உலகக் கிண்ணத்தை கைப்பற்றப்போவது ஜேர்மனியா? ஆர்ஜென்டீனாவா? - TK Copy உலகக் கிண்ணத்தை கைப்பற்றப்போவது ஜேர்மனியா? ஆர்ஜென்டீனாவா? - TK Copy

  • Latest News

    உலகக் கிண்ணத்தை கைப்பற்றப்போவது ஜேர்மனியா? ஆர்ஜென்டீனாவா?


    உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட சம்­பி­ய­னாக
    முடி­சூ­டப்­போ­வது ஐரோப்­பாவின் ஜேர்­ம­னியா? அல்­லது தென் அமெ­ரிக்­காவின் ஆர்­ஜென்­டீ­னாவா? என்ற பல கோடி பேரின் கேள்வி, காத்­தி­ருப்பு போன்­ற­வற்­றுக்­கான விடை இன்று கிடைத்­துவிடும்.

    பிரே­ஸிலின் தலை­ந­க­ரான ரியோ டி ஜெனி­ரோவின் மரக்­கானா மைதா­னத்தில் இலங்கை நேரப்­படி 14ஆம் திகதி நள்­ளி­ரவு 12.30 மணிக்கு இரு அணி­களும் கள­மி­றங்க காத்­திருக்கின்றன. ஆர்­ஜென்­டீனா அணி 28 ஆண்­டு­க­ளுக்குப் பின்­னரும் ஜேர்­மனி அணி 24 ஆண்­டு­க­ளுக்குப் பின்னரும் கிண்­ணத்தை வென்று சம்­பி­ய­னாகும் கன­வுடன் இன்­றைய போட்­டியில் விளை­யா­ட­வுள்­ளன.

    ஆர்­ஜென்­டீனா அணி 1986 ஆம் ஆண்டு இறு­தி­யாக கிண்­ணத்தை சுவீ­க­ரித்­தி­ருந்­ததுடன் ஜேர்­மனி அணி இறு­தி­யாக 1990 ஆம் ஆண்டு கிண்­ணத்தை கைப்­பற்­றி­யி­ருந்­தது. இதனால் கால்­பந்­தாட்ட ரசி­கர்­க­ளி­டையே இவ்­விரு அணி­க­ளுக்­கு­மி­டை­யி­லான எதிர்­பார்ப்பு மேலும் அதி­க­ரித்து காணப்­ப­டு­கின்­றன.

    கடந்த ஜூன் 12 ஆம் திகதி சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் (பீபா) 20 ஆவது உலகக் கிண்ண கால்­பந்­தாட்டத் தொடர் ஆரம்­ப­மா­னது. இதில் 8 குழுக்கள் தலா 4 அணிகள் வீதம் 32 அணிகள் பங்கு கொண்­டன. முதல் சுற்­றின்­போது 8 குழுக்­க­ளிலும் முத­லிரு இடங்­களைப் பிடித்த 16 அணிகள் இரண்­டா­வது சுற்­றுக்கு தெரி­வா­கின.

    இரண்­டா­வது சுற்றில் வெற்றி பெற்ற 8 அணிகள் காலி­றுதிச் சுற்­றுக்கு நுழைந்­தன. இதன்­போது காலி­றுதிச் சுற்­றுக்கு பிரேஸில், சிலி, நெதர்­லாந்து, மெக்­ஸிக்கோ, கொலம்­பியா, உரு­குவே, கொஸ்­ட­ரிகா, கிறீஸ், பிரான்ஸ், நைஜீ­ரியா, ஆர்­ஜென்­டீனா, சுவிட்­ஸர்­லாந்து, ஜேர்­மனி, அல்­ஜீ­ரியா, பெல்­ஜியம், ஐக்­கிய அமெ­ரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்­றன.

