வடக்கில் ஆமிக்கு காணி வழங்குவதற்கு தடை - TK Copy வடக்கில் ஆமிக்கு காணி வழங்குவதற்கு தடை - TK Copy

  • Latest News

    வடக்கில் ஆமிக்கு காணி வழங்குவதற்கு தடை

    முப்படையினரால் அடையாளப்படுத்தப்பட்டு, கையகப்படுத்த
    நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 25 காணிகளை, படையினருக்கு வழங்க வேண்டாம் என்று காணி ஆணையாளர் நாயகத்தினால் வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பில் காணி ஆணையாளர் நாயகத்தினால், வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் 27 ஆவது விதியின் கீழ் முப்படையினருக்கும் காணிகளை கையளிப்பது தொடர்பான, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக என்னால் பிரதேச செயலாளரிடமிருந்து பரிந்துரை அறிக்கைகள் பெறப்பட்டிருந்த கீழ் காணப்படும் காணி கையளிப்பு நடவடிக்கைகள் அவசியமற்றது என்று குறிப்பிட்டுள்ளார். 


    புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவத்தின் 14 ஆவது பொறியியல் படைப்பிரிவு கோரிய காணி, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவத்தின் 511 ஆவது தலைமையகம் அமைக்கக் கோரிய காணி, வெள்ளாம் முள்ளி வாய்க்காலில் 19 ஆவது சிங்க தொண்டர் படை கோரிய காணி, 

    கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவத்தின் 27 ஆவது படையணியின் காலாட்படை 'ஏ' குரூப் கோரிய காணி மற்றும் இராணுவத்தின் 5 ஆவது தொண்டர் படையணி கோரிய காணி, கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவத்தின் 20 ஆவது தொண்டர் படையின் விஜயபாகு காலாட்படை கோரிய காணி மற்றும் பாதுகாப்புப் படையணியின் தலைமையகத்தில் விடுமுறை விடுதி அமைப்பதற்கு கோரிய காணி, 
    பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவத்தின் 671 ஆவது படைத் தலைமையகம் கோரிய காணி மற்றும் இராணுவத்தின் 12 ஆவது தொண்டர் படையணியின் விஜயபாகு காலாட்படை கோரிய காணி, நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவத்தின் 27 ஆவது கெமுனு படையணி கோரிய காணி, சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவத்தின் 7 ஆவது விஜயபாகு காலாட் படையணி கோரிய காணி, 

    நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவத்தின் 9 ஆவது தேசிய பாதுகாப்பு படையணி கோரிய காணி, கிளிநொச்சியில் இராணுவத்தின் 25 ஆவது தொண்டர் படையணியின் கஜபாகு படைப் பிரிவு கோரிய காணி, கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவத்தின் 11 ஆவது படையணி கோரிய காணி, இராணுவத்தின் 6 ஆவது தேசிய பாதுகாப்புச் செயலணி கோரிய காணி மற்றும் இராணுவத்தின் 6 ஆவது தேசிய பாதுகாப்புச் செயலணியின் நிலைப்படுத்தப்பட்ட காணி, 

    யாழ்ப்பாணத்தில், இராணுவத்தின் 14 ஆவது கெமுனு தொண்டர் படையணி கோரிய காணி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவத்தின் 4 ஆவது தேசிய பாதுகாப்பு செயலணி கோரிய காணி, முசலி பிரதேச செயலர் பிரிவில் இராணுவத்தின் 25 ஆவது சிங்கப் படைப் பிரிவு கோரிய காணி, நல்லூரில் இராணுவத்தின் 23 ஆவது கஜபாகுப் படைப் பிரிவினர் கோரிய காணி, பச்சிலைப்பள்ளியில் இராணுவத்தின் 4 ஆவது இயந்திரசாதனப் கலாட் படையணி கோரிய காணி, 

    கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவத்தின் 20 ஆவது விஜயபாகு தொண்டர் படையணி கோரிய காணி மற்றும் இராணுவத்தின் 20 ஆவது தொண்டர் படை விஜயபாகு காலாட் படை கோரிய காணி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவத்தின் 1 ஆவது சிங்கப் படைப் பிரிவு கோரிய காணிகளை வழங்க வேண்டாம்''‡ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: வடக்கில் ஆமிக்கு காணி வழங்குவதற்கு தடை Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top