என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்கள் ஆற்றப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய தினம் ஜெனீவாவில் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 26ம் அமர்வுகளின் ஆரம்ப உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் காரணமாக நிலவிய அச்சம் மற்றும் பீதி இன்னமும் ஓயவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் நிபுணர்கள் அடங்கிய விசேட விசாரணைக் குழுவொன்றை நிறுவியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உலகப் பெறுமானங்களை பாதுகாக்க வேண்டியது அனைத்து நாடுகளினதும் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அநேகமான வன்முறைகள் முரண்பாடுகளுக்கு மனித உரிமை மீறல்களே ஏதுவாகின்றது என அவர் தெரிவித்துள்ளார். எனவே மனித உரிமை மீறல்களை உறுதி செய்ய வேண்டியது அனைத்து நாடுகளினதும் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்படும் அநேக நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை கடுமையாக விமர்சனம் செய்து வருவதாகவும், இது ஓர் வழமையான நிலைமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.