ஆஸியில் தற்கொலை செய்த இளைஞனின் பெற்றோர் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதில் பிரச்சினை - TK Copy ஆஸியில் தற்கொலை செய்த இளைஞனின் பெற்றோர் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதில் பிரச்சினை - TK Copy

  • Latest News

    ஆஸியில் தற்கொலை செய்த இளைஞனின் பெற்றோர் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதில் பிரச்சினை

    அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் தற்கொலை செய்து
    கொண்ட இலங்கை இளைஞன் பற்றிய மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. லியோ சீமான்பிள்ளை என்ற 29 வயது இளைஞர் கடந்த சனிக்கிழமை இரவு ஜீலோங் பிரதேசத்தில் தமது உடலில் பெற்றோல் ஊற்றிக் கொண்டு தீமூட்டிக் கொண்டதில், உடலில் 90 சதவீதம் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணத்தைத் தழுவினார்.

    2013ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவை அடைந்து தற்காலிக விசாவில் தங்கியிருந்த லியோ, தாம் திருப்பி அனுப்பப்படும் அச்சத்தில் பல தடவைகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும், மனக்கிலேசம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ஏபிசி நிறுவனத்தின் 7.30 நிகழ்ச்சியில் லியோவின் கடந்த காலம் பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தன. இதில் கலந்து கொண்ட நண்பர்கள், லியோ தீவிர மனக்கிலேசம் காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்னர் மருத்துமனையில் அனுமிக்கப்பட்டு தீவிர மனக்கிலேசத்திற்காக சிகிச்சை பெற்றார் எனவும், அவர் இரு தடவைகள் தற்கொலைக்கு முயன்றார் எனவும் தெரிவித்தார்கள். 

    அத்துடன், லியோ வசித்த பிரதேசத்தைச் சேர்ந்த பங்குத் தந்தைமார் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய நபராகக் கருதி அவரை கண்காணிப்பில் வைத்திருந்ததாகவும் நண்பர்கள் தெரிவித்தனர். ஆஸியில் தற்கொலை செய்த இளைஞன்: பெற்றோர் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதில் பிரச்சினை அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட இலங்கை அகதியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக அவரின் குடும்பத்தினருக்கு வீசா வழங்குவதில் பிரச்சினை தோன்றியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

    அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படவிருந்த லியோ சீமான்பிள்ளை என்ற 29 வயது இளைஞர் கடந்த வாரம் தனக்கு தாமே தீமூட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் சீமான்பிள்ளையின் உடலை அவரின் பெற்றோர் தற்போது தஙகியுள்ள இந்தியாவுக்கோ இல்லது இலங்கைக்கோ அனுப்ப அவுஸ்திரேலியா அரசாங்கம் உடன்பட்டுள்ளது. எனினும் அவரின் உடலை அவுஸ்திரேலியாவிலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    பாதுகாப்பை கருத்திற்கொண்டே குடும்பத்தினர் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் மொரிசன், அவுஸ்திரேலியாவுக்கு குறுகிய கால வீசாவில் வந்து செல்ல லியோவின் குடும்பத்தினருக்கு வாய்ப்பு வழங்குவதில் சிக்கல்கள் உள்ளதாக குறிப்பிட்டார். அது தொடர்பில் தாம் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ள போதிலும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் மொரிசன் தெரிவித்தார்.

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஆஸியில் தற்கொலை செய்த இளைஞனின் பெற்றோர் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதில் பிரச்சினை Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top