இராமபோசா இலங்கைக்கா அல்லது இனப்பிரச்சனை தீர்வுக்கா போசாக்கு வழங்குவார் ? - TK Copy இராமபோசா இலங்கைக்கா அல்லது இனப்பிரச்சனை தீர்வுக்கா போசாக்கு வழங்குவார் ? - TK Copy

  • Latest News

    இராமபோசா இலங்கைக்கா அல்லது இனப்பிரச்சனை தீர்வுக்கா போசாக்கு வழங்குவார் ?


    தென்னாபிரிக்கப் பிரதிநிதிகளுடனான
    இன்றைய சந்திப்பு ஆக்கபூர்வமானதாக அமைந்தது. அவர்கள் தமது நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வந்தனர் என்பது குறித்து எமக்கு விளக்கினர்.

    இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வை எட்டுவதற்கு தாம் முழு ஆதரவை வழங்குவோம் என்றும் தென்னாபிரிக்க குழுவினர் உறுதியளித்தனர் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிறில் ரமபோஷா தலைமையிலான குழுவினர் இன்று காலை 7.15 மணி தொடக்கம் 8.45 மணி வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்துப் பேசினர்.

    இந்தச் சந்திப்புக் குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

    ஏற்கனவே தென்னாபிரிக்காவில் நாம் தீர்வு முயற்சிகள் குறித்து சந்திப்புக்களை நடத்தியிருந்தோம். இதன் தொடர்ச்சியாகவே இன்றைய சந்திப்பும் அமைந்தது. இந்தப் பேச்சும் எமக்குத் திருப்திகரமாக அமைந்தது. அவர்கள் தமது நாட்டுப் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பது குறித்து விளக்கினர். இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தென்னாபிரிக்கக் குழுவினர் மத்தியஸ்தம் வழங்கினால் நாம் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்.

    இங்கு பல தரப்பட்ட தரப்பினர் இருக்கின்றனர் அவர்களுடனும் விரிவாகப் பேசி ஓர் இணக்கத்திற்கு வருவதே முக்கியமானது – என்றார். இன்றைய சந்திப்பில் தென்னாபிரிக்க குழு சார்பில் அந்நாட்டு உதவி ஜனாதிபதி சிறில் ரமபோஷ, உதவி வெளிவிவகார அமைச்சர் இப்ராகிப் இஸ்மாயில் இப்ராகிம், தற்போது ரமபோஷவின் சிரேஸ்ட ஆலோசகர் றூத் மேயர், ஐவர் ஜெனின், இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ஆகியோர் கலந்துகொண்டனர். 

    தென்னாபிரிக்க கறுப்பினப் பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மை வெள்ளையருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முக்கிய பங்காற்றியவர்களாக ரமபோஷவும் றூத் மேயரும் விளங்குகின்றனர். கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிரதிநிதியாக இப்போதைய உப ஜனாதிபதி சிறில் ரமபோஷவும் வெள்ளையர்களின் பிரதமரான டி கிளார்க்கின் பிரதிநிதியாக றூத் மேயரும் செயற்பட்டனர். இவர்கள் இருவரின் மூலமே அந்த நாட்டுப் பிரச்சினை தீர்க்கப்பட்டது.

    இந்த நிலையில் இரண்டு தரப்பிலுமாக முக்கியத்துவம் வகித்த பிரதிநிதிகள் இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்கு வந்திருப்பது முக்கியமானது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கூட்டமைப்பு பிரதிநிதிகள் சார்பாக சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர்.

    இதேவேளை இன்று முற்பகல் 11 மணியளவில் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ள தென்னாபிரிக்கக் குழு வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினரை ரில்கோ விடுதியில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுவருவதாக பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

    முன்னைய செய்தி 

    இலங்­கைக்கு நேற்று வரு­கை­தந்­துள்­ள தென்­னா­பி­ரிக்க பதில் ஜனா­தி­பதி சிறில் ரம­போஷா தலை­மை­யி­லான இரா­ஜ­தந்­தி­ரிகள் குழு­வினர் நேற்­று­மாலை கொழும்பில் அரச தரப்பு முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்து விரி­வான பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யுள்­ளனர்.

