கடற்­கொள்­ளை­யர்­க­ளி­ட­மி­ருந்து தப்பி வந்த நீர்­கொ­ழும்பு நிரோஷன் செவ்வி - TK Copy கடற்­கொள்­ளை­யர்­க­ளி­ட­மி­ருந்து தப்பி வந்த நீர்­கொ­ழும்பு நிரோஷன் செவ்வி - TK Copy

  • Latest News

    கடற்­கொள்­ளை­யர்­க­ளி­ட­மி­ருந்து தப்பி வந்த நீர்­கொ­ழும்பு நிரோஷன் செவ்வி

    நான் பட்ட துன்­பத்தை வாழ்­நாளில் மறக்க முடி­யாது.
    உட­லாலும் உள்­ளத்­தாலும் மிகவும் சோர்­வ­டைந்­துள்ளேன். ஒரு நாளைக்கு இரண்டு வேளையே உணவு தரப்­பட்­டது. காலை ஒன்­பது பத்து மணி­ய­ளவில் ரொட்­டியும் சீனியும், மாலை ஆறு மணி­ய­ளவில் வெறும் சோறும் சீனியும் வழங்­கு­வார்கள். இரண்டு வேளை வெறும் தேநீர் வழங்­கு­வார்கள்.

    குடிப்­ப­தற்கு சுத்­த­மான தண்ணீர் கிடை­யாது. நாங்கள் கடு­மை­யாக துன்­பு­றுத்­தப்­பட்டோம் என்று சோமா­லிய கடற்­கொள்­ளை­யர்­களின் பிடி­யி­லி­ருந்து உயிர் தப்பி வந்த இலங்­கை­யர்கள் ஒரு­வ­ரான நீர்­கொ­ழும்பு முன்­னக்­கரை பிர­தே­சத்தைச் சேர்ந்த அன்­ரனி நிரோஷன் பெரேரா தெரி­வித்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திக­தி ­சோ­மா­லிய கடற்­கொள்­ளை­யர்­களால் மலே­சிய கம்­பனி ஒன்­றுக்கு சொந்­த­மான 'எம்.வி. அல்­பேடோ' என்ற கப்­பலின் 23 பணி­யா­ளர்கள் கடத்­தப்­பட்­டனர். 

    அந்தக் கப்­பலில் இலங்­கையைச் சேர்ந்த அறு­வரும், இந்­தி­யாவைச் சேர்ந்த இரு­வரும், ஈரானைச் சேர்ந்த ஒரு­வரும், பங்­க­ளா­தேஷைச் சேர்ந்த ஏழு ­பேரும், பாகிஸ்­தானைச் சேர்ந்த ஏழு­பேரும் உள்­ள­டங்­குவர். இந்த கப்­பலில் பணி­யாற்­றிய 23 பேரில் நால்வர் கடலில் மூழ்கி உயி­ரி­ழந்­தனர். பாகிஸ்­தானைச் சேர்ந்த ஏழு பேர் 2013 ஆம் ஆண்டு கப்பம் பணம் வழங்கி விடு­விக்­கப்­பட்ட நிலையில் ஏனையோர் கடற் கொள்­ளை­யர்­களின் பிடி­யி­லி­ருந்து தப்­பி­யுள்­ளனர். 
    இவ்­வாறு தப்­பிய கப்­பலின் இயந்­திரப் பிரிவில் பணி­யாற்­றிய நீர்­கொ­ழும்பு முன்­னக்­க­ரையைச் சேர்ந்த அன்­ரனி நிரோஷன் பெரேரா, இரண்டாம் நிலை கப்பற் பொறி­யி­ய­லா­ள­ரான முகம்மட் பிஸ்­தாமி ஆகியோர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இலங்­கையை வந்­த­டைந்­தனர். நீர்­கொ­ழும்பு முன்­னக்­க­ரையைச் சேர்ந்த அன்­ரனி நிரோஷன் பெரேரா கடற்­கொள்­ளை­யர்­களின் பிடி­யி­லி­ருந்­த­போது அனு­ப­வித்த துன்­பங்­களை வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார் சோமா­லிய கடற்­கொள்­ளை­யர்­க­ளினால் கடும் சித்­திரவதைக்கு உள்­ளாக்­கப்­பட்டோம். 

