அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 03 - TK Copy அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 03 - TK Copy

  • Latest News

    அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 03

    இந்தியாவை துரிதமாக வளர்ந்து வரும் வல்லரசாக
    மேலை நாடுகள் பார்ப்பதை இந்திய கொள்கை பகுப்பாளர்கள் விரும்பவில்லை. இது இந்தியாவுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க கூடியதாக அவர்கள் பார்க்கின்றனர். 'புதினப்பலகை'க்காக *லோகன் பரமசாமி. கடந்த கட்டுரைகளின் தொடர்ச்சியாக மேலைத்தேய நாடுகளின் இந்தியா மீதான மறைமுக தலையீட்டையும் இதிலே தமிழர்களின் நிலையையும் புரிந்து கொள்வது முக்கியமானதாகப்படுகிறது. நடந்து கொண்டிருக்கும் இந்தியத்தேர்தல் உபகண்டத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தலாக அமைந்திருப்பதாக பல்வேறு ஆய்வாளர்களாலும் கணிக்கப்படுகிறது.

    மேலை நாட்டு சிந்தனை அமைப்புகள் தமது கடந்த கால நிகழ்கால இந்திய உறவு நிலைகளை மீழ ஐந்தொகை போட்டு பார்க்கும் காலமாக இன்றைய காலப்பகுதிகள் அமைந்து வருகின்றன. ஆனால் இந்தியாவை துரிதமாக வளர்ந்து வரும் வல்லரசாக மேலை நாடுகள் பார்ப்பதை இந்திய கொள்கை பகுப்பாளர்கள் விரும்பவில்லை. இது இந்தியாவுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க கூடியதாக அவர்கள் பார்க்கின்றனர். அதே வேளை சமகால பொருளாதார முதலீட்டு முக்கியத்துவமும், மாநில அளவிலான தேசிய இனங்களின் அரசியல் எழுச்சியும் புதுடில்லி மத்தியஅரசின் அதிகாரத்தில் நம்பிக்கை வலுவை குறைந்து விட்டது. உலக நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட நேரடி தொடர்பாக மாநிலங்களின் தலைமைகளை அணுகுவது இந்திய அரசியல் ஒருமைப்பாட்டை சிறிது சிறிதாக வலு குறைப்பதாக பார்க்கப்படுகிறது. 

    பொருளாதார சுதந்திரம் பலமாக பெற்ற மாநில அரசுகளின் தலையீடு வெளியுறவு கொள்கை உட்பட பல்வேறு இடங்களில் பாய்வதாக கருதப்படுகிறது. மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி, நடைமுறை அரசியல் நிறைவேற்று அதிகார கட்டமைப்பை கேள்விக்கு உள்ளாக்குவதாக மத்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திகத்தலைப்பட்டு உள்ளனர். இந்து அடிப்படைவாதம் இன்று அனைத்துலக விவாதப் பொருளாகி உள்ளது. இந்துக்கள் மத்தியிலேயே அடிப்படைவாத பேச்சு ஒரு பிளவு படுத்தும் காரணியாக மட்டுமல்லாது பிராந்திய மட்டத்திலும் விளைவுகளை உருவாக்க வல்லது. இதனால் நடந்து கொண்டிருக்கம் தேர்தல் தெற்காசிய அரசியல் போக்கில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தகூடிய அளவு தலைமைத்துவ மாற்றங்களும் அதற்கு ஏற்றாற் போல் கொள்கை மாற்றங்களும் பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது. 

    பெருமளவில் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதில் மேலைத்தேய முதலீட்டாளர்கள் மிக ஆர்வமாக உள்ளனர். உலகிலேயே மிகப்பெரிய நுகர்வோர் சந்தைகளை தமதாக கொண்ட பிரித்தானிய நிறுவனமான Tesco அமெரிக்க நிறவனமான Wal-mart ஆகிய நிறுவனங்கள் இந்திய நுகர்வோர் வர்த்தகத்தினில் நுளைவதற்கு பெரும் ஆதங்கம் கொண்டுள்ளன. அது மடடுமல்லாது இந்தியா மிகக்குறைந்த செலவிலான உற்பத்தி சந்தை வாய்புகளை கொண்டுள்ளது. உற்பத்தி சந்தையிலே வெளிநாட்டு நேரடி முதலீடுகளை உருவாக்குவதிலும் இந்தியாவை உலக போட்டி நிலையில் வைத்திருப்பதிலும் டெல்லியிலே காங்கிரஸ் அரசாங்கம் பல்வேற ஆர்வங்களை கொண்டிருந்தாலும் நடை முறை அளவிலே பெரும் சிக்கல்கொண்ட நிர்வாக சம்பிரதாயங்களை கொண்டுள்ளதாக முதலீட்டாளர்களின் குறை கூறிவருகின்றனர். இதனால் நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு சம்பிரதாய தடைகளையம் நீக்கும்படி மேலைத்தேய நிறுவனங்கள் ஊடாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகிறது. 

