கூகுள் உருவாக்கும் தானியங்கி கார்கள் - TK Copy கூகுள் உருவாக்கும் தானியங்கி கார்கள் - TK Copy

  • Latest News

    கூகுள் உருவாக்கும் தானியங்கி கார்கள்

    இணையதள சேவைகள் மற்றும் தயாரிப்புகளில் முன்னணியில்
    நிற்கும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் கூகுள் ஆகும். இந்த நிறுவனம் தற்போது புதிய தானியங்கி கார்களை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இவற்றில் கட்டுப்பாடுகளோ, ஸ்டீரிங் வீலோ, பெடல்களோ இருக்காது. அதற்கு பதிலாக காரை இயக்குவதற்கும், நிறுத்துவதற்கும் பொத்தான்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கலிபோர்னியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரான செர்கே பிரின் இந்த காரின் தோற்றப் படங்களை வெளியிட்டார். மக்களைப் பயப்படுத்தாதவிதத்தில் நட்பு உணர்வு வெளிப்படும்விதமாக இந்த காரின் முன்புறத் தோற்றம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தானியங்கித் தொழில்நுட்பத்தை மக்கள் ஏற்கும்வகையிலும் இந்த கார் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இருவருக்கான இருக்கைகள் கொண்ட இந்த கார் மின்சார சக்தியில் இயங்கும். ஆரம்பகட்டமாக மணிக்கு 25 மைல் செல்லும்விதமாக இது தயாரிக்கப்படும். 

    பாதசாரிகளுக்குத் தீங்கிழைக்காதவண்ணம் முன்புறம் பஞ்சு போன்ற மென்மையான மேற்புறமும், நெகிழ்வான கண்ணாடியும் இதில் உபயோகப்படுத்தப்படும். லேசர் மற்றும் ரேடார் சென்சார்களைப் பயன்படுத்தி கூகுள் சாலை வரைபடத்தின் துணையுடன் இயங்கும் இந்த கார் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாக அமையும் என்று இந்த நிறுவனத்தின் தானியங்கித் திட்டத்தின் நிறுவனரான கிரிஸ் உர்ம்சன் தெரிவித்தார். இருப்பினும் இதன் வசதி கருதி நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள மக்கள் விரும்புவார்களேயானால் போக்குவரத்து மற்றும் நகரப்பகுதிகள் நெருக்கடி மிகுந்தவையாக மாறும் என்று சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: கூகுள் உருவாக்கும் தானியங்கி கார்கள் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top