    கடற்­கொள்­ளை­யர்கள் எங்­க­ளிடம் பல மில்­லியன் டொலர் கப்பப் பணம் கேட்டு எம்மைத் தாக்­கு­வார்கள். எங்­க­ளது கண்­க­ளையும் கைக­ளையும் கட்டி துப்­பாக்­கியால் எம்மைத் தாக்­கு­வார்கள். நாங்கள் பல்­வேறு வகை­க­ளிலும் துன்­பு­றுத்­தப்­பட்டோம். உயிர் தப்­புவோம் என்று ஒரு போதும் நம்­ப­வில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி இரவு எமது கப்பல் கடலில் மூழ்­கி­யது. அதற்கு முன்­ன­தாக கப்­பலின் அடிப்­ப­கு­தியில் சிறிய ஓட்டை ஏற்­பட்­டி­ருந்­தது. 

    மூன்று மாதக் காலப்­ப­கு­தி­யி­லேயே அது இவ்­வாறு மூழ்­கி­யது. எமது கப்­ப­லுக்கு சற்று தூரத்தில் கொள்­ளை­யர்­க­ளினால் கைப்­பற்­றப்­பட்ட இன்­னொரு கப்பல் எரி­பொருள் இன்றி நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. எமது கப்பல் மூழ்­கு­வ­தற்கு முன்­ன­தாக அந்தக் கப்­பலில் இருந்த கொள்­ளை­யர்கள் எமது கப்­ப­லுக்கு பெரிய கயிறு ஒன்­றினால் இணைப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். அத்­துடன் கட­லுக்குள் பெரிய 'ரெஜி­போம்­களை' படகு போல் செய்து போட்டு அதில் ஏறித் தப்­பிக்­கு­மாறு எமக்கு பணித்­தனர். எமது கப்பல் நின்­றி­ருந்த கடல் பகுதி 30 மீற்றர் ஆழ­மா­ன­தாகும். 

    இதனை நான் வலைகள் மற்றும் தூண்டில் கொண்டு மீன் பிடிக்கும் போது அறிந்து வைத்­தி­ருந்தேன். எமது கப்­பலின் உயரம் 40 மீற்­ற­ராகும். இந்­நி­லையில் எமது கப்­பலில் இருந்த பதி­னைந்து பேர்­களில் பத்து பேர் ஒரு­வாறு அடுத்த கப்­ப­லுக்குள் ஏறி­விட்­டனர். எம்­முடன் இருந்த பிர­தான பொறி­யி­ய­லா­ள­ரான எமது நாட்டைச் சேர்ந்த நலீன் வக்­வெல்ல இரு கப்­ப­லுக்கும் இடையில் இணைக்­கப்­பட்­டி­ருந்த கயிற்றைப் பற்­றிப்­பி­டித்துக் கொண்டு அத­னூ­டாகச் சென்று அடுத்த கப்­பலில் ஏற முயன்ற போதும், அது அவரால் முடி­ய­வில்லை. அவர் கடலில் மூழ்கி காணாமல் போனார். 

    இதன்­போது எமது நாட்டைச் சேர்ந்த மூன்றாம் நிலை பொறி­யி­ய­லாளர் சந்­தி­ர­சிறி பெரேரா, இரண்டாம் நிலை அதி­காரி ராஜா சில்வா, மற்­றொரு அதி­கா­ரி­யான அன்­ரனி பொனி பொஸ் பெரேரா ஆகியோர் கடலில் மூழ்கி காணாமல் போனார்கள். அதற்கு முன்­ன­தாக எமது கப்­ப­லுடன் இணைக்­கப்பட்­டி­ருந்த கயிறும் கொள்­ளை­யர்­க­ளினால் வெட்டி அறுக்­கப்­பட்­டது. எமது கப்பல் மூழ்கும் போது தமது கப்­பலும் மூழ்கும் என்ற கார­ணத்­தினால் கொள்­ளை­யர்கள் கயிறை அறுத்­தனர் நான் கப்­பலின் மேல் தளத்­திற்குச் சென்று அங்­கி­ருந்த கயி­றொன்றை பற்­றிப்­பி­டித்­த­படி உயிரைக் காப்­பாற்றிக் கொண்டேன். 

