காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க மற்றுமொரு வெளிநாட்டு நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பானை சேர்ந்த விசேட நிபுணரான மோதோ நபூச் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜூலை மாதம் 5 வெளிநாட்டவர்களை நிபுணர்கள் குழுவை நியமித்தார்.
ஆலோசனை குழுவின் தலைவராக சேர் டெஸ்மன்ட் டி சில்வா நியமிக்கப்பட்டதுடன் சேர் ஜெப்றி நீஸ், பேராசிரியர் டேவிட் க்குரென், அவுதாஸ் கவ்சால், அஹமர் பிலால்சூபி ஆகியோர் அதில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த நிலையில், ஜப்பான் நிபுணர் ஒருவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதால், ஆலோசனை குழுவின் அங்கத்தினர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.