வெகு­மதி அர­சியல் -அரசியல் தீப்பொறி -செ.சிறிதரன் - TK Copy வெகு­மதி அர­சியல் -அரசியல் தீப்பொறி -செ.சிறிதரன் - TK Copy

  • Latest News

    வெகு­மதி அர­சியல் -அரசியல் தீப்பொறி -செ.சிறிதரன்


    மூன்­றா­வது தட­வை­யா­கவும் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்து,
    ஆட்சி அதி­கா­ரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்­ப­தற்­கான ஆணையைக் கோரு­வ­தற்­கா­கவே, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஏழா­வது ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­து­வ­தற்­கான பிர­க­ட­னத்தை வெளி­யிட்­டி­ருந்தார்.

    அவ­ரு­டைய இந்த அர­சியல் நகர்­வா­னது, அவ­ருக்கு எதி­ரான ஓர் அர­சியல் பூகம்ப அலை­யையே நாட்டில் ஏற்­ப­டுத்­தி­விட்­டி­ருக்­கின்­றது. அது மட்­டு­மல்­லாமல், பல அர­சி­யல்­வா­தி­களின் முக­மூ­டி­களைக் கிழித்து, அவர்­களின் உண்­மை­யான தோற்­றத்தை வெளிப்­ப­டுத்­தவும் செய்­தி­ருக்­கின்­றது.

    சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரா­கிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ வுடன் அந்தக் கட்­சியின் செய­லா­ள­ராகச் செயற்­பட்டு வந்த அமைச்சர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அதி­ர­டி­யாக அவ­ரி­ட­மி­ருந்து விலகி, எதி­ர­ணியில் இணைந்­தது மட்­டு­மல்­லாமல் இந்தத் தேர்­தலில் அவ­ருக்கு எதி­ராக எதி­ர­ணியின் பொது வேட்­பா­ள­ரா­கவும் கள­மி­றங்­கி­யி­ருக்­கின்றார்.


    அவர் கட்சி மாறிய உட­னேயே சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­ லா­ள­ராக வேறு ஒரு­வரை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ நிய­மித்­துள்ள போதி லும், அந்தக் கட்­சியின் பொதுச் செய­லா­ள­ராக தாமே இன்னும் செயற்­பட்டு வரு­வ­தாக மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

    மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கொண்ட கட்சித் தாவலைத் தொடர்ந்து, இதனை எழு­தும்­வேளை வரையில் அரச தரப்பில் இருந்து 14 பேர் எதி­ர­ணியில் இணைந்­தி­ருக்­கின்­றார்கள். மேலும் பலர் அர­சாங்­கத்தில் இருந்து எதி­ர­ணிக்கு கட்சி மாறத் தயா­ராக இருப்­ப­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

    இதன் மூலம் ஆட்­சியில் உள்ள ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மையில் உள்ள சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியை முழு­மை­யாக அவ­ரி­ட­மி­ருந்து பறித்­தெ­டுக்கப் போவ­தாக, எதி­ர­ணியில் இணைந்­துள்ள மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருக்­கின்றார்.

    வெல்ல முடி­யாத யுத்தம் என்று வர்­ணிக்­கப்­பட்­டி­ருந்த விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தில் வெற்­றி­பெற்று வர­லாற்று சாத­னையைப் படைத்­தி­ருக்­கின்ற போதிலும், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவினால், நாட்டின் அனைத்து இன மக்­க­ளி­னதும் மனங்­களை வென்ற ஒரு தேசிய தலை­வ­ராகப் பரி­ண­மிக்க முடி­ய­வில்லை.

    மாறாக, குடும்ப ஆட்­சியைத் தக்க வைப்­ப­தற்­காக ஒரு சுய­நல அர­சியல் போக்கைக் கடைப்­பி­டிப்­ப­வ­ராக, ஊழல் நிறைந்­ததோர் ஆட்­சிக்குத் தலைமை தாங்­கு­ப­வ­ராக, இந்த நாட்டின் முக்­கிய பிரச்­சி­னை­யா­கிய தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணத் தவ­றிய ஒரு­வ­ராக, இரா­ணுவ ஆட்­சியை நோக்­கிய ஒரு நகர்வை மேற்­கொண்­டி­ருப்­ப­வ­ரா­கவே அவர் நோக்­கப்­ப­டு­கின்றார்.

