பொலிவியாவில் நடைபெற்றுகொண்டிருக்கின்ற
ஜி- 77 அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துக் கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை சந்திதது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ஜி- 77 அரச தலைவர்கள் மாநாடு நேற்று மாலை 6.45க்கு ஆரம்பமானது.
இந்த மாநாட்டிற்கு முன்னரே இருவருக்கும் இடையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை ‘ஜீ 77’ மாநாடு 'நல்வாழ்க்கைக்கான புதிய உலக முறை' எனும் தொனிப் பொருளில் நடைபெறுகின்றது.
மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் கடந்த 12 ஆம் திகதி பொலிவியாவிற்குப் சென்றுள்ளார்கள். இன்று ஜனாதிபதிக்கு பொலிவியா நாட்டின் அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.