வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும்
மாகாணசபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்களுக்கான நியதிச்சட்டங்கள் தொடர்பான செயலமர்வு இன்றைய தினம் யாழ்.பொது நூலகத்தில் அமைந்துள்ள மாகாணசபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
மாகாணசபை பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். “அரசியலமைப்பு கற்கைகளுக்கான” நிறுவனத்தினரால் நியதிச் சட்டங்கள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் மேற்படி நிறுவனத்தின் சட்டத்தரணிகள் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக ஐனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ண தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் நியதிச்சட்டங்கள் தொடர்பிலான கருத்துரைகளை வழங்கினர். இச் செயலமர்வு நாளைய தினமும் நடைபெறவுள்ளது.