    இத்­த­கை­ய­தொரு பின்­ன­ணி­யி­லேயே, மைத்­தி­ரி­பால சிறி­சேன என்­றதோர் பல­மிக்க அர­சி­யல்­வா­தியின் கட்சித் தாவலும், அதனைத் தொடர்ந்து அர­சாங்கம் ஆட்டம் காணு­கின்ற நிலை­மையும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. மோச­மான ஓர் ஆட்­சியில் அல்­லது மோச­மான நிலை­மை­களை நோக்கிச் செல்­கின்ற ஓர் ஆட்­சியில் மாற்­றத்­திற்­கான அர­சியல் சுழல் ஒன்று மையம் கொண்டு. பேர­லை­யாக ஆர்ப்­ப­ரித்து எழும் போது, கட்சித் தாவல்கள் என்ற மாற்­றங்கள் நிகழ்­வதை இயல்­பான ஒரு நட­வ­டிக்­கை­யாக ஏற்­றுக்­கொள்­ளலாம்.

    ஊரோடு ஒத்து ஓடு என்­ப­தற்கு அமை­வான செயற்­பா­டாக அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால், அர­சியல் மாற்றம் என்ற பேரலை கார­ண­மாக, எதி­ராக சரிந்து செல்லும் வகையில் தோற்றம் காட்­டு­கின்ற தரப்பை நோக்கி எதி­ர­ணி­களில் இருந்து கட்சி தாவு­கின்ற அர­சியல் காட்­சிகள் அரங்­கேறிக் கொண்­டி­ருப்­ப­தையும் இப்­போது காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

    வெகு­மதி அர­சியல் 

    யுத்த வெற்றி என்ற சாத­னையை நிலை­நாட்­டி­யுள்ள ஜனா­தி­பதி மஹிந்த ராஜ பக் ஷ அபி­வி­ருத்திப் பாதையில் நாட்டை வழி­ந­டத்தி, ஆசி­யாவின் அதி­ச­ய­மாக இலங்­கையை மாற்றப் போவ­தாக சூளு­ரைத்து நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்த போதிலும், ஆட்டம் கண்­டுள்ள அவர் தன்­னு­டைய ஆட்­சியை ஸ்திரப்­ப­டுத்­து­வ­தற்­காக, வெகு­ம­தி­ய­ளிக்கும் அர­சியல் போக்கைக் கடைப்­பி­டித்துச் செற்­பட்டு வரு­கின்றார் என்று பலரும் சுட்­டிக்­காட்­டு­கின்­றார்கள்.

    ஜனா­தி­பதி பத­வியின் இரண்­டா­வது தவணை முடி­வ­தற்கு இரண்டு வரு­டங்கள் இருக்கும் நிலையில் மூன்­றா­வது தவ­ணை­யிலும் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­காக நடத்­தப்­ப­ட­வுள்ள ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்­னோ­டி­யாக நாட்டு மக்­க­ளுக்கு வெகு­ம­தி­களை வழங்­கு­வ­தற்­கா­கவே 2014 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம், திட்­ட­மிட்ட வகையில் வகுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்று பொரு­ளியல் நிபு­ணர்கள் கணித்­தி­ருக்­கின்­றார்கள்.