    இதன் பின்னர் முத­லா­வது அரை­யி­று­திக்கு போட்­டியை நடத்தும் நாடான பிரே­ஸிலும் ஜேர்­ம­னியும் மோதின. இதில் பிரேஸில் வர­லாற்றில் மிகவும் மோச­மான முறையில் ஜேர்­ம­னி­யிடம் தோல்­வி­ய­டைந்து, பல­கோடி பிரேஸில் ர­சி­கர்­களின் எதிர்ப்­பார்ப்பை ஏமாற்­றத்­துக்­குள்­ளாக்­கி­யது.

    இப் போட்­டியில் ஜேர்­மனி அணி 7-–1 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்றி பெற்­றது. இந்த வெற்றி மூலம் 8 தட­வைகள் இறுதிப் போட்­டிக்குத் தெரி­வான முதல் அணி­யாக ஜேர்­மனி சாதனை படைத்­தது. இப் போட்­டியின் இரண்­டா­வது கோலை மிரஸ்லொவ் குளோஸ் போட்டு உலகக் கிண்ண அரங்கில் அதிக கோல்­களை அடித்த வீரர் என்ற சாத­னையை படைத்தார்.

    இரண்­டா­வது அரை­யி­றுதிப் போட்­டியில் ஆர்­ஜென்­டீனா மற்றும் நெதர்­லாந்து ஆகிய அணிகள் மோதின. இதில் முதல் 90 நிமி­டங்­களில் இரு அணி­க­ளாலும் கோல் போட­மு­டி­ய­வில்லை. இதனால் போட்டி மேல­திக 30 நிமி­டங்­க­ளுக்கு நகர்ந்­தது. இதிலும் இரு அணி வீரர்­க­ளாலும் கோல் போடப் பாரிய முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­போ­திலும் பந்தை கோல் வலைக்குள் புகுத்த முடி­யாது போனது.

    இதனால் போட்­டியின் முடிவை தீர்­மா­னிக்க பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு கொண்டு செல்­லப்­பட்­டது. பெனால்ட்டி உதையில் 4–2 என்ற கோல்கள் கணக்கில் ஆர்­ஜென்­டீனா வெற்றி பெற்று 5 ஆவது முறை­யாக இறுதிப் போட்­டிக்கு விளை­யாடத் தகுதி பெற்­றது. இதில் முத­லா­வது மற்றும் மூன்­றா­வது பெனால்டி உதை­களை ஆர்­ஜென்­டீ­னாவின் கோல்­காப்­பா­ள­ரான ரொமெரோ தடுத்து ஆர்­ஜென்­டீ­னாவின் வெற்­றிக்கு உறு­து­ணை­யாக இருந்தார்.

    இன்று நடை­பெறும் இறுதிப் போட்­டியில் இரு அணி­களும் சம­ப­ல­மான அணி­க­ளா­கவே கரு­தப்­ப­டு­கின்­றன. ஆர்­ஜென்­டீனா அணி­யா­னது மெஸ்­ஸியை நம்­பியே உள்­ளது. மெஸ்­ஸியைத் தவிர டி மரியா, ஹிகுவெய்ன் போன்ற வீரர்­களின் செயற்­பாடு சிறப்­பாக உள்­ள­துடன், அவ்­வ­ணியில் பல­மிக்க பின்­கள வீரர்கள் காணப்­ப­டு­கின்­றமை அணியின் பல­மாகும்.

    அத்­துடன் அணியின் கோல்­காப்­பா­ள­ரான ரொமெரோ நம்­பிக்கை அளித்து வரு­கிறார். இத்­தொ­டரில் 5 போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ள ஆர்­ஜென்­டீனா அணி (பெனால்டி உதை­களைத் தவிர்த்து) 8 கோல்­களை மாத்­தி­ரமே அடித்­துள்­ளன. இது அவ்­வ­ணியின் முன்­கள வீரர்­களின் செயற்­பாட்டின் கோல் போடும் குறையை சுட்­டி­காட்­டு­கின்­ற­போ­திலும் ஆர்­ஜென்­டீனா அணிக்கு எதி­ராக ஏனைய அணிகள் 3 கோல்கள் மாத்­தி­ரமே (பெனால்டி உதை­களை தவிர்த்து) போட்டுள்­ளமை கவ­னிக்­கத்­தக்­கது.

