கிழக்கு முதலமைச்சரை பணி நீக்குமாறு விடுத்த கோரிக்கையை ஜனதிபதி நிராகரிப்பு - TK Copy கிழக்கு முதலமைச்சரை பணி நீக்குமாறு விடுத்த கோரிக்கையை ஜனதிபதி நிராகரிப்பு - TK Copy

  • Latest News

    கிழக்கு முதலமைச்சரை பணி நீக்குமாறு விடுத்த கோரிக்கையை ஜனதிபதி நிராகரிப்பு

    கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான
    கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சரை பணி நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள் சிலரினால், மாகாண முதலமைச்சர் நஜீப் எ மஜீத்திற்கு எதிராக எழுத்து மூலம் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

    முதலமைச்சர் செயற்திறன் இன்றி செயற்பட்டு வருவதாகவும், உதாசீனமான கொள்கைகளை கடைப்பிடிப்பதாகவும் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். மாகாணசபை உறுப்பினர்களின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடாத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். 

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் முதலமைச்சர் மஜித்தின் பதவிக் காலம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் காங்கிரசும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தலா இரண்டரை ஆண்டுகள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வகிப்பது என இணக்கம் காணப்பட்டிருந்தது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: கிழக்கு முதலமைச்சரை பணி நீக்குமாறு விடுத்த கோரிக்கையை ஜனதிபதி நிராகரிப்பு Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top