    வழ­மை­யான வரவு செலவுத் திட்­டத்­தி­லும்­பார்க்க. இந்த வரவு செலவுத் திட்­டத்தில் விசேட சலுகைகள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான திகதி குறிக்­கப்­பட்டு, அதற்கு வச­தி­யாக நவம்பர் மாதம் வழ­மை­யாகக் கொண்டு வரப்­ப­டு­கின்ற வரவு செலவுத் திட்டம் ஒரு மாதம் முன்­ன­தாக ஒக்­டோபர் மாதத்­தி­லேயே பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

    ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான அதி­கா­ர­பூர்வ அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டதன் பின்னர், எரி­பொ­ருட்­களின் விலைகள் குறைக்­கப்­பட்­டன. சமையல் காஸின் விலை குறைக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்­னோ­டி­யாக அரச ஊழி­யர்­க­ளுக்கு இரண்­டரை லட்சம் ரூபா பெறு­ம­தி­யான மோட்டார் சைக்­கிள்கள், 50 ஆயிரம் ரூபா­வுக்கு ஜனா­தி­ப­தியின் தலை­மையில் பகி­ரங்­க­மான அர­சியல் நிகழ்­வாக விற்­பனை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. 

    அத்­துடன் நில்­லாமல், இந்த சலுகை விலை­யி­லான மோட்டார் சைக்கிள் பொலி­சா­ருக்கும் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதி தேர்­தலை இலக்கு வைத்தே, வட­ப­கு­திக்­கான ரயில் சேவையை யாழ்ப்­பாணம் வரையில் நீடித்த நிகழ்வை, அர­சியல் வர்ண ஜாலங்கள் நிறைந்த நிகழ்­வாக அரச தரப்­பினர் நடத்­தி­யி­ருந்­தனர்.

    யுத்தம் முடி­வ­டைந்து ஐந்­தரை வரு­டங்­களின் பினனர், வட­ப­கு­திக்­கான ரயில் சேவையை யாழ்ப்­பாணம் வரையில் நீடித்­த­போது, அது பெரி­யதோர் அர­சியல் சாத­னை­யாகப் படம் காட்­டப்­பட்­டி­ருந்­தது. யுத்தம் முடிந்­த­வுடன் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களை மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பு­வதும், யுத்­தத்­தினால் சீர­ழிந்­து­போன அரச சேவை­களை, பொது மக்­க­ளுக்­கான சேவை­களை மீண்டும் சீராக்­கு­வ­தென்­பது ஓர் அத்­தி­யா­வ­சிய செயற்­பா­டாகும். சாதா­ர­ண­மாக சிந்­திப்­ப­வர்­க­ளுக்கு இதில் சாத­னை­யென்று வர்­ணித்து பெருமை பேசு­வ­தற்கு எது­வுமே இருப்­ப­தாகத் தோன்ற முடி­யாது.

    ஆனால், சாதா­ர­ண­மாக நடத்­தப்­பட்­டி­ருக்க வேண்­டிய இந்த நிகழ்வு ஜனா­தி­பதி தேர்­தலை முன்­னிட்டு கோலா­க­ல­மான அர­சியல் பிர­சார நிகழ்­வா­கவே நடத்­தப்­பட்­டி­ருந்­தது என்று அர­சியல் அவ­தா­னிகள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தார்கள். அத்­துடன், விடு­த­லைப்­பு­லி­களின் ஆட்சி நிர்­வாகக் கட்­ட­மைப்பின் ஓர் அம்­ச­மாகச் செயற்­பட்­டி­ருந்த, அவர்­க­ளு­டைய வங்கிச் சேவை – வைப்­ப­கத்தில் வன்­னிப்­பி­ர­தேச மக்­க­ளினால் அடைவு வைக்­கப்­பட்­டி­ருந்த தங்க நகை­களை அவற்றின் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வழங்கும் நட­வ­டிக்­கையும் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்­ன­ரான வெகு­மதி நிகழ்­வாக ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

    வட­ப­கு­திக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த ஜனா­தி­பதி கிளி­நொச்­சியில் வைத்து தெரிவு செய்­யப்­பட்ட சில­ருக்கு இந்த நகை­களை வழங்­கி­யி­ருந்தார். இந்தப் பின்­ன­ணியில், ஜனா­தி­பதி தேர்தல் ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி நடை­பெறும் என்றும் வேட்பு மனுக்கள் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என்று தேர்தல் திணைக்­களம் அறி­வித்­தி­ருந்த நிலையில் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி 1960 பேரை, அலரி மாளி­கைக்கு அழைத்து, விடு­த­லைப்­பு­லி­களின் வைப்­ப­கத்தில் அடகு வைக்­கப்­பட்­டி­ருந்த நகை­களை ஜனா­தி­பதி வழங்­கி­யி­ருந்தார்.