    காரணம் 40 மீற்றர் உய­ர­மான கப்பல் 30 மீற்றர் ஆழ­மான கடலில் முழு­மை­யாக மூழ்­காது என்று நான் எடுத்த உறு­தி­யான தீர்­மா­ன­மாகும். ஆயினும் மற்­றை­ய­வர்கள் பயத்தின் கார­ண­மாக அடுத்த கப்­ப­லுக்கு செல்ல முயன்று அதில் நால்வர் உயி­ரி­ழந்­தனர். இந்­நி­லையில், நாங்கள் தப்­பிப்­ப­தற்கு திட்டம் தீட்­டினோம். காரணம், புதிய குழு ஒன்­றுக்கு நாங்கள் ஒப்­ப­டைக்­கப்­பட இருந்தோம். அந்த குழு­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டால் நிச்­சயம் நாங்கள் அனை­வரும் கொலை செய்­யப்­ப­டுவோம் என்­பதை அறிந்­தி­ருந்தோம். 

    அதற்கு கொள்­ளை­யர்­களில் மூவ­ருடன் நாங்கள் இர­க­சி­ய­மாக கலந்­து­ரை­யா­டினோம். மொழி பெயர்ப்­பாளர், காவல் பணியில் ஈடு­பட்ட இருவர் அடங்­க­லான மூவர் அதற்கு உடன்­பட்­டனர். இரண்டு இலட்சம் டொலர் அதற்­காக வழங்­கு­வ­தற்கு உடன்­பாடு காணப்­பட்­டது. எமது உற­வி­னர்கள் சேக­ரித்த சிறிய தொகை பணத்­துடன் பெயர் குறிப்­பிட விரும்­பாத தன்­னார்வ அமைப்­பொன்று வழங்­கிய பணம் ஆகி­ய­வற்றைச் சேர்த்து ஐக்­கிய நாடுகள் அலு­வ­லகம் ஊடாக இரண்டு இலட்சம் டொலர் பணம் வழங்­கப்­பட்­டது. 

    இதன்­கா­ர­ண­மாக எமக்கு கைய­டக்க தொலை­பேசி ஒன்று வழங்­கப்­பட்­டது. அங்­கி­ருந்து தப்­பிப்­ப­தற்கு போட்ட திட்­டத்தின் அடிப்­ப­டையில் தூக்க மாத்­தி­ரை­களை கொள்­ளை­யர்கள் அருந்தும் தேநீரில் கலந்து கொடுத்தோம். ஆனால், அவர்­களுக்கு அது பல­ன­ளிக்­க­வில்லை. கொள்­ளை­யர்கள் இரவு விழித்­தி­ருப்­ப­தற்­காக ஒரு வகை இலை­களை மென்று உண்­பார்கள் , சீனி கலந்த சுடு தண்­ணீரை தயா­ராக வைத்­தி­ருந்து அதில் அந்த இலையை போட்டு அருந்­து­வார்கள். நாங்கள் அவர்கள் அருந்தும் தேநீரில் தூக்க மாத்­தி­ரை­களை கலந்த போதும் அதனால் பலன் கிடைக்­க­வில்லை. 

    மூன்­றா­வது நாளான கடந்த 6 ஆம் திகதி நள்­ளி­ரவு 2.30 மணி­ய­ளவில் யாரும் அறி­யாத வகையில் யன்னல் கத­வு­களை உடைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தோம். 400 மீற்றர் துரத்தில் வாகனம் ஒன்று எமக்காக தயாராக நின்றது. அந்த வாகனத்தில் இருந்தோர் எம்மை 8 கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் கொண்டு சென்று காட்டில் விட்டனர். அதன்போது அவர்கள் ஒருவருடைய தொலைபேசி இலக்கமொன்றை தந்தனர். காட்டில் பத்து கிலோமீற்றர் வரை நடந்தும் ஓடியும் சென்றோம். 

    அங்கிருந்து அந்த தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது இரண்டு வாகனங்கள் எம்மை அரை மணித்தியால துாரம் வரை அழைத்துச் சென்று 'கல்காயே' என்ற பகுதியை அடைந்தன. விடியற்காலை அங்கு வைத்து சோமாலிய அரச அதிகாரிகள் எம்மை பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைத் தனர்" என்றார்.

    யார் இந்த கடல்கொள்ளைக்காரர் 1ஆம் பாகம்

    யார் இந்த கடல்கொள்ளைக்காரர் 2 ஆம் பாகம்


    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: கடற்­கொள்­ளை­யர்­க­ளி­ட­மி­ருந்து தப்பி வந்த நீர்­கொ­ழும்பு நிரோஷன் செவ்வி Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top