NO LIMIT விற்பனை நிலையமும் இன்று தீக்கரை தொடரும் வன்முறை - TK Copy NO LIMIT விற்பனை நிலையமும் இன்று தீக்கரை தொடரும் வன்முறை - TK Copy

  • Latest News

    NO LIMIT விற்பனை நிலையமும் இன்று தீக்கரை தொடரும் வன்முறை

    இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிலையம்
    நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை சற்று முன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
    இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை காட்சியறைகளில் நோலிமிட் நிறுவனம் வெளிநாடுகளிலும் புகழ்பெற்றது. இதன் உரிமையாளர் ஒரு முஸ்லிம் என்ற போதிலும், சுமார் இரண்டாயிரம் சிங்களவர்கள் மற்றும், ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழர்களும் இந்த நிறுவனத்தின் மூலம் வருமானத்தைப் பெற்று வந்துள்ளனர்.
    இந்நிறுவனம் சுமார் ஐயாயிரம் ஊழியர்களைக் கொண்டதும், நாட்டின் முக்கிய நகரங்களில் பல கிளைகளை் கொண்டதுமாகும். இந்நிலையில் பாணந்துறை நகரின் அரச மருத்துவமனை அருகில் அமைந்திருந்த நோலிமிட் நிறுவனத்தின் காட்சியறை சற்று முன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
    நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் உள்ளே தங்கியிருந்த நிலையில், பொதுபல சேனா தீவிரவாதிகள் வெளியிலிருந்து நோலிமிட் காட்சியறைக்குத் தீவைத்துள்ளார்கள்.தீ வேகமாகப் பரவிய நிலையில், உள்ளே தங்கியிருந்த ஊழியர்கள் ஏழு பேர் பெரும் சிரமத்தின் மத்தியில் உயிர் தப்பியுள்ளனர். ஏனைய ஊழியர்களின் நிலை குறித்து தகவல்கள் தெரியவில்லை.
    இதற்கிடையே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைப்பதற்காக கொழும்பு உள்ளிட்ட இடங்களிலிருந்து தீயணைப்பு வண்டிகள் தருவிக்கப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
    2ம் இணைப்பு
    பாணந்துறை நோ லிமிட் வர்த்தக நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது
    கொழும்பின் புறநகர்ப் பகுதியான பாணந்துறையில் அமைந்துள்ள நோ லிமிட் என்ற முன்னணி ஆடை வர்த்தக நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.
    இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் வர்த்தக நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
    இனந்தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீ வைக்கப்பட்டதனால் ஏற்பட்ட சேதம் பற்றிய மதிப்பீடுகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.
    நோ லிமிட் வர்த்தக நிறுவனம் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்ற அடிப்படையில் இதற்கு முன்னரும் பொதுபல சேனா போன்ற பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்கள் மஹரகம உள்ளிட்ட சில கிளைகள் மீது தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
    3ம் இணைப்பு
    பாணந்துறையில் உள்ள நோலிமிட் மிகப் பெரிய உடுப்புக்கள் மற்றும் அலங்கார அணிகள் கொண்ட 3 மாடிகளைக் கொண்டவையாகும். நேற்று இரவு நடுநிசியில் நாசகார வேலையாளர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
    நோலிமிட்டின் பின்புறமாக கூரையின் மேல் ஏறி உள்ளுக்குள் தீ வைத்துள்ளனர். ஆனால் இந் நிலையத்தை வளைத்து வைத்தியசாலை பொலிஸ் நிலையம், ஏனைய வியாபார நிலையங்கள் உள்ளன. 5 மணிக்கே தீயணைக்கும் படையினர் வந்து தீயணைக்கின்றனர். ஆனால் சகலதும்  முற்றாக அழிந்து எரிந்து சாம்பலாகியுள்ளது.
    நோலிமிட்டின் மிகப் பெரிய வியாபார ஸ்தாபனம், கடந்த 2 வருடங்களை சொந்தக் கட்டிடத்தில் இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அண்மையில் அருகில் பாணந்துறை உள்ள வைத்தியசாலைக்கு 30 இலட்சத்திற்கும் பெறுமதியான வார்ட் ஒன்றையும் நோலிமிட் நிர்மாணித்து கொடுத்துள்ளது.
    சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர், மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாணந்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் றெஜினோல்ட் குரே ஆகியோரும் பார்வையிட்டுள்ளனர். அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாங்கள் அவசரமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடவுள்ளோம். இது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் மற்றுமொறு நாசகார செயல்லாகும். எனத் தெரிவித்தார்
    அமைசச்ர்  றெஜினோல்ட் குரே,  இது பாணந்துறையிலும் முஸ்லிம் பௌத்த மக்களது இன ஐக்கியத்தை குழப்பும் நாசகார செயலாகும், பாணந்துறையில் பன்னெடுங்காலமாக இன ஜக்கியத்தை  கட்டியெழுப்பினோம். அதனை ஒரு நொடிப்பொழுதில் தீயிட்டு கொழுத்திவிட்டனர். இதற்கு எனது கண்டனத்தை தெரிவிக்கின்றேன் என்றார்.


    இதேவேளை பாணந்துறையில் நோலிமிட் தீ தொடர்பில் வதந்திகளை நம்ப வேண்டாமாம்- பொலிஸ்
    பாணந்துறையில் நோ லிமிட் நிறுவனத்தின் தீ பரவல் தொடர்பில் வதந்திகளை நம்பவேண்டாம் என்று இலங்கையின் பொலிஸார் கோரியுள்ளனர்
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: NO LIMIT விற்பனை நிலையமும் இன்று தீக்கரை தொடரும் வன்முறை Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top