யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் வீதியில் நின்றிருந்த
இளைஞர்கள் நால்வரை படையினரும் பொலிஸாரும் இணைந்து பிடித்துச் சென்ற சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மணியந்தோட்டம் 2ஆம் குறுக்குத் தெருப் பகுதியில் இளைஞர்கள் நால்வர் வீதியோரத்தில் கதைத்துக் கொண்டு நின்றனர். அவ்வேளை அங்கு சென்ற பொலிஸாரும் இராணுவத்தினரும் குறித்த நால்வரையும் பிடித்து யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றதாகத் தெரியவருகிறது.கைதுக்கான காரணம் தெரியவரவில்லை. வீதியோரத்தில் கூட்டமாக நின்றமையே இவர்கள் கைது செய்யப்பட்டமைக்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.