    இதே­வேளை ஜேர்­மனி அணியில் முல்லர், குளோஸ், ஹம்ல்ஸ், ஷுர்ல், குரூஸ் என நட்­சத்­திர பட்­டா­ளமே காணப்­ப­டு­கின்­றது. பல­மிக்க முன்­கள வீரர்கள் காணப்­ப­டு­கின்­றமை இவ்­வ­ணியின் பல­மாகும். இவர்கள் அனை­வரும் அணிக்­காக இரண்­டுக்கும் மேற்­பட்ட கோல்­களை அடித்து அணியின் வெற்­றிக்கு பாரிய பங்­காற்­றி­யுள்­ளனர்.

    ஜேர்­மனி அணி 17 கோல்­களை அடித்து இத்­தொ­டரில் அதிக கோல்­களை அடித்த அணி­யாக காணப்­ப­டு­கின்­றது. இது அவ்­வ­ணியின் முன்­கள வீரர்கள் பலத்தை எடுத்­துக் ­காட்­டு­கின்­றது. இவ்­வி­ரு ­அ­ணி­களும் இது­வரை 20 போட்­டி­களில் ஒன்­றை­யொன்று சந்­தித்­துள்­ளன. இதில் ஜேர்­மனி அணி 9 தட­வை­களும் ஆர்­ஜென்­டீனா அணி 6 தட­வை­களும் வெற்றி பெற்­றுள்­ளன. ஏனைய 5 போட்­டிகள் சம­நி­லையில் முடி­வ­டைந்­தன.

    உலகக் கிண்ண இறுதிப் போட்­டியில் இவ்­விரு அணி­களும் மூன்­றா­வது தட­வை­யாக இறு­திப்­போட்­டியில் நேருக்கு நேர் சந்­திக்­க­வுள்­ளன. இதற்கு முன்னர் 1986ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறு­திப்­போட்­டியில் ஆர்­ஜென்­டீனா 3–-2 என்ற கோல் கணக்கில் ஜேர்­ம­னியை வீழ்த்­தி­யது.

    இதன்­பின்னர் 1990ஆம் ஆண்டு நடை­பெற்ற உலகக் கிண்ண தொடரின் இறு­திப்­போட்­டியில் ஜேர்­மனி அணி 1–0 என்ற கோல் கணக்கில் ஆர்­ஜென்­டீ­னாவை வென்று பழி­தீர்த்­தது. இதனால் மூன்­றா­வது முறை­யாக இவ்­விரு அணி­களும் இறு­திப்­போட்­டியில் சந்­திக்­கின்­றமை ர­சி­கர்­க­ளி­டத்தில் மேலும் சுவாரஷ்யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

    மேலும் இப்­போட்டி தென் அமெ­ரிக்­கா­வுக்கும் ஐரோப்பாவுக்கும் இடை­யி­லான போட்­டியாகவும் பார்க்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன், ஐரோப்பா கண்­டத்தில் நடை­ பெற்ற உலகக் கிண்ண தொடரில் தென் அமெ­ரிக்க நாடொன்று சம்­பி­ய­னாகி­யி­ருந்­த­போ­திலும் தென் அமெ­ரிக்கா கண்­டத்தில் நடை­பெற்ற உலகக் கிண்ண தொட ­ரொன்றில் இது­வரை எந்­த­வொரு ஐரோப்­பிய நாடு கிண்ணத்தை வென்றதில்லை.

    இந்த விடயத்தை ஆர்ஜென்டீனா வெற்றி பெற்று தொடர வைக்குமா? அல்லது ஜேர்மனி வெற்றி பெற்று முற்றுப் புள்ளி வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: உலகக் கிண்ணத்தை கைப்பற்றப்போவது ஜேர்மனியா? ஆர்ஜென்டீனாவா? Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top