    பொது மக்­க­ளி­ட­மி­ருந்து அடகு பிடிக் கப்­பட்­டி­ருந்த தங்க நகை­களை மோச­மான யுத்தச் சூழ­லிலும், விடு­த­லைப்­பு­லி கள் பாது­காப்­பாகத் தம்­முடன் முள்­ளி­வாய்க்கால் வரையில் கொண்டு சென்­றி­ ருந்­தனர். யுத்­தத்தில் விடு­த­லைப்­பு­லி­களை வெற்­றி­கொண்ட இரா­ணு­வத்­தினர் பெரு­ ம­ள­வான இந்தத் தங்க நகை­களைக் கைப் பற்­றி­யி­ருந்­தனர்.

    அந்த நகை­களை யுத்தம் முடி­வ­டைந்து ஐந்­தரை வரு­டங்கள், காலம் கடந்த பின்னர், மூன்றாம் முறை­யாக மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­பதி பத­விக்கு தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற சந்­தர்ப் பத்தில் அவற்றின் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு தேர்தல் வெகு­ம­தி­யாகக் கைய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

    ஜனா­தி­பதி தேர்­தலை நோக்­கிய முன் ஆயத்­தங்­க­ளா­கவே, யாழ்ப்­பா­ணத்­திற்­கான ரயில் சேவை நீடிப்பு, சலுகை விலை மோட்டார் சைக்கிள் விற்­பனை, 20 ஆயிரம் பேருக்­கான காணி உறுதி கைய­ளிப்பு, விடு­தலைப் புலி­களின் அடகு நகை கைய­ளிப்பு, காலத்­திற்கு முந்­திய வழ­மைக்கு மாறாக சலு­கை­களை உள்­ள­டக்­கிய வரவு செலவுத் திட்டம், பொருட்­களின் விலை குறைப்பு போன்ற வெகு­மதி நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன என்­பதும் அர­சியல் அவ­தா­னி­களின் கணிப்­பாகும்.

    இந்த வெகு­மதி நட­வ­டிக்­கைகள் அத்­துடன் நின்­று­வி­ட­வில்லை. அதி­ர­டி­யாக அரச தரப்பில் இருந்து எதி­ர­ணிக்குத் தாவ முற்­பட்­டி­ருந்த அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கும் வெகு­ம­திகள் வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் பர­வ­லாகத் தக­வல்கள் கசிந்­தி­ருக்­கின்­றன.

    அத்­துடன் எதி­ர­ணியில் உள்­ள­வர்­களை அரச தரப்பில் சேர்த்துக் கொள்­வ­தற்கும், இந்த வெகு­ம­திகள் அரச தரப்­பி­னரால் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.
    சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லா­ளரை முன்னாள் ஜனா­தி­ப­தியும், அந்தக் கட்­சியின் தலை­வி­யு­மா­கிய சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா, ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர், மிகவும் இர­க­சி­ய­மான முறையில் அரச தரப்பில் இருந்து எதி­ர­ணிக்கு மாற்­றி­யி­ருந்­தனர் அதற்கு எதிர் வினை­யாக ஐக்­கிய தேசிய கட்­சியின் செய­லாளர் திஸ்ஸ அத்­த­நா­யக்­காவை அந்தக் கட்­சியில் இருந்து அரச தரப்­பிற்குத் தாவச் செய்து, அவ­ருக்கு, அர­சாங்­கத்தில் இருந்து விலகிச் சென்ற மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்குப் பதி­லாக சுகா­தார அமைச்­ச­ராகப் பத­வியை, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கண்­டியில் வைத்து, வெகு­ம­தி­யாக வழங்கி கௌர­வித்­தி­ருக்­கின்றார்.

