அரச புலனாய்வு சேவை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள வாராந்த அறிக்கையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 54 சத வீத ஆதரவுடன் முன்னணியில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியிடம் நேற்று வழங்கப்பட்ட இந்த அறிக்கையின் பிரதியொன்று பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.எனினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 56 வீத ஆதரவுடன் முன்னணியில் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் தென் மாகாணங்களில் ஜனாதிபதிக்கு இருந்த 55 சதவீத ஆதரவு 51 சத வீதமாக குறைந்துள்ளது.அத்துடன் வடமத்திய, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் ஜனாதிபதிக்கான ஆதரவு 45 முதல் 50 சத வீதம் குறைந்துள்ளதாகவும் புலனாய்வு சேவையின் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஜனாதிபதிக்கான ஆதரவு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 46 சத வீதமாகவும் நுவரெலியா மாவட்டத்தில் 48 சத வீதமாகவும் ஜனாதிபதிக்கான ஆதரவு குறைந்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.