ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு வழங்கிய அறிக்கையில் உண்மையற்ற கருத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் இந்த கருத்தை வெளியிட்டார்.
அத்துடன், இலங்கையில் சிறுபான்மை மக்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அலர் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற கட்சியின் 25 வது பேராளர் மாநாட்டிலேயே நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் இந்த கருத்தை வெளியிட்டார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் 11 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை சர்வதேச கடப்பாட்டினை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானமும் அதில் அடங்குகின்றது.
மாகாண சபைகளுக்கு பூரண அதிகாரங்களை வழங்குதல், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் புரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவது ஆகிய தீர்மானங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறைவெற்றியுள்ளது.
அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் நோக்கம் தம்மிடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அடுத்த தேசிய மட்ட தேர்தலில் பெறுபேறுகளை தீர்மானிக்கும் பலம் வாய்ந்த கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழும் என்று அதன் தலைவரான அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, நேற்று இடம்பெற்ற கட்சியின் அரசியல் உயர் மட்ட செயற்குழுக் கூட்டத்தில் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டதாகவும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.