தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்படவில்லை என்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரதானமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அகற்றும் திட்டமே உள்வாங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது 100 நாள் வேலைத்திட்டத்தின் பின்னர் ஏற்படுத்தப்படும் புதிய அரசாங்கத்தின் திட்டத்துக்குள்ளேயே தமிழர் பிரச்சினை குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக வரையப்பட்;டுள்ள பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை எதிர்ப்பார்க்க முடியாது என்று ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.