மனிதன் ஒருவன் அச்சத்துடனும் முதுகெலும்பில்லாமலும் வாழ்வதை விட மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்க வேண்டும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வாரியபொல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளதால் அரசாங்கம் தேர்தல் சட்டங்களை மீறி வருகிறது. நாங்கள் ஆட்சியமைக்கும் புதிய அரசாங்கத்தில் நாட்டுக்கு தேவையான புதிய மாற்றங்களை கொண்டு வருவோம்.
வறுமையின்றிய புதிய பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் என்பவற்றை உறுதிப்படுத்தவும் சட்டத்தின் ஆட்சியையும் மக்களின் சுயாதீபத்திய பாதுகாக்கவும் எனது தலைமையிலான பொது கூட்டணி துரித நடவடிக்கை எடுக்கும்.ஆட்சிக்கு வந்த பின்னர் சர்வக்கட்சி அரசாங்கத்தின் கீழ் நாட்டின் ஆட்சி முன்னெடுக்கப்படும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.