    பதவி மட்­டு­மல்­லாமல், பல­ருக்கும் பெருந்­தொ­கை­யான பணமும் இவ்­வாறு வெகு­ம­தி­யாக வழங்­கப்­ப­டு­வ­தாகத் தக­வல்கள் கசிந்­தி­ருக்­கின்­றன. அரச தரப்பின் அர­சியல் பலத்தைத் தக்க வைப்­ப­தற்­காக வெகு­ம­திகள் வழங்­கப்­ப­டு­வதைப் போன்று எதி­ர­ணியைச் சார்ந்­தோரும் செயற்­ப­டு­கின்­றார்­களா என்­பது தெரி­ய­வில்லை. (30 ஆம் பக்கம் பார்க்க) வெகுமதி அரசியல் அது­பற்­றிய தக­வல்கள் எதுவும் இது­வ­ரையில் வெளி­வந்­த­தா­கவும் தெரி­ய­வில்லை.

    எது எப்­ப­டி­யா­யினும், கொள்கை ரீதியில் அல்­லாமல், வெகு­ம­தி­க­ளுக்­கா­கவே தாங்கள் கொண்­டி­ருந்த அர­சியல் கொள்­கை­களைக் கைவிட்டு, தாங்கள் சார்ந்­தி­ருந்த அர­சியல் கட்­சி­களைக் கைவிட்டு கட்சி தாவு­கின்ற அர­சி­யல்­வா­திகள் தொடர்பில் பொது­மக்கள் எதிர்­கா­லத்தில் மிகவும் விழிப்­பாக இருக்க வேண்டும். அது மட்­டு­மல்­லாமல், அர­சியல் செயற்­பாட்­டிற்­காக வெகு­ம­தி­களைப் பயன்­ப­டுத்­து­கின்ற அர­சி­யல்­வா­திகள் குறித்தும் மக்கள் கவ­ன­மாக இருக்க வேண்டும்.

    சுய அர­சியல் இலா­பத்­திற்­காக, வெகு­ம­தி­களைப் பயன்­ப­டுத்­து­கின்ற அர­சி­யல்­வா­திகள் எந்த நேரத்­திலும் தங்­க­ளுக்கு வாக்­க­ளித்த பொது­மக்­க­ளையும் விற்­ப­தற்குத் தயங்க மாட்­டார்கள் என்­ப­தற்கு எந்­த­வித உத்­த­ர­வா­தமும் கிடை­யாது. எதுவும் நடக்­கலாம் மூன்­றா­வது தட­வை­யா­கவும் ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகிக்க வேண்டும் என்ற கோரிக்­கைக்கும், ஜனா­தி­பதி ஆட்சி முறையை 100 நாட்­களில் இல்­லாமல் செய்வோம் என்ற உத்­த­ர­வா­தத்­திற்கும் இடை­யி­லான அர­சியல் மோதலின் போர்க்­க­ளமே ஏழா­வது ஜனா­தி­பதி தேர்­த­லாகும்.

    இந்த மோதலில் ஆட்சி மாற்­றத்தைக் கொண்டு வரு­வ­தற்கு எதி­ர­ணி­யினர் ஒன்­றி­ணைந்­தி­ருக்­கின்­றனர். இந்த ஒன்­றி­ணை­வா­னது, மூன்றாம் முறையும் ஜனா­தி­ப­தி­யாக செயற்­ப­டு­வ­தற்கு நாட்டு மக்­களின் ஆணையைக் கோரி, தேர்தல் களத்தில் இறங்­கி­யுள்ள ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தரப்­பி­னரின் செல்­வாக்கு மிக்க அர­சியல் இருப்பை கேள்­விக்கு உள்­ளாக்­கி­யி­ருப்­ப­தையும் காண முடி­கின்­றது.

