தமிழ் நாட்டு காவல்துறையின் லத்தி அடியை அனுபவித்த நாட்கள் அவை! - TK Copy தமிழ் நாட்டு காவல்துறையின் லத்தி அடியை அனுபவித்த நாட்கள் அவை! - TK Copy

  • Latest News

    தமிழ் நாட்டு காவல்துறையின் லத்தி அடியை அனுபவித்த நாட்கள் அவை!



    அன்று இரவு 12 மணிவரை எனது சட்டையை
    அகற்றிவிட்டு. சுவர் ஓரம் என்னை நிற்க வைத்து பலமுறை லத்தியால் அடித்தார்கள் ...அடித்தபோதெல்லாம் அவர்கள் கேட்ட ஒரே கேள்வி.."

    உண்மையை சொல்லு எதற்கு இங்கே வந்தாய்?" என்பதுதான்..நான் உண்மைதான் சொன்னேன்..கிட்டு அண்ணாவை சந்தித்து ..திலீபன் பற்றிய புத்தகம் எழுத வந்தேன்.. என்று சொல்லி சொல்லி என் வாயே நொந்து விட்டது..

    அட! தமிழ்நாடு காவல் துறையே.!..ஏதோ ஸ்கொட்லாந்து போலீசுக்கு நிகராக நீங்கள் துப்பறிவதாக சொல்லி..பீத்தி கொள்கிறீர்களே..அதன் லட்சணம் இதுதானா?..ஒருவன் தவறு செய்துள்ளானா... இல்லையா?என்பதை..சிறியஅளவில், உளவியல் அறிந்து இருந்தால் கூட போதும் ...கண்டுபிடித்து விடலாம்..

    ஆனால்..இவர்களுக்கு அதெல்லாம் தெரிந்திருந்தால்...எதற்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயருடன் வாழ்கிறார்கள்?.. தமிழ்நாடு காவல் துறையை பத்தி தமிழ்சினிமாவில் சொல்லப்படும் கதைகளை பார்த்து கற்பனை என்று நினைத்த எனக்கு என் கருத்து தவறு என்பதை அவர்கள் நிரூபித்தார்கள்..

    காலையில் நான் கண் விழித்தபோது உடலெல்லாம் தாங்க முடியாத நோவாக இருந்தது ..முதுகு பகுதி எங்கும் இரத்தம் தோய்ந்து காய்ந்து போய் இருந்தது..ஒரு சிறிய அறையொன்றினுள் நான் அடைக்க பட்டிருந்தேன்.. என்பதைவிட ..ஆடு மாடுகளை போல் ..போடப்பட்டிருந்தேன்..என்பதுதான் சரி..ஒரு ஈழ விடுதலை போராளிக்கு தமிழ் நாட்டில் இத்தனை வரவேற்பா? அட

    ஓங்க கொப்பராண!....இவர்கள் பேசுவதும் தமிழ்தானே?...பின் எதற்காக தமிழன் மீது இத்தனை கோபம்? எனக்கு இன்றுவரை அது...புரியவே ..இல்லை..காக்கி சட்டைகளை விடுங்கள்..தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக இருந்த கலைஞரின் ஆட்சியிலா இத்தனை வெறித்தனம்?..

    தமிழ்..தமிழ் ..என்று வாய் கிழிய கத்தும் கலைஞர்..எழுதிய தமிழ் நூல்கள் எல்லாம்..உண்மையான தமிழ் உணர்வோடு எழுதப்பட்டனவா?..இல்லை..புத்தகங்கள் எழுதி புகழ் பெறலாம் என்ற நோக்கத்தினால் எழுதப்பட்டவையா?..,எல்லாமே வெளி வேஷம்தானா?..

    கலைஞரை ஒப்பிடும் போது ஜெயா அம்மா பரவாயில்லை போலிருக்கு..ஏன் தெரியுமா? அவரின் குணமே அதுதானே?..இவர்கள் "படிப்பது..தேவாரம்..இடிப்பது...சிவன் கோயிலா"?:..அட.!அப்பாவி....தமிழ் நாட்டு மக்களே.! என் தொப்புள் கொடி உறவுகளே.!.

    எங்களுக்கு சிங்களவர்களால் வேண்டும் விடுதலை...உங்களுக்கு..இப்படியான சக்கரவர்த்திகளிடம் இருந்து வேண்டும் விடுதலை..அப்போதுதான் தமிழ் இனம் உருப்படும்..என்னினிய தமிழ் மக்களே.. இவர்களிடம் உங்கள் இறையாண்மையை அடகு வைத்து இருக்கிறீர்கள்....

    வாருங்கள் எல்லோருமே ஒன்று சேர்ந்து எமது அடிமை விலங்கை உடைக்கலாம்..தமிழ் இனம் இனியும் தூங்க கூடாது.. ! இது நான் செய்த கற்பனை..இழுப்பாணியும் சப்பாணியும் ஓர் பழங்கால கதையில் வருவார்கள்..

    அப்படித்தான் இருக்கும், எல்லா உதிரிப் பூக்களும்(கட்சிகளும்)ஒன்று சேர்ந்தால் நிச்சயம் குரங்காகத்தான் ஆகும்..அது ஒருவர் இங்கே இழுப்பார் அடுத்தவர் அங்கே இழுப்பார்... அதுதான் தமிழ் நாடு! ..உண்மையான இந்திய சுதந்திரம் என்பது..இப்படியான..போலி.....அரசியல் வாதிகளிடம் இருந்து விடுதலை பெறுவதுதான் என்பது எனக்கு புரிந்தது..

