இன்று நண்பகல் அளுத்கம பகுதியில் ஒன்று திரண்ட இனவாதிகள்
அளுத்கமயில் இருந்து அதிவேக பாதைக்கு செல்லும் பாதையை மறித்து ஊர்வலம் செல்வதாக தெரிய வருகிறது.இதனால் அதிவேக பாதைக்கு செல்லும் பாதையில் நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், போலீசார் கண்ணீர் புகை தாக்குதல் நடத்துவதாகவும், துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்பதாகவும் எமது நிருபர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் சற்றுமுன் (மத்துகம) பிரதேசத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களால் பணயக் கைதியாக பிடிக்கப்பட்டு விடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆர்பாட்டம் சற்றுமுன் வரை நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும் தெரிய வருகிறது.
அதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாது போகும் பட்சத்தில் துப்பாக்கி பிரயோகம் செய்ய போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது ?
நீதி அமைச்சர் ஹக்கீமின் வாகனத்தின் முன்னால் அதிர்ச்சியுடன் கதறி அழும் முஸ்லிம் சகோதரர்.
அளுத்கமவில் துப்பாக்கிச்சூடு! மூவர் பலி- சட்டத்தை மீறியோருக்கு தண்டனை வழங்கப்படும்: ஜனாதிபதி
அளுத்கமவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், வல்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலர் காயமுற்ற நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் தவித்துக்கொண்டிருப்பதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இவ்வுயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்பு கொண்டு கேட்டபோது, இன்னமும் தங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
இரண்டாம் இணைப்பு
களுத்துறை மாவட்டம் அளுத்கம பிரதேசத்தில் கடும்போக்கு பௌத்த - சிங்கள இளைஞர்களுக்கும், அப்பகுதியின் முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் வன்முறைகள் வெடித்தன. இதனால் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பலர் தாக்கப்பட்டனர்.
இதுதவிர கோதாபிட்டிய, மீரிபென்ன, அட்ஹிகரகொட பகுதிகளில் முஸ்லிம்களின் வீடுகளும் தீயிட்டு எரிக்கப்பட்டன என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.
இந்த வன்முறைகளை அடுத்து அப்பகுதிக்கு விசேட அதிரடிப்படை பொலிஸார் அனுப்பப்பட்டு அளுத்கம, பேருவளை பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார். அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை தாம் கைது செய்துள்ளனர் எனவும் குறித்த பகுதியை விசேட அதிரடிப்படைப் பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையிலேயே வல்பிட்டி பள்ளிவாசலுக்கு அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியானதாகவும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற முடியாத நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
எனினும் இவை தொடர்பில் பொலிஸார் தமக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்
சட்டத்தை மீறியோருக்கு தண்டனை வழங்கப்படும்: ஜனாதிபதி
அளுத்கமவில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு எவரையும் அரசாங்கம் அனுமதிக்காது எனவும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறும், அளுத்கமவில் இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது தண்டனையை வழங்குவதற்காக விசாரணை ஒன்று இடம்பெறும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.