    இதன் கார­ண­மா­கவே வெகு­மதி அர­சியல் உத்­தியை அரச தரப்­பினர் இந்தத் தேர்­தலில் பகி­ரங்­க­மா­கவும், தாரா­ள­மா­கவும் பயன்­ப­டுத்த வெளிப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்று அர­சியல் விமர்­ச­கர்கள் கூறு­கின்­றார்கள். முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்த மோச­மான ஒரு யுத்­தத்தை வெற்­றி­கொண்டு, நாட்டு மக்­க­ளுக்கு பயங்­க­ர­வாதப் பிடியில் இருந்து விடு­த­லையைப் பெற்றுத் தந்த வர­லாற்றுப் பெருமை மிக்க வீர­னாகப் பேரி­ன­வா­தி­க­ளாலும், தீவிர பேரின பற்­றா­ளர்­க­ளி­னாலும் கரு­தப்­ப­டு­கின்ற ஒரு­வரின் அர­சியல் இருப்பே கேள்வி குறிக்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றது என்­பது சாதா­ரண விட­ய­மல்ல.

    அது மிகவும் பார­தூ­ர­மான அர­சியல் விட­ய­மாகும். இத்­த­கைய ஓர் இக்­கட்­டான நிலையில் இருந்து தப்பிப் பிழைப்­ப­தற்கும், கடு­மை­யா­னதோர் அர­சியல் போட்­டியில் வெற்­றி­யீட்­டு­வ­தற்கும், அரச தரப்­பினர் தம்­மா­லான அனைத்து முயற்­சி­க­ளையும் மேற்­கொள்­வார்கள் என்­பதில் சந்­தே­க­மில்லை.

    இந்தத் தேர்­தலில் வெற்றி பெற வேண்டும் என்­ப­தற்­கா­கவே பல்­வேறு நட­வ­டிக்­கை­களை, முன்­னேற்­பா­டாக அரச தரப்­பினர் மேற்­கொண்டு வந்­துள்­ளார்கள். எதிர்­பா­ராத வகை­யி­லேயே மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் எதி­ரணி பக்­க­மான தாவலும், அவரே பொது வேட்­பா­ள­ரா­கி­யதும் இடம்­பெற்­றி­ருந்­தன. அது அர­சாங்­கத்­தையே ஆட்டம் காணச் செய்­தி­ருக்­கின்­றது.

    இந்த நிலையில் தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்­காக எத­னையும் செய்­வ­தற்கு அவர்கள் தயங்க மாட்­டார்கள் என்­பதே பொது­வான கணிப்­பாக இருக்­கின்­றது. விடு­தலைப் புலி­களை யுத்­தத்தில் வெற்­றி­கொண்ட பின்­னரும், விடு­த­லைப்­பு­லி­க­ளையே தமது அர­சியல் செயற்­பா­டு­க­ளுக்­கான மையப் பொரு­ளாக, அரச தரப்­பினர் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

    யுத்தம் முடிந்து ஐந்­தரை வரு­டங்­க­ளா­கின்ற நிலை­யிலும் இந்த போக்கில் இருந்து அவர்கள் இன்னும் விடு­ப­ட­வில்லை. விடு­த­லைப்­பு­லி­களின் ஆயுதச் செயற்­பா­டுகள் முடி­வுக்கு வந்து நாட்டில் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டுகள் இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டுள்ள போதிலும், தேசிய பாது­காப்­புக்கு இன்னும் அச்­சு­றுத்தல் இருக்­கின்­றது என்­பது அவர்­க­ளு­டைய அர­சியல் தாரக மந்­தி­ர­மாக இருந்து வரு­கின்­றது.

    தேசிய பாது­காப்­புக்­கா­கவே, யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களில் இன்னும் பெரும் எண்­ணிக்­கையில் இரா­ணு­வத்­தினர் நிறுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றனர். யுத்த மோதல்கள் இடம்­பெற்ற வடக்கு கிழக்குப் பிர­தேங்­கங்­களில் நிறுத்­தப்­பட்­டுள்ள இரா­ணு­வத்­தினர், நிரந்­த­ர­மாக நிலை­கொண்­டி­ருக்­கத்­தக்க வகையில் பரந்த அளவில் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன.

