புலிகளுக்கு ராணுவ உபகரணத்தை கடத்தி வந்து கொடுத்த சிங்கள ராணுவம் ! - TK Copy புலிகளுக்கு ராணுவ உபகரணத்தை கடத்தி வந்து கொடுத்த சிங்கள ராணுவம் ! - TK Copy

  • Latest News

    புலிகளுக்கு ராணுவ உபகரணத்தை கடத்தி வந்து கொடுத்த சிங்கள ராணுவம் !


    புலிகளின்மீது படைஎடுத்து வன்னியை
    ஆக்கிரமிக்க சிங்கள படைகள் குறிப்பாக ஆகாயபடையில் இருந்து கொட்டப்படும் குண்டுகளில் இருந்து உலங்கு வானூர்திகளில் இருந்து போடப்படும் குண்டுகளில் இருந்து கொடிய இரசாயன் பொடிகளை (பவுடர்).கலந்து சிங்களபடை பிரயோகித்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    இந்த இரசாயன பொடியின் அழற்சியால் பலர் குறிப்பாக போராளிகள் துடி துடிக்க சாவை தழுவியுள்ளனர் என்பதை தப்பிவந்த ஒரு சிலர் வெளிப்படுத்தியுள்ளனர். பிரிகேடியர் தீபனின் வீர மரணம் வெள்ளைப் போஷ்பரசால் ஏற்பட்ட ஒன்று என்பதை புலிகள் நேரில் கண்டார்கள்!

    இராணுவத்துடனான முக்கிய சண்டையின்போது தீபன், இந்த நாச காரியால்தான் வீர மரணத்தை தழுவினான். இதே கருத்தைதான் முள்ளிவாய்க்கால் பகுதியில் படு காயமடைந்த சில பொது மக்களும் வெளிபடுத்தி உள்ளனர்.

    இவர்களில் ஒருசிலர் இந்தியாவுக்கு தப்பிவந்தபோது இவர்களுக்கு ஏற்பட்ட காயத்தில் இருந்து இதை (வெள்ளை போஷ்பரசின் தாக்கம்) சில அடையாளம் காண முடியாத மருத்துவ குழுக்கள் உறுதிபடுத்தி உள்ளன.

    இவைகூட இன்னும் உறுதி படுத்தபட்ட சாட்சிகளாக வெளியில் வரவில்லை குறிப்பாக உலங்கு வானூர்திகளில் சில குறிப்பிட்ட இடங்கள் மீது வீசப்பட்ட எறிகணைகளில் இருந்து வெடித்ததும் உடனே பயங்கர தீயை பிரயோகித்து பற்றிஎரிந்து ஆபத்தை விளைவிக்க கூடிய 'பொஸ்பரஸ்' என்னும் தூள் பாவிக்கபட்டு இருக்கலாம் என்று அஞ்சபடுகிறது.

    அதே வேளை மன்னாரில் இருந்து முல்லை தீவை நோக்கி ஆக்கிரமிக்க நகர்ந்து கொண்டிருந்த வன்னிமீதான படையெடுப்பின்போது மேஜர் ஜெனரல் சவெந்திரா சில்வாவின் ஒரு டிவிசனை சேர்ந்த படையினரில் ஒரு பகுதியினர் இந்த இரசாயன யுத்த பயிற்சியில் சீனாசென்று பயிற்சி பெற்றவர்கள் என்பதை வேறு சில படையினரிடம் இருந்து கசிந்த தகவல்கள் மூலம் அது தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு கொழும்பு பகுதி மாநகர வட்டார உறுப்பினர் ஒருவர்மூலம்  வேறு ஒருவருக்கு சென்று அவர்மூலம் எனது காதுகளுக்கும் வந்தது.

    ஆனால் இதை வெளிப்படையாக உறுதி படுத்தவோ நிரூபிக்கவோ முடியாத நிலையில் அந்த வட்டாரம் உள்ளது அப்படி எதையாவது செய்வது என்றால் நிச்சயம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று அவர்கள் பயப்படுவதாகவும் அந்த தகவலை சொன்ன உறுப்பினர் யார்? என்று சொல்ல எனக்கு தெரிந்த அந்த நபர் கண்டிப்பாக மறுத்து விட்டார்.

    ஆனால் அதே படை பிரிவின் மேஜர் ஜெனரலுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் இந்த தாக்குதலின் பரிசாகதான் புதுப்பதவி ராஜபக்சாவினால் அளிக்கபட்டு இருக்க கூடும்....? எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும்? என்று இப்போது சொல்ல முடியாது. அதே வேளை. ஒன்று மட்டும் எனக்கு நன்றாக புரிகிறது. பணம் எம்மிடம் இருந்தால். குறிப்பிட்ட ராணுவத்தின் சிலர் மூலமே இது வெளியில் வர வாய்ப்புண்டு.

    அடிக்க வேண்டியது இனி பணத்தால்தான் ".பூனைக்கு யார் மணி கட்டுவது"...? பணத்தினால் ராஜபக்சாவின் படைகளை இலகுவில் விலைக்கு வாங்க முடியும் என்பதை நேரில் காணாவிட்டாலும் விசாரித்து அறிந்தவன். நான் எப்படி..? தொடர்ந்து படியுங்கள்...!

