இலங்கையர்களின் விண்ணப்பங்களை மீள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ள அந்நாட்டு குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கையர்கள் தமக்கு சுவிஸ் குடியுரிமையை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனடிப்படையில் ஆயிரத்து 800 விண்ணப்பங்களை மீள் பரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் குடியேற்ற விவகாரங்கள் தொடர்பான அலுவலகம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் விண்ணப்பங்களில் நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களுக்குரியவர்களை சுவிஸ் அதிகாரிகள் நாடுகடத்த மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 2 ஆயிரம் இலங்கையர்கள் அரசியல் தஞ்சம் கோரி சுவிட்சர்லாந்து குடியேற்ற விவகாரங்கள் தொடர்பான அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.
இலங்கையில் தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலை காரணமாக அந்த விண்ணப்பங்களை நிராகரிக்க சுவிட்சர்லாந்து அரசாங்கம் முயற்சித்து வந்தது. எனினும் புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை அடுத்து விண்ணப்பங்களை நிராகரிப்பதை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.