    இரா­ணு­வத்­தி­னரின் தேவைகள், தேசிய பாது­காப்­புடன் இணைக்­கப்­பட்டு, நாட்டின் எல்லா செயற்­பா­டு­க­ளிலும் முதன்­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­துடன், யுத்தம் நடை­பெற்ற பிர­தே­சங்­களில் குறிப்­பாக வடக்கில் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு, சிவில் நிர்­வாகச் செயற்­பா­டு­க­ளிலும் பங்­க­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. சமூக, பொரு­ளா­தார செயற்­பா­டுகள் மட்­டு­மல்­லாமல், அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளி­லும்­கூட இரா­ணு­வத்­தினர் வட­ப­கு­தியில் முழு­மை­யாக ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றனர்.

    சமூக, அர­சியல் நிகழ்­வு­களில் சமூக முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கும், அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும், மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கும் அளிக்­கப்­ப­டு­கின்ற முக்­கி­யத்­துவம் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. சீருடை தரித்த இரா­ணுவ பொலிஸ் அதி­கா­ரிகள், அர­சி­யல்­வா­தி­களைப் போன்று இந்த நிகழ்­வு­களில் மாலையும் கழுத்­து­மாக புன்­னகை தவழும் முகங்­க­ளோடு கலந்து கொள்­வது சாதா­ரண காட்­சி­யா­கி­யி­ருக்­கின்­றது.

    இரா­ணுவம் மற்றும் பொலி­சாரின் பிர­சன்­ன­மின்றி எந்­த­வொரு நிகழ்வும் இடம்­பெறக் கூடாது, அவ்­வாறு நடை­பெ­று­வ­தற்கு அனு­மதி கிடை­யாது என்­பது வடக்கில் கண்­டிப்­பாக கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்ற, எழு­தாத சட்­ட­வி­தி­யாகும். தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்கக் கூடிய செயற்­பா­டுகள் இடம்­பெ­றாமல் தடுப்­ப­தற்­கா­கவும், தேசத்­திற்கு விரோ­த­மா­ன­வர்கள் பொது­மக்கள் மத்­தியில் ஊடு­ருவி செயற்­ப­டாமல் தடுப்­ப­தற்­கா­க­வுமே இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக அரச தரப்பில் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது, அது மட்­டு­மல்­லாமல், தேர்தல் பிரா­சா­ரங்­களில் அரச தரப்­புக்கு ஆத­ர­வாக இரா­ணு­வத்­தினர் ஈடு­ப­டுத்­தப்­பட்ட நட­வ­டிக்­கை­களும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

    வடக்கில் அண்­மையில் நடந்து முடிந்த மாகா­ண­ச­பைக்­கான தேர்தல் பிர­சா­ரத்­தின்­போது, சீருடை தரித்த இரா­ணு­வத்­தினர் பகி­ரங்­க­மா­கவே அரச தரப்பு வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ரவு தேடு­கின்ற நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­ததைச் சுட்­டிக்­காட்டி, இது மோச­மான தேர்தல் விதி மீறல் செய்­பாடு என்று தேர்தல் கண்­கா­ணிப்­பா­ளர்­களும், தேர்தல் கண்­கா­ணிப்பு அமைப்­புக்­களும் குரல் எழுப்­பி­யி­ருந்­தன. ஆயினும் அவர்­க­ளு­டைய ஆட்­சே­ப­ணைகள் எதுவும் தேர்தல் திணைக்­க­ளத்­தி­னாலோ அல்­லது அரச தரப்­பி­ன­ராலோ கவ­னத்தில் எடுத்துக் கொள்­ளப்­ப­டவே இல்லை.

    விடு­த­லைப்­பு­லி­களின் அடைவு நகை­களை ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து நேரில் பெற்றுக் கொள்­வ­தற்­காக அலரி மாளி­கைக்குச் சென்­றி­ருந்­த­வர்­க­ளிடம், இந்த அர­சாங்­கத்தின் பெரு­மைகள் குறித்து பிர­சாரம் செய்­யப்­பட்­டி­ருந்­த­துடன், ஜனா­தி­பதி தேர்­தலில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கே வாக்­க­ளிக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­த­தாக தங்க நகை­களைப் பெற்றுக் கொண்டு திரும்பி வந்­த­வர்கள் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். 