    கலைஞர் அவர்களே.!உங்களை எப்போதுமே நான் மரியாதையாக அழைத்தே பழக்கபட்டவன் நீங்க இந்த வயதிலாவது சில நல்ல செயல்களை செய்யுங்கள். ஈழ தமிழருக்காக..காலம் கடந்து விட்டாலும் கூட அது உங்களுக்காவது ஆத்ம திருப்தியை கொடுக்கட்டும் ..இதை விட்டால் இனிவருமா காலம்.?...

    இது என்பணிவான வேண்டுகோள்...நீங்கள் எழுதிய 'பாயும் புலி பண்டார வன்னியன் என்னும் நூலை எப்போதோ படித்தவன் நான்..ஈழ வரலாறு தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் அது ஒரு உண்மையான வரலாறு ஆக தென்படலாம் ..மகாவம்சம் முதல்..நீலகண்ட சாஷ்திரிவரை ..

    ஆங்கில வரலாற்று ஆசியர்கள் பலரின் நூல்களை முழுமையாக படித்தவர்களிடம்..உங்கள் பண்டார வன்னியனுக்கும்..மர்ம கதை ஆசிரியர் ராஜேஷ்குமாரின் கதைக்கும் என்ன வித்தியாசம்?...என்று கேளுங்கள் சொல்வார்கள்..

    இருந்தாலும் இரண்டு குளிரூட்டும் இயந்திடங்களுக்கு மத்தியில் இரு மனித குளிரூட்டிகளை வைத்துக் கொண்டு நீங்கள் இரண்டு மணித்தியாலம் ஈழத் தமிழருக்காக இருந்த உண்ணா நோன்பை எப்படி மறக்க முடியும்?..சரி உங்கள் பண்டார வன்னியன் கதையில்.. பல இடங்களில் தமிழ் ஈழ எல்லைகள் கூட தப்பாகவே குறிப்பிடபட்டுள்ளதே ..

    இவற்றை இங்கே நான் விரிவாக எழுத முற்பட்டால்.. இந்த கட்டுரையை எழத முற்பட்டதன் நோக்கம் மாறுபடலாம் என்பதால்..இத்தோடு இதை விட்டு விடுகிறேன்..ஆனால்..சில நல்லவர்களும் தமிழ் நாட்டில் இருப்பதால்தான் தமிழ் கொஞ்சமாவது வாழ்கிறது... .

    அடுத்த நாள் என்னை அவர்கள் நீதி மன்றம் கொண்டு சென்றபோது ..என்மீது வழக்கு தொடுத்தவர்கள் மீது நீதிபதி இப்படி பாய்வார் என்று நான் அப்போது எண்ணியே பார்த்து இருக்கவில்லை.."ஏன்யா ..நீயெல்லாம் ஒரு தமிழனா..அங்கே அவர்கள் உயிருக்கு போராடுகிறார்கள்..இங்கே தமிழர்கள் இருக்கிறார்கள் என்று உயிரை காக்க அகதியாய் வந்தால் மாட்டைப்போல் அடிக்கிறீர்களே" என்று கேட்ட (நீதிபதியின்)அவரது வார்த்தைகள் எனது காயத்துக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல் இருந்தது..

    மனிதம் இவ்வுலகில்மரித்து விடவில்லை என்று உணர்ந்தேன்,,..15 நாட்கள் திருச்சி சிறையில் காவலில் இருந்து விட்டு..ஜாமீனில் எனது ஒன்றுவிட்ட சகோதரியின் குடும்பம் இருந்த காரைக்குடியில் சில நாட்கள் இருந்து காயத்தை குணமாக்கிவிட்டு சென்னை போனேன்..

    கிட்டு அண்ணாவை பார்க்க போகிறேன் என்ற மகிழ்ச்சி என் உள்ளம் முழுதும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.. அவரின் கால்கள் சதிகாரர்களால் துண்டிக்க பட்டபோது. அவரை மருத்துவ மனையில் அனுமதித்து ..வேண்டியவைகளை செய்து அவர் ..குணமாகி எழும்பி, ஊன்று கோலுடன் நடக்கும் வரை இருந்த பின்னர் மேல்சிகிச்சைக்காக இந்தியா போனபின்னர்... நான் அவரை முதன் முதலாக இப்போதுதான் பார்க்கபோகிறேன்..

    ஆம்..வீட்டு காவலில் இருந்த அவரை சந்தித்தேன்..கியூ இலாகாவினர் அவரை மிக நன்றாகவே பார்த்து கொண்டார்கள்..என்பதைவிட..அவரின் கட்டுப்பாட்டில்தான் கியூ' இலாகா இருந்தது என்று சொல்வதுதான் பொருத்தம்..கியூ உறுப்பினர்களுக்கு வேண்டிய வசதிகளை அவர் செய்து கொடுத்து இருந்தார்..

    பிரியாணி..போன்ற உணவு.... தினமும் அவர்களுக்கு கிடைத்தது மட்டுமல்ல..வீடியோவில் புது படங்களை கொண்டு வந்து அவருடன் இருந்த போராளிகள் தினமும் பலமுறை .போட்டார்கள்..அங்கே கிட்டண்ணா.. வீட்டு காவலில் இருந்தாரா?..அல்லது அவர்கள் இருந்தார்களா என்பது தெரியவில்லை..

    காமெடி கீமெடி எதுவும் நான் பண்ணலீங்க..உண்மையாத்தான் சொல்றன்..


    (தொடரும்)

    -மு .வே.யோகேஸ்வரன் -

    முன்னைய தொடர்கள்
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: தமிழ் நாட்டு காவல்துறையின் லத்தி அடியை அனுபவித்த நாட்கள் அவை! Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top