செந்தமிழன் சீமான் மதுரை காவல்துறையினரால்
கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நாட்களில் நாம் தமிழர் கட்சியினால் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆர்ப்பாட்ட போராட்டங்களில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் தொடர்ந்தும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை சகிக்க முடியாத சக்திகள் இந்த கைதிற்குபின்னால் இருப்பதாக அறிய முடிகின்றது.
நேற்று முன்தினம் மதுரை, மேலூர், சிட்டாம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியில், சீமான் வாகனம் சென்றபோது, சுங்கச்சாவடியில் வரி கேட்டமையால் எம்மண்ணில் நாங்கள் செல்ல உனக்கு ஏன் வரி செலுத்த வேண்டும் என்று சீமானோடு சென்ற தோழர்கள் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
மோதலில் சுங்கச்சாவடி ஊழியர் அமீத் என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை திடீர் என சீமான் வீட்டை காவல்துறை சுற்றி வளைத்தனர் இதனை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் அங்கு திரண்டுகாவல்துறையுடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மதுரை காவல்துறையால் சீமான் கைது செய்யப்பட்டு மதுரைக்கு அழைத்துக்கொண்டு செல்கின்றனர்.