பேராசை காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தவணைக்காக தேர்தலில் போட்டியிடுகின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்களக் கிராமங்களில் ஓர் பழமொழி சொல்லப்படும்.மூன்று வேளை சாப்பிடுவது தொடர்பில் இந்த பழமொழி சொல்லப்படும். முதலாம் தடவை பசிக்காகவும், இரண்டாம் தடவை ஆசைக்காகவும், மூன்றாம் தடவை பேராசைக்காகவும் உணவு உட்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் இரண்டு தடவைகள் ஆட்சி செய்து விலகிக்கொண்டனர்.ஏன் அவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஆட்சிப் பொறுப்பை விட்டு விலக முடியவில்லை.
17ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்து ஏன் 18ம் திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி அமுல் செய்தார்.ஏனெனில், பதவி மீது அவருக்கு காணப்படும் அதீத பேராசையே இவற்றுக்கான காரணங்களாகும்.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை உலகின் எல்லா நாடுகளிலும் இரண்டு தவணைகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது.
முதலாம் தவணை ஆட்சியின் பின்னர் மக்கள் விரும்பினால் இரண்டாம் தவணை ஆட்சி வகிக்கலாம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.