பாலஸ்தீன பெண்களை கொடுமைப்படுத்தும் இராணுவம்-காணொளி - TK Copy பாலஸ்தீன பெண்களை கொடுமைப்படுத்தும் இராணுவம்-காணொளி - TK Copy

  • Latest News

    பாலஸ்தீன பெண்களை கொடுமைப்படுத்தும் இராணுவம்-காணொளி


    பாலஸ்தீனிய பொது மக்களின் உயிரிழப்புக்கள்
    அதிகரித்து வரும் நிலையில், உடனடியாக தற்போது காசா பள்ளத்தாக்கில் இடம்பெற்று வரும் மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது.


     

    காசா பள்ளத்தாக்கில் நேற்று இஸ்ரேலிய யுத்த விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் 15 பொது மக்கள் கொல்லப்பட்டனர். இது தவிர, காசா காவல்துறை மா அதிபர் உட்பட ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

     கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் இஸ்ரேலினால் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக குறைந்தது 156 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 77 சத வீதமானவர்கள் பொதுமக்களே என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

    இந்த நிலையில், காசா பள்ளத்தாக்கில் இருந்து ஹமாஸ் போராளிகள் தமது பிரதேசத்தை நோக்கி 90 ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. இது தவிர ரெல் அவிவ் நோக்கியும் மூன்று ரொக்கட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், எகிப்து மற்றும் காசாவிற்கு இடையில் உள்ள ரஃபா என்ற இடத்தில் உள்ள முக்கிய எல்லை கடவை மையத்தை திறந்து விட அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்த பாலஸ்தீனியர்களுக்கான மருத்து சிகிச்சையினை பெறுவதற்காகவே எகிப்து இந்த சலுகையினை வழங்கியுள்ளது.

    முன்னதாக யூனூஸ் நகர சிற்றுண்டிச் சாலையில் உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியினை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒன்பது பேர் இஸ்ரேலிய விமான தாக்குதலில் பலியானதுடன், மேலும் பலர் படுகாயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேலிய தரப்பில் எவரும் பலியானதாக செய்திகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: பாலஸ்தீன பெண்களை கொடுமைப்படுத்தும் இராணுவம்-காணொளி Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top