    1990 களில் கொண்டு வரப்பட்ட வர்த்தக தாராளமயமாக்கல் இந்திய பொருளாதாரத்தில் 40 சதவிகிதம் வேகப்படுத்தப்பட்ட நிலையை உருவாக்கியது. ஆகவே இந்திய பொருளாதார வளநிலையை சீனாவுக்கு சமாக கொண்டு வர வேண்டுமாயின் மேலும் தாராளமயமாக்கல் தேவையாக உள்ளது என்பது முதலீடாளர்களின் கருத்தாக படுகிறது. ஆனால் இந்த ஒப்பிடும் போக்கு இந்து சமுத்திர பிராந்திய ஆய்வாளர்களின் பார்வையில் அமெரிக்காவை இந்திய உதவியுடன் சீனாவுடன் சமநிலைப்படுத்தல் என்ற கோணத்திலேயே அணுகப்படுவதாக தெரிகிறது.. சீன பொருளாதார வளர்ச்சியை காரணம் காட்டி அவசர அவசரமாக துரித வளர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு அனைத்துலக பொறுப்புகளை கொண்ட இந்தியாவை உருவாக்குவதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பெரிதாக விரும்பவில்லை என்றே கூறலாம். 

    அதே நேரம் மறுபுறத்தில் இந்தியா ஒரு நாடாளுமண்ற சனநாயக நாடாக இருந்த போதிலும் இந்திய பொருளாதார, அரசியல் கொள்கைகள் டெல்லி அரச அலுவலர்கள் சிலரின் வசதிக்கு தகுந்த வகையிலும், அரசியல் தலைவர்களின ஆதாயங்களின் போக்கிற்கு ஏற்பவும், ஊழல் வருமான வசதிக்கு தகுந்த வகையிலும் தான் வகுக்கப்படுகிறது என்பது இன்னுமோர் உண்மை. மாற்றத்தை எதிர்பார்த்து நடந்து கொண்டிருக்கும் தேர்தலில் வெற்றி பெறும் வருங்கால புதுடெல்லி நிர்வாகம், நேரடி முதலீட்டை இலகுவாக நடைமுறை படுத்தும் என்ற வகையில் தான் மேலைநாடுகளில் பொருளியல் பத்திரிகைகளின் கண்ணோட்டங்கள் எதிர்பார்கின்றன. ஆகவே வரவிருக்கும் அரசியல் மாற்றம் இந்தியாவை சிதைக்க வல்லது என ஒருசாராரும் இந்தியாவை வளர்க்க வல்லது என இன்னும் ஒரு தரப்பினரும் ஆய்வுகளில் விவாதிக்கின்றனர். 

    அதீத பொருளாதார முன்னேற்றங்களைப் போலவே இந்திய மத்திய மாநில அரசியல் நிலைமைகளும் கடந்த தேர்தல் கள நிலையிலிருந்து மாறுபட்டு காணப்படுகிறது. காங்கிரஸ் அரசாங்கம் உள்நாட்டிலே ஊழல் அரசாக மாற்றம் பெற்று விட்டதாக ஏறத்தாள அனைத்து ஊடகங்களும் நேரடியாகவோ மறைமுகமாவோ கூறி வருகின்றன. மாநில அரசாங்கங்களின் பலம் தத்தமது மாநிலங்களின் உள்ளுர் நிலைமைக்கு ஏற்ப புது டில்லி நிர்வாகத்திற்கு கட்டுப்படாத நிலையை எட்டி விட்டுள்ளது. - இதர மாநிலங்கள் குறித்து அவ்வப்போது கருத்தில் கொள்ளும் அதேவேளை தமிழ்நாட்டை முதன்மையாக எடுத்து கொள்வோம்.- தமிழ் நாட்டை பொறுத்தவரையில் காங்கிரஸ் அரசாங்கம் பல பத்தாண்டுகளாக சிறீலங்கா அரசாங்கங்களுடன் இணைந்து தமிழினத்திற்கு துரோகமிழைத்து விட்டது என்பது தான் மக்களின் எண்ணம் என்பதை திட்டவட்டமாக அனைத்து ஊடகங்களும் கூறுகின்றன. 

    இம்முறை தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட தமிழ் நாட்டின் பிரதான கட்சிகளான ஆளும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் தத்தமது அறிக்கைகளில் ஈழத்தமிழர்களின் கொள்கை குறித்த மத்திய அரசின் கொள்கைகளில் அதிருப்தி கொண்டுள்ளதான நிலையை திட்டவட்டமாக வெளிக்காட்ட வேண்டிய தன்மை உருவாகி இருக்கிறது. இதனால் காங்கிரசுடன் கூட்டு வைத்து கொள்ளவும் எந்த தமிழ்நாட்டு கட்சிகளும் முன்வரவில்லை. எதிரும் புதிருமாக இருக்ககூடிய பிரதான கட்சிகள் ஈழத்தமிழர்கள் குறித்த விடயத்தை முக்கியமான அம்சமாக கருதுகின்றன. இதனை சனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப பார்ப்போமானால் நாடாளுமன்ற சனநாயக நாடு ஒன்றில் வாக்காளர்களின் விருப்பத்தினையே அரசியல்வாதிகள் பிரதிபலிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். இதற்கேற்ப, தமிழ்நாட்டிலே இடம்பெற்ற ஒவ்வொரு அரசியல் பபை்புரை கூட்டத்திலும் ஈழத்தமிழர்கள் குறித்த தமது கரிசனையை வெளிப்படுத்தும் தன்மையை காண கூடியதாக உள்ளது. 

    தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் விவகாரம் கூடிய ஆளுமை பெற்று வளர்ந்த வருவதை எடுத்து காட்டுவதாக உள்ளது. வெறும் போராட்டங்களாயும் மேடை பேச்சு வார்த்தை சாலங்களாயும் இருந்த வந்த ஈழத்தமிழர் விவகாரம் இந்திய கொள்கை மாற்றங்களின் தேவையை மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் வளர்ந்திருப்பது புதிய மாற்றம் தான். ஆனால் மேலாதிக்க கர்வமும் சிந்தனை மாற்றங்களிற்கு இடமளிக்காத போக்கும் கொண்ட அதிகார வர்க்கதனிமங்கள் நிலைமையை திசை மாற்றி விட முயல்வது கூட வெளிகொண்டு வரபட்டுள்ளது. இதற்கு ஏற்ப சமபந்தப்பட்ட பல்வேறு விவாதங்களை திசை மாற்ற காரணிகளாக பயன் படுத்த முயலப்பட்டுள்ளது. இவற்றில் சில ஊடகங்கள் ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட அமெரிக்க தீர்மானத்தை மையமாக கொண்டு அதிலே இறுதியாக இந்தியா வாக்களிக்காத நிலையை மையமாக வைத்து காட்ட முனைகின்றன. சில ஊடகங்கள் சிறீலங்கா இந்திய தேசியபாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலைக்கு போவதை தடுத்து நிறுத்த வேண்டியநிலையை மையமாக வைக்க முனைகின்றன. 

    மேலும் சில 13வது திருத்தசட்டத்தை சிறீலங்கா அரசு வலு விழக்க செய்வது குறித்த விவாதங்களை மையப்பொருளாக வைக்கின்றன. சில ஊடகங்கள் அரசியல் வாதிகளின் சட்ட முறை சாத்தியப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவெற்று வார்த்தைகளை காட்டி நிற்கின்றன. இந்திய அரசியலில் தற்போதய நிலையில் தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களும் அபிலாசைகளும், வாக்குகளை பெறுவதிலேயும் பதவிகளை பெறுவதிலேயும் குறியாக கொண்ட அரசியல்வாதிகளின் எண்ணங்களும் அபிலாசைகளுக்கும இருவேறு இலக்குகளாகவே தெரிகிறன. இது, தமிழ்நாட்டிலே மக்கள் எதை வேண்டிநிற்கின்றார்கள் என்பதையும் தமிழ்நாட்டு மக்களிடம் அரசியல்வாதிகள் எதை வேண்டி நிற்கிறார்கள் என்பதையும் பார்க்கும் பொழுது புலப்படும். சனநாயக அரசியல் எனும் பொழுது தனிப்பட்ட நலன்களும் கடமைப்பாடுமே அடிப்படைகளாக கருதப்படுகிறது. 

    வாக்காளர்களின் தேவைக்கு ஏற்ப கடமைப்பாட்டுடன் செயலாற்றாத எந்த அரசியல்வாதியும் தனிப்பட்ட பதவிகளை தக்கவைத்து கொள்ள முடியாது. இதற்கு காங்கிரஸ் அரசாங்கம் நல்ல உதாரணமாக உள்ளது. தமிழ்நாடு இரண்டாயிரத்து பதினாறாம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. தேசிய கட்சிகள் என்று கூறப்படும் காங்கிரசும், பாரதீய சனதாகட்சியும் பிராந்திய வாக்காளர்களால் புறம் தள்ளப்பட்ட நிலையில் மாநிலகட்சிகள் மட்டுமே தற்போது போட்டியில் உள்ளன. 

    ஆக மாநில கட்சிகள் மத்தியிலே நாடாளுமன்றத்திலே தமது வாக்காளர்களின் எண்ணங்களை பிரதிபலிக்காவிட்டால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அடிபட நேரிடலாம். அதேவேளை மிகவும் சிக்கல் மிகுந்த எதிரெதிரான ஆதிக்கம் செலுத்தும் காரணிகளை கொண்ட இந்திய வெளியுறவு கொள்கையும், மேலைத்தேய தலையீடுகளும் இதனூடாக ஈழதமிழர்களது போராட்டமும், இவற்றை தொடர்ந்து வரும் கட்டுரைகளில் காணலாம்.



    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: அமெரிக்கா - இந்தியா - ஈழத்தமிழர்களின் அரசியல் : 03 Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top