    இந்தச் செயற்­பாடு வேட்பு மனு தாக்கல் செய்­யப்­ப­டு­வ­தற்கு நான்கு தினங்­க­ளுக்கு முன்­ன­தாக இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. இந்த அடைவு நகை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு உரி­ய­வர்­களைத் தெரிவு செய்­ததும், அவர்­களை கொழும்­புக்கு அழைத்துச் சென்று அலரி மாளி­கையில் முன் நிறுத்­தி­யதும் என அனைத்துச் செயற்­பா­டு­க­ளையும் இரா­ணு­வத்­தி­னரே மேற்­கொண்­டி­ருந்­தார்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

    யுத்­த­மோ­தல்­க­ளின்­போது விடு­த­லைப்­பு­லி­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்ட அடைவு நகை­களை இவ்­வாறு இரா­ணு­வத்­தி­னரின் முழு­மை­யான பங்­க­ளிப்பில் - அவர்­களால் வழங்­கப்­பட்­டமை சட்­டத்­திற்கு முர­ணான செய்­ற­பாடு என்று இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்­தினர் சுட்­டிக்­காட்டி கண்­டித்­தி­ருக்­கின்­றனர்.

    இந்த நகைகள் முறைப்­படி நீதி­மன்­றத்தின் ஊடாகவே கையளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள். யுத்தத்தின் பின்னர், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், அவர்களின் புனர்வாழ்வு போன்ற அனைத்துச் செயற்பாடுகளிலும் இரண்டறக் கலக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை, அரசியல் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்ற இந்த ஜனாதிபதி தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவதற்காக அரச தரப்பினர் பயன்படுத்தப்படமாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை.

    தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இராணுவத்தினரையும் முக்கிய கருவியாக அரசு பயன்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், தற்போது நிலவுகின்ற நிலைமைகள், அரசியல் சூழல் என்பவற்றில், தேர்தலின்போது, வன்முறைகள் இடம்பெறுவதற்கும், இராணுவ அடக்குமுறை போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக சர்வதேச நெருக்கடி குழு என்ற அமைப்பு அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.

    பலத்தைப் பயன்படுத்தியோ அல்லது வன்முறைகள் மூலமாகவே ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு நடைபெறும் முயற்சிகள் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்துவதுடன் எதிர்கால ஸ்திரமின்மைக்கும் வித்திடுவதாக அமையும் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் தனது சர்வதேச கடப்பாட்டை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதை நினைவூட்டியுள்ள அந்த அமைப்பு, அதனை நிறைவேற்றத் தவறினால், இராஜதந்திர விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்று சர்வதேச நெருக்கடி குழு எச்சரிக்கை செய்திருக்கின்றது.

    இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் என்பவற்றிற்குப் பொறுப்பு கூறுவதைத் தவிர்த்ததன் காரணமாக ஐ.நா.வின் சர்வதேச விசாரணையொன்றுக்கு முகம் கொடுத்துள்ள அரசாங்கம், பதவி ஆசைக்காக இந்தத் தேர்தலில் ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளை முன்னெடுக்கமாட்டாது என்றும், அவ்வாறு செயற்பட்டால், மேலும் மோசமான சர்வதேச நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிடும் என்பதை அறிந்து வைத்துள்ளது என்றும் சிலர் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள்.

    எது எப்படியானாலும், மூன்றாம் தவணைக்கான ஜனாதிபதி பதவியைக் கோரியுள்ள ஜனாதிபதியின் தேர்தல் செயற்பாடுகளும், ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக முனைந்துள்ள எதிரணியினரின் முயற்சிகளும், முழு நாட்டையும் ஓர் அக்கினிப்பிரவேசத்திற்கு இட்டுச் செல்லாமல் இருக்க வேண்டும்.


    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: வெகு­மதி அர­சியல் -அரசியல் தீப்பொறி -செ.சிறிதரன் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top