ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளராக
ஜோர்தான் நாட்டுக்கான தூதுவர் இளவரசர் செய்த் அல் ஹுஸைன் நியமிக்கப்பட்டுள்ளார். நீண்டகால அனுபவமுடைய இராஜ தந்திரியும், முன்னாள் ஐ.நா.அமைதி காப்பாளருமான இளவரசர் செய்த் அல் ஹுஸைனின் பெயரை ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெள்ளிக்கிழமை பரிந்துரைத்தார்.
இளவரசர் அல் ஹுஸைன், (வயது 50) ஜோன் ஹோப் கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்றவர். பின் னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற் றார். அத்துடன் இவர் (06 ஆம் பக்கம் பார்க்க) ஜோர்தான் நாட்டுக்கான ஐ.நா.வின் நிரந்தரத் தூதுவராகவும் பணியாற்றி வருகிறார். தென்னாபிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராகப் பணியாற்றும் நவிபிள்ளையின் பதவிக்காலம் 2012ஆம் ஆண்டுடன் நிறைவு பெறவிருந்த நிலையில் மேலும் இரண்டு வருடங்கள் நீடிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய அவர் இவ்வருடம் ஜுலை மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்திலிருந்து புதிய மனித உரிமை ஆணையாளர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். கிழக்கு ஆசியாவின் குரலாக இளவரசர் செய்த் அல் ஹுஸைன் இருப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது. இளவரசர் செய்த், கடந்த ஏப்ரலில் ஐ.நாவுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்குமான தூதுவராகப் பிரேரிக்கப்பட்டார். மேலும் ஐ.நா.செயலாளர் நாயகமாக பான் கீ மூன் தெரிவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அப்பதவிக்கு இளவரசர் செய்த் அல் ஹுஸைனும் போட்டியிட்டிருந்தார்.
சர்வதேச நீதி மற்றும் பாலியல் வன்முறைகள் தொடர்பான விவகாரங்களில் உறுதியான போக்கை இளவரசர் செய்த் கொண்டுள்ளதால் சர்வதேச ரீதியில் உயர்ந்த கௌரவத்தைக் கொண்டவராகவும் அவர் விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை மேற்படி பதவிக்கு முன்னாள் ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனான் ஐ.நா. இரஜதந்திர மர்சுகி தருஷ்மன் ஆகியோரின் பெயர்களும் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவர் கடந்த தைமாதம் ஐ.நா மனிதஉரிமை அவையில் ஆற்றிய உரை
அவர் கடந்த தைமாதம் ஐ.நா மனிதஉரிமை அவையில் ஆற்றிய உரை