ஜவஹர்லால் நேருவை ஆசியாவின் ஒளி என்று
அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் வர்ணித்தார். ஆனால் நீண்ட காலம் ஆசியாவின் ஒளியாக திகழ்ந்த நேருவின் குடும்பம், நாட்டின் எதரி்காலத்தை, காங்கிரஸ் கட்சியை தற்போது இருளில் தள்ளியுள்ளது. 2014, மே 16 அன்று பிற்பகலில் காங்கிரசின் மிக நீண்ட வெற்றிப் பயணம், இருள் சூழ்ந்த பாதையாக மாற்றப்பட்டது.
அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் வர்ணித்தார். ஆனால் நீண்ட காலம் ஆசியாவின் ஒளியாக திகழ்ந்த நேருவின் குடும்பம், நாட்டின் எதரி்காலத்தை, காங்கிரஸ் கட்சியை தற்போது இருளில் தள்ளியுள்ளது. 2014, மே 16 அன்று பிற்பகலில் காங்கிரசின் மிக நீண்ட வெற்றிப் பயணம், இருள் சூழ்ந்த பாதையாக மாற்றப்பட்டது.
தேசிய அரசியலில் தனிப்பெரும் பலத்துடன் அசைக்க முடியாத கட்சியாக திகழ்ந்த காங்கிரஸ் தற்போது தனித்து விடப்பட்டுள்ள நிலையில், அது தனது தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல், மத்திய அரசுடன் முரட்டுத்தனமான போக்கை கடைபிடிக்குமா அல்லது நீரில் கரையும் உப்பைப் போன்று சூழ்நிலையை புரிந்து கொண்டு தன்னை மாற்றிக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
காங்கிரஸ் தனது ஆட்சி காலத்தில், வெற்றி, பரம்பரை ஆட்சி, முட்டாள்தனம் என பலவற்றை வெளிப்படுத்தி உள்ளது. வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்களின் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. சோனியாவும், ராகுலும் மட்டுமே காங்கிரஸ் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டனர். இவர்கள் இருவரைத் தவிர மற்றவர்களை தலைமை பொறுப்பிற்கும், முடிவெடுக்கும் அதிகாரத்தையும் நெருங்க விடாமல் செய்ததும் காங்கிரசின் மிகப் பெரிய வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.
பரம்பரை ஆட்சி:ஆசியாவின் ஒளி என வின்ஸ்டன் சர்ச்சிலால் புகழ்ப்பட்ட நேரு, பரம்பரை ஆட்சியை உருவாக்கவில்லை என்ற போதும் அவரே துவக்கமாக இருந்துள்ளார். அவரைத் தொடர்ந்து மிக நீண்ட காலமாக அவரது குடும்ப உறுப்பினர்களே இந்தியாவை ஆட்சி செய்து வந்துள்ளனர். பல வகையிலும் பெருமை பெற்ற குடும்பத்தின் பெருமையை, ஆசியாவின் ஜோதியை இருளடைய செய்தது, சோனியாவும் அவரது மகனும் கட்சியின் துணைத்தலைவருமான ராகுலும் மட்டுமே என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக ராகுல், கட்சியின் தலைமை, கட்சியின் செயல் திட்டங்களை முடிவு செய்வது, வேட்பாளர்கள் தேர்வு என அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சித்தார். அதன் விளைவு, இறுதியில் அவரே கட்சி பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என கூறும் அளவிற்கு தோல்வியை ஏற்படுத்தி கொடுத்து விட்டது. அந்த ராஜினாமா முடிவும் உடனடியாக திரும்பப் பெறப்பட்டது.
படுதோல்விக்கு பிறகும் கட்சியின் தலைமை தாங்களாகவே இருக்க வேண்டும் என சோனியாவும், ராகுலும் கருதுகின்றனர். இருப்பினும் தான் லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக இருக்க மாட்டேன் என ராகுல் கூறி உள்ளார். ஒருவேளை 44 எம்.பி.,களுடன் லோக்சபாவின் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை அவர் புறக்கணித்தால் அவர் நாட்டின் தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர் அல்ல என்பதும், பொறுப்புக்களில் இருந்து விலகி ஓட நினைக்கிறார் எனபதும் நிரூபவமாகிவிடும். இதனை மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டார்கள் என்றே கூறலாம்.
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் கூறுகையில், தலைவர் என்பவர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும் என ஒரு முறை தெரிவித்திருந்தார்.
வரலாற்று எழுத்தாளர் டேனியல் டிபியோ குறிப்பிடுகையில், 400 ஆண்டுகளுக்கு பிறகு நேரு-காந்தி குடும்பத்தில் இருந்து மாறுபட்ட அதிசயிக்கத்தக்க உடையில் ஒருவர் வந்துள்ளார்; ராகுல், சிங்கத்தோல் போர்த்திய ஆடு; அவர் எதிராளிகளை பார்த்து பயப்படுகிறார்; அதேசமயம் அவருக்கு அவரது நிலை குறித்து நன்றாகவே தெரியும்; அவர் ராணுவத்தை வழிநடத்துபவராக இருந்தால் அவர் ஆடா அல்லது சிங்கமா என்பது அவருக்கே குழப்பம் வந்து விடும்; சிங்கங்களின் கூட்டத்திற்கு ஒரு ஆடு தலைமை ஏற்பதை விட, ஆடுகளின் கூட்டத்திற்கு சிங்கம் தலைமை வகிப்பதே சிறந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
காங்கிரசிற்குள் அவர்களை கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற போதிலும், அவர்கள் கட்சியினரே ராகுலை கேலி பேசினர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெற்கில் இருந்து ஒருவரும், வடக்கில் இருந்து ஒருவரும் ராகுலை 'ஜோக்கர்' என்று விமர்சித்துள்ளனர். ராகுலின் முரண்பட்ட செயல்பாடுகளால் இத்தகைய விமர்சனத்தை அவர்கள் முன்வைத்துள்ளனர். அவரை ஜோக்கர் என்று கூற யாரும் விரும்பவில்லை தான். இருந்த போதிலும் நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் சிக்கலான சூழ்நிலையை சமாளிக்க, கேலிகூத்தான, முரண்பாடான செயல்பாடுகளைக் கொண்ட ஒருவர் மக்களை வழிநடத்துபவராக இருக்க தகுதியானவராக இருக்க முடியாது.
மாய உலகில் காங்கிரஸ்:தற்போது வரை லோக்சபாவில் காங்கிரஸ் தலைவராக தாங்களே இருக்க வேண்டும் என்று தான் ராகுலும், சோனியாவும் கருதுகின்றனர். மாற்றவர்கள் தலைமை பொறுப்பிற்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை; அடிமட்ட தொண்டர்கள் கட்சியில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இல்லை. தலைமையை எதிர்த்து கேள்வி கேட்கும் திறனும், கோரிக்கையை வலியுறுத்தும் திறனும் காங்கிரஸ் கட்சிக்குள் யாருக்கும் இல்லாமல் போனதே இதற்கு முக்கிய காரணம்.
காங்கிரசிற்குள் இருக்கும் பிரச்னை மிகப் பெரியது. அதை தீர்ப்பதற்கான தீர்வும் அனைவருக்கும் தெளிவாக தெரிகிறது. இருப்பினும் காங்கிரஸ் இன்னும் மாய உலகிற்குள்ளேயே வாழ்ந்து வருகிறது.
- டெய்லி பயோனியர் நாளிதழ்-