    கொழும்பில் உள்ள தாஜ்சமுத்திரா ஹோட்­டலில் நடை­பெற்ற இந்த சந்­திப்பில் போருக்குப் பின்­ன­ரான இலங்­கையின் தற்­போ­தைய நிலைமை மற்றும் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள், அர­சியல் தீர்வுக்கா­ன நகர்­வுகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

    தென்­னா­பி­ரிக்க பிர­தி­நி­திகள் குழுவில் சிறில் ரம­போ­ஷா­வுடன் அந்­நாட்டின் பிர­தி­ய­மைச்சர் இப்றாஹிம் இஸ்மாயில் இப்றாஹிம், மதிப்­பீடு கண்­கா­ணிப்பு மற்றும் சாதனை தொடர்­பான பிர­தி­ய­மைச்சர் ஒபீட் போபிலா, நெல்சன் மண்­டே­லாவின் அமைச்­ச­ர­வையில் உறுப்­பி­ன­ராக இருந்த ரோல்ப் மேயர் மற்றும் ஐவர் ஜென்கின்ஸ் ஆகியோர் இடம்­பெற்­றுள்­ளனர்.

    முக்­கிய அமைச்­சர்கள் சந்­திப்பு நேற்று மாலை இடம்­பெற்ற சந்­திப்பில் அர­சாங்­கத்தின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ, நீர்ப்­பா­சன முகா­மைத்­துவ அமைச்சர் நிமால் சிறி­பால டி. சில்வா, நீதி­ய­மைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் முத­லீட்டு ஊக்­கு­விப்பு பிர­தி­ய­மைச்சர் பைசர் முஸ்­தபா, சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட அமைப்­பாளர் அருண் தம்­பி­முத்து உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­டனர்.

    தீர்வு குறித்த நிலைப்­பாடு குறிப்­பாக கடந்த பெப்­ர­வரி மாதம் தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு விஜயம் மேற்­கொண்டு அர­சியல் தீர்வு மற்றும் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­திய அரச தரப்பு குழுவின் உறுப்­பி­னர்கள் அனை­வரும் நேற்­று­மாலை சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். அர­சியல் தீர்வு விவ­காரம் தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன என்­பது இதன்­போது தென்­னா­பி­ரிக்க குழு­வி­ன­ருக்கு அரச தரப்பு பிர­தி­நி­தி­க­ளினால் தெளி­வாக விளக்­கப்­பட்­டுள்­ளது.

    குறிப்­பாக பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு குறித்தும் இதன்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் மேலும் போருக்குப் பின்­ன­ரான நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் தொடர்­பா­கவும் தென்­னா­பி­ரிக்­காவில் முன்­னெ­டுக்­கப்­பட்ட உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு தொடர்­பா­கவும் விரி­வான பேச்­சுக்கள் இந்த சந்­திப்­பின்­போது இடம்­பெற்­றுள்­ளது.

    ஜனா­தி­ப­தியின் இரவு விருந்­து­ப­சாரம் நேற்றுப் பகல் 12.30 மணி­ய­ளவில் தென்­னா­பி­ரிக்க பிர­தி­நி­திகள் கொழும்பு கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைந்­தனர். அத­ன­யை­டுத்து அரச தரப்­பு­ட­னான சந்­திப்பை முடித்த பின்னர் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் தென்­னா­பி­ரிக்க பிர­தி­நி­தி­க­ளுக்­கான இரவு விருந்­து­ப­சாரம் இடம்­பெற்­றது. இதன்­போது ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கும் சிரில் ரம­போஷா தலை­மை­யி­லான தென்­னா­பி­ரிக்க குழு­வி­ன­ருக்கு இடை­யி­லான சந்­திப்பும் நடை­பெற்­றது.

    இந்த சந்­திப்பில் அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் குழு­வி­னரும் கலந்­து­கொண்­டனர். இதன்­போதும் அர­சியல் தீர்வு மற்றும் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. கூட்­ட­மைப்­புடன் இன்று சந்­திப்பு இது இவ்­வாறு இருக்க இன்று காலை சிரில் ரம­போஷா தலை­மை­யி­லான தென்­னா­பி­ரிக்க பிர­தி­நி­தி­க­ளுக்கும் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மான சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது.

    தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் கூட்­ட­மைப்பு பங்­கேற்­காமல் இருப்­ப­தற்­கான காரணம் மற்றும் அர­சாங்­கத்­துடன் நடத்­தப்­பட்ட இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது இணக்­கப்­பாட்­டுக்கு வந்த விட­யங்கள் உள்­ளிட்ட பல்­வேறு விவ­கா­ரங்கள் குறித்து இந்த சந்­திப்­பின்­போது கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது.

    கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு அறி­விக்­கப்­படும் இரா. சம்­மந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் ஏற்­க­னவே டந்த பெப்­ர­வரி மாதம் தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு விஜயம் ஒன்றை மேற்­கொண்டு ரம­போ­ஷா­வுடன் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யி­ருந்­தனர். அந்­த­வ­கையில் அந்தப் பேச்­சுக்­களின் தொடர்ச்­சி­யா­கவே நாளைய பேச்­சுக்கள் அமையும் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

    அதா­வது பேச்­சுக்­கான பேச்­சுக்கள் என்ற விட­யத்­துக்கு ரம­போ­ஷாவின் விஜ­யத்­தின்­போது முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. யாழ்ப்­பாணம் விஜயம் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான சந்­திப்­பை­ய­டுத்து இன்று காலை யாழ்ப்­பா­ணத்­துக்கு செல்­ல­வுள்ள ரம­போஷா குழு­வினர் அங்கு வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வ­ரனை சந்­தித்து வட­மா­காண நிலை­மைகள் குறித்து ஆரா­ய­வுள்­ளனர்.

    அத்­துடன் வட மாகாண ஆளுநர் சந்­தி­ர­சி­றி­யையும் சந்­தித்துப் பேச்சு நடத்­த­வுள்­ளனர். மாலை நாடு திரும்­பு­கின்­றனர் அதன் பின்னர் மீண்டும் மாலை கொழும்பு திரும்­பு­வுள்ள தென்­னா­பி­ரிக்க விசேட பிர­தி­நி­திகள் இன்­றைய தினமே நாடு திரும்­ப­வுள்­ளனர். சிரில் ரம­போஷா தென்­னா­பி­ரிக்­காவின் பதில் ஜனா­தி­ப­தி­யாக இருப்­ப­தனால் அந்­நாட்டின் இவ்­வார அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கு தலைமை தாங்­க­வேண்­டி­யுள்­ள­தா­லேயே அவர் அவ­ச­ர­மாக நாடு திரும்­பு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

    கூட்­டணிக் கட்­சிகள் எதிர்ப்பு இது இவ்­வாறு இருக்க ஆளும் கூட்­ட­ணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீர­வங்ச தலை­மை­யி­லான தேசிய சுதந்­திர முன்­ன­ணியும் ஜாதிக ஹெல உறு­ம­யவும் சிரில் ரம­போ­ஷாவின் விஜ­யத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளன. இவ்­வா­றான கடும் எதிர்ப்­புக்கு மத்­தி­யி­லேயே சிரில் ரம­போஷா தலை­மை­யி­லான தென்­னா­பி­ரிக்க குழு­வி­னரின் விஜயம் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

    ஐ.தே.க. வுடன் சந்­திப்பு இல்லை இதே­வேளை பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசிய கட்­சியின் பிர­தி­நி­தி­க­ளுடன் சிரில் ரமபோஷா தலைமையிலான குழுவினர் சந்திப்பை நடத்தவுள்ளதாக ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி ரமபோஷாவை தனிப்பட்ட ரீதியில் சந்திக்காது என்றே தெரிவிக்கப்படுகின்றது. தமது கட்சிக்கு இது தொடர்பில் எவ்விதமான அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்திய விஜயம் ரத்து ? 

    இதேவேளை சிறில் ரமபோஷா, இலங்கை விஜயத்தின் பின்னர் இந்தியாவுக்கு சென்று அந்நாட்டின் ஆட்சியாளர்களை சந்திக்க தீர்மானித்திருந்த போதிலும் அந்த தீர்மானம் அவசரமாக மாற்றப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ரமபோஷா தலைமையிலான குழுவினர் இந்தியாவுக்கு விஜயம் செய்வதில்லை என தீர்மானித்துள்ளனர்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: இராமபோசா இலங்கைக்கா அல்லது இனப்பிரச்சனை தீர்வுக்கா போசாக்கு வழங்குவார் ? Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top