    கடல் புலிகளின் கட்டமைப்பு உருவாக தொடங்கிய கால பகுதியில். புதிய படகுகளின் வேலைகளும். படகுகளை திருத்தும் வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது மட்டுமன்றி புதிய சிறிய ரக நீர்மூழ்கி கப்பலொன்றும்கூட மிக இரகசிய இடத்தில் அதுவும் நிலக்கீழ் அறையில் வைத்து கட்டப் பட்டு கொண்டிருந்த வேளை...அது..!

    அந்த பிரதேசத்துக்கு பக்கத்தில் கூட யாரும் போக முடியாதவாறு தடுக்கபட்டிருந்த வேளை சூசையுடன் நான் அடிக்கடி அங்கே போய் அவற்றை பார்த்து வியந்துள்ளேன். அதுவும் நீர்மூழ்கி கப்பலின் அதிசயிக்கவைக்கும் வடிவத்தை பார்த்து அசந்துபோய்விட்டேன்.

    சுமார் நான்கு அல்லது ஆறுபேர் மட்டும் போககூடிய வாறு. அது வடிவமைக்கபட்டு கொண்டு இருந்தது, வெளிநாடு ஒன்றில் இருந்து பெறபட்ட தொழில் நுட்ப நூலொன்றை வைத்து கொண்டு 'மூர்த்தி மாஸ்டர்' என்பவர் அதை வடிவமைத்து கொண்டிருந்தார்.

    அந்த படகு வேலைகளுக்கோ. அல்லது  நீர் மூழ்கி வேலைகளுக்கோ மிகவும் தேவையான மூல பொருள்...'ரெசின் 'என்னும்,,ஒரு வேதி பொருள்..! இதன் விலையோ அப்போது தங்கத்தின் விலையை விட பத்து மடங்கு அதிகம்.!நான் சொல்வது கொழும்பு விலை பற்றியது. ஆனால் இதை எப்படி ஈழத்துக்குள் கொண்டுவர முடியும்..?

    அப்படி கொண்டு வருவதாக இருந்தாலும் அதன் விலை இங்கே வரும்போது கொழும்பு விலையில் இருந்து பத்து மடங்காகிவிடும் அதை விட இது ராணுவத்தால் 'பயங்கரஆயுதம்' என்னும் தலைப்பின் கீழ் தடைசெய்ய பட்ட மிக அரிதான பொருள்.

    பொது மக்கள் யாரும் இதை கொண்டுவந்து பிடிபட்டால் அவ்வளவுதான்.! அவர்களின் உயிர் அவர்களின் உடலில் தங்குவற்கு உத்தரவாதம் யாராலும் கொடுக்க முடியாது.

    இந்த 'ரெசின்' இருந்தால்தான் எதுவும் நடக்கும் என்னும் நிலை இருந்தபோது புலிகளுக்கு உதவ வல்வை தொழில் அதிபர் ஒருவர் முன்வந்தார்.

    அவர்மூலம்தான் முக்கிய பொருட்களை புலிகள் அடிக்கடி பொது மக்களின் 'லொறிகள்' மூலம் கொண்டு வந்து கொடுத்து வந்தனர். ஆனால் .முதலில் அவர்கூட இதை கொண்டுவர மறுத்து விட்டார். பின்னர் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இதற்கு சம்மதித்து விட்டார்.

    அன்பர்களே.!.'பணம் இருந்தால் பத்தும் பறக்கும்'. என்பது எமக்கு தெரிந்த பழமொழி.. ஆனால்.'.பணம் பாதாளம் வரை போகும்' என்பதையும் கடல் புலிகள் மூலம் அறிந்து கொண்டேன் நான்.

    ஆம்!..அந்த ரெசின் ஈழத்துக்குள் தங்கு தடையின்றி, தேவாங்கின் முதுகில் ஏறியவாறு வந்து கொண்டிருந்தது. அதன்மூலம் கடல்புலிகளின் வேலைகள் துரிதமாக நடை பெற்று கொண்டிருந்தன.

    உங்கள் முன்னே இப்போது வந்து கொண்டிருக்கும் அந்த முக்கிய கேள்வி என்ன என்பது எனக்கு தெரியும்,...இதோ நானே சொல்லி விடுகிறேன்..அந்த 'ரெசினை ' கொண்டுவந்து...வவுனியாவின்..ராணுவ காவல் அரண்வரை கொடுத்தது அப்போது வவனியா காவல்அரண் ராணுவ பொறுப்பாளராக இருந்த ஒரு மேஜர்தான்.

    கொழும்பில் இருந்து ஒரு லொறியில் ஏற்றபட்டு வவுனியாவை கடந்து ஈழ பிரதேசத்துக்கு வரும்வரை அந்த 'மேஜரின்' நேரடி கண்காணிப்பில்தான் அது வந்து சேர்ந்தது இப்போது சொல்லுங்கள். பணம் பாதாளம்மட்டும் போகுமா...இல்லை அதற்கும் மேல் போகுமா...?

    மு.வே.யோகேஸ்வரன் 
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: புலிகளுக்கு ராணுவ உபகரணத்தை கடத்தி வந்து கொடுத்த சிங்கள ராணுவம் ! Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top