யாழ். வவுனியா வழியில் அரச மற்றும் தனியார்
பேருந்துகள் போட்டிக்கு ஓடிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நாற்பது பேர் காயமடைந்திருக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று பிற்பகல் ஏ – 9 நெடுஞ்சாலையில் வவுனியா நோக்கிய திசையில் பயணித்த அரச மற்றும் தனியார் பேருந்துகள் ஏட்டிக்கு போட்டியாக ஒன்றை ஒன்று துரத்திச் சென்றிருக்கின்றன.
ஓமந்தை சோதனைச்சாவடிக்கு அண்மித்த விளக்குவைத்த குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து தடம்புரடண்டுள்ளது.
சம்பவத்தில் நாற்பது பேர் காயம்
அடைந்திருக்கின்றனர். அவர்களில் பதினேழு பேர் படுகாயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்துச் சம்பவத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ரத்னாயக்க என்பவர் உயிரிழந்துள்ளார்.
சிறிய காயங்களுக்கு உள்ளாகிய 23 பேர் புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.