக்கி கொண்ட செல்வாக்கும் அந்த செல்வாக்கை உருவாக்கி கொள்வதிலே உறுதுணையாக நின்ற பொதுசன உறவு நிவனங்களும் பாரிய பிரச்சார யுத்திகளை கையாண்ட முறையும் மோடி அவர்களின் வெற்றியின் மிக முக்கிய அங்கங்களாகும். பொருளாதார முன்னேற்றத்திலும் அம்முன்னேற்றத்திற்கு தேவையான கருத்தாதரவை திரட்டுவதிலும், முதலீட்டாளர்களின் வரவேற்பை பெறத்தக்க கொள்கைகளை நடைமுறை படுத்துவதிலும் முக்கிய கவனம் செலுத்திவந்ததன் காரணமாக இன்று உலகின் தலைசிறந்த முதலீட்டாளர்கள் இந்தியா முழுவதும் கவனம் செலுத்துபவர்களாக உள்ளனர். 

    ஜப்பானிய நிறுவனங்களும், அமெரிக்க நிறுவனங்களும் பல நூறு பில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த கட்டுமானங்களை ஆரம்பித்துள்ளன. இந்த முதலீடுகளுக்கொல்லாம் வழி ஏற்படுத்தும் பொருட்டு பல்வேறு மேலிட தொடர்புகள் மூலமும் தேவைகளை பெற்றுக் கொள்ளும் தன்மை கொண்டவர் மோடி. சிறந்த நிர்வாகியாக இருக்கம் அவர் மிக சிறந்த ஆலோசகர்களின் உதவிகளை பெற்று கொண்டாலும் சொந்த எண்ணங்களின் அடிப்படையில் நிதானமாக கடந்த காலங்களில் பிரதமர் மோடி அவர்கள் பல்வேறு தீர்மானங்களை எடுத்திருக்கிறார் என்பது வெளிப்படையாக உள்ளது. அடிமட்ட சேவையாளன் பதவியிலிருந்து, பல பத்தாண்டுகள் பாரதீய ஜனதா கட்சியில் பரப்புரையாளராக சேவையாற்றிய நரேந்திர மோடி அவர்கள். கருத்தாதரவிலும் கொள்கைப் பரப்புரையிலும் வலுவான நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார். தனது கொள்கைகளையும், கருத்தையும். புரப்புரை செய்வதற்கும் கடந்த காலங்களில் ஏற்பட்ட இஸ்லாமியர்களுக்கும் இந்துகளுக்கும் எதிராக இடம் பெற்ற கலகங்களில் உருவாகிய களங்கங்களை போக்கும் முகமாக அனைத்துலக பரப்புரை நிறுவன துணைகள் முக்கியமானவையாக இருப்பதாக தெரிகிறது. 

    இவருக்கு துணையாக இருக்க கூடிய அமெரிக்க பொதுமக்கள் உறவு நிறுவனமாகிய APCO உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த பரப்புரை செயற்பாட்டு மையமாகும், இந்நிறுவனத்தின் கீழே பல நிறுவனங்கள் பங்காளிகளாக சேவைசெய்கின்றன. ஊலகின் பல அரசியல் தலைவர்களதும் முன்னணி வங்கிகளினதும் பெயர்களில் எற்பட்ட களங்கங்களை இந்நிறுவனம் சீர் செய்து கொடுத்திருக்கிறது. Vibrant Gujarat என்ற பெயரில் குஜாரத்தை எழுச்சி ஊட்டும் திட்டம் கொண்ட மகாநாடு மிக வெற்றி பெறுவதற்கு APCO நிறுவனம் பெரும் பணியை ஆற்றி உள்ளது முக்கியமானதாகும். ஆற்றல் மிகுந்த இந்த நிறுவனத்தில் பல அமெரிக்க செனட்டர்களும் வங்கி அதிபதிகளும் மேற்குலகின் முன்னைநாள் அரசியல் தலைவர்களும் பணியாளர்களாகவும் ஆலோசகர்களாகவும் இருப்பது குறிப்பிடதத்தக்கதாகும். 

