முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில சூப்பர் டிப்ஸ்... - TK Copy முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில சூப்பர் டிப்ஸ்... - TK Copy

  • Latest News

    முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில சூப்பர் டிப்ஸ்...

    பெண்களின் அழகை கெடுக்கும் வகையில்
    முகத்தில் வளரும் முடிகள் இருக்கும். அந்த முடிகள் முகத்தை கருமையாகவும், அசிங்கமானதாகவும் வெளிப்படுத்தும். அதிலும் அவர்களுக்கு வாய்க்கு மேல் பகுதியில் தான் முடி வளரும். இது மீசை போன்ற தோற்றத்தைக் கொடுப்பதால், பல பெண்கள் இந்த முடியை நீக்குவதற்கு, வாக்ஸிங், த்ரெட்டிங் மற்றும் ப்ளக்கிங் போன்ற ஹேர் ரிமூவல் முறைகளைப் பயன்படுத்துவார்கள்.

    ஆனால் இவை அனைத்தும் தற்காலிகமானவையே தவிர, நிரந்தரம் அல்ல.அதுமட்டுமின்றி, இவைகளை செய்ய எத்தனை நாட்கள் அழகு நிலையங்களுக்கு செல்ல முடியும். எனவே எப்போதும் தற்காலிக பயன்களைத் தருபவைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தாமதமாக பயன்களை வெளிப்படுத்தினாலும் நிரந்தர பயன்களை அளிக்கக்கூடிய இயற்கை பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை பின்பற்ற முயற்சி செய்யுங்கள். இப்போது முகத்தில் வளரும் முடிகளைப் போக்க உதவியாக இருக்கும் சில இயற்கையான ஹேர் ரிமூவல்களைப் பார்ப்போமா!!!

    • கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். 
    •  கடினமாக இருக்கும் தேனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால், முகத்தில் வளரும் முடிகளை தடுக்கலாம். வேண்டுமெனில், தேனுடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து செய்யலாம். 
    •  சர்க்கரையை நீரில் கலந்து, அதனைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்தால், அது முகத்தில் வளரும் முடிகளை அகற்றும். 
    • எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், அது சருமத்தில் வளரும் முடியை நீக்குகிறதோ இல்லையோ, முடியின் நிறத்தை மங்க வைக்கும். ஆனால் இந்த முறையை தொடர்ந்து செய்தால், நாளடைவில் முடி வளராமல் இருக்கும். 
    •  ஒரு டீஸ்பூன் சோள மாவில், 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை முகத்தில் தடவி, உலர விட்டு கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, இறந்த செல்களும் வெளியேறிவிடும். 
    • அக்காலத்தில் மக்கள் தினமும் மஞ்சள் தேய்த்து குளிப்பதனால் தான், அவர்களது சருமத்தில் முடிகளின்றி, சருமம் பட்டுப்போன்று இருந்தது. எனவே தினமும் இதனை தடவி குளித்து வந்தால், முடிகளின் வளர்ச்சி குறைவதோடு, முடிகளும் நீங்கிவிடும். 
    •  கடுகு எண்ணெய் கூட தேவையில்லாத முடிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். அதற்கு கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிரட்டை பாலில் ஊற வைத்து, அதனை முகத்தில் சிறிது நேரம் தேய்க்க வேண்டும். இதனால் முகத்தில் உள்ள முடி நீங்குவதோடு, முகம் பொலிவோடு இருக்கும்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில சூப்பர் டிப்ஸ்... Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top