    அதீத வலதுசாரி போக்குடைய இராசதந்திரிகளின் ஆலோசனை நிறுவனங்களும் APCOவுக்கு ஆலோசனை வழங்குகின்றன. மோடி அவர்களின் செல்வாக்கு இந்தியாவில் மட்டுமல்லாது மேற்குலக முதலீட்டு நிறவனங்கள் மத்தியிலும் பிரபல்யமாவதற்கு இதை விட வேறுகாரணி தேவையில்லை. இந்த பின்புல நிலையிலிருந்து பார்க்கும் போது மோடி அவர்களை இந்திய மக்கள் தெரிவு செய்தார்களா அல்லது மேலைதேய நலன்களை நகர்த்த மேலை நாடுகளால் தெரிவு செய்யப்பட்டாரா என்ற கேள்வி எழுவது நியாயமானது தான். பிரதமர் மோடி அவர்களின் வெளியுறவுக் கொள்கை குறித்து பல்வேறு ஊடகங்களும் பேட்டிகளையும் கட்டுரைகளையும், தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன. மோடியவர்களின் வெளியுறவு கொள்கை வர்த்தக இராசதந்திரங்களை மையமாக கொண்டதாகவே பலரும் எதிர்பார்க்கின்றார்கள். 

    இருந்த போதிலும் உள்நாட்டிலே அதிக வலுவுள்ள அரசாக அமைந்திருப்பதால், பல்வேறு விடயங்களையும் தன்னிச்சையாக தீர்மானிக்க கூடிய வலு அவரது அரசாங்கத்திற்கு உள்ளது. மாநில கட்சிகளில் அதிக சக்தி வாய்ந்ததாக தமிழ் நாட்டின் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமே உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் மனோநிலைக்கு ஏற்பவே அதிமுக செயற்பட வேண்டிய தேவை உள்ளது. இரண்டு வருடங்களில் வரவிருக்கும் மாநில தேர்தல்களில் தமது செல்வாக்கை இழந்து விட கூடாது என்ற தேவையும் அதன் தலைவர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கு உள்ளது. மோடி அவர்களுடன் சுமூக உறவை பேணி கொள்வதிலேயே அதிமுக கூடுதல் மாநில ஒதுக்கீடுகளை பெற்று கொள்ள முடியும். சிறீலங்கா தொடர்பான வெளியுறவு கொள்கைகளில் இந்த உறவு ஈழதமிழ் மக்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது. 

    இங்கே தமிழ் மக்கள் தரப்பு கொள்கை நகர்வுகள் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டிய தேவையில் உள்ளது. மோடி அவர்களின் முதலாளித்துவ கொள்கைகளும். அனைத்துலக முதலாளித்துவ அரங்கும் இனைந்து இந்தியாவை ஒரு தன்னம்பிக்கை கொண்ட தேசமாக கட்டி அமைக்க முனைந்து நிற்கின்றன. மோடி அவர்களின் ஜப்பானிய முதலீட்டு தொடர்பு பல்வேறு இந்திய ஜப்பானிய கூட்டுகளை உருவாக்க உள்ளது. இது சீனாவை மேலாதிக்கம் செலுத்தும் வகையில் பார்க்கப்படுமானால் ஆசிய பிராந்தியத்தில் வல்லரசுகளின் போட்டியை துரிதப்படுத்துவதாக அமைகிறது. தமிழ் மக்கள் சார்பாக இந்திய கொள்கை நகர்வகள் குறித்து சிந்திக்கும் பொழுது தெற்காசியாவின் பாதுகாப்பில் தாமும்; “ஓரு” அங்கமாக தமிழர்கள் கருத வேண்டிய கட்டம் வந்துள்ளது. இதனால் போராட்ட அரசியலிலிருந்து தமிழ்மக்கள் கையாழும் அரசியல் இராசதந்திரம் நோக்கி கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை விரைவில் ஏற்படும். 

    இதில் குறிப்பாக ராஜபக்ச அரசாங்க நகர்வுகளை கையாழ்வது முக்கியமாக தெரிகிறது. ஆரசியல் முதிர்ச்சியும் அனுபவமும் வீரியமும் தமிழ் மக்களின் கருத்தாதரவு முயற்சிகளில் இனிவரும் காலங்களில் தேவையாக உள்ளது, அத்துடன் மோடி அவர்களின் கொள்கைப்பிடிக்குள் இடம் பெற வேண்டுமாயின அதிமுக அரசுடன் சேர்ந்து செயலாற்ற வேண்டிய தேவை ஈழதமிழ் மக்களுக்கும் உள்ளது. வலிமை கொண்ட அரசுடன் தோழமை கொண்டு செயலாற்வது தேவைகளை அடைந்து கொள்ள சிறந்த யுக்தியாக கருதப்படலாம். தொடர்ந்து சிறீ லங்கா நகர்வுகள் குறித்து பார்க்கலாம்.

    முன்னைய பதிவுகள்



    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 04 Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top