புலிகளைப் புகழ்ந்த சில சிங்களத் தளபதிகள் --அங்கம் 1. - TK Copy புலிகளைப் புகழ்ந்த சில சிங்களத் தளபதிகள் --அங்கம் 1. - TK Copy

  • Latest News

    புலிகளைப் புகழ்ந்த சில சிங்களத் தளபதிகள் --அங்கம் 1.


    1992 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலிகளின் தாக்குதல்கள்
    மிகப்பெரிய வெற்றிகளைக் கொடுத்த காலம் அது.அப்போதுதான் புத்தளம் கடற் பரப்பில் கடற்புலிகளின் மகளிர் அமைப்புத் தளபதியும் வேறு சிலரும் 'சாகரவர்த்தனா' என்னும் சிங்களக் கப்பலை கரும்புலிப் படகுமூலம் சிதைத்தார்கள்..


    அடுத்த சில நாட்களில் தளபதி சூசையிடம் இருந்து எனக்கு அழைப்பு ஒன்று வந்தது..



    போனேன்...

    சாகரவர்த்தனா'போர்க்கப்பலின் கப்டனை உயிரோடு பிடித்து வைத்திருக்கும் விடயத்தை என்னிடம் சூசை சொன்னபோது..

    மகிழ்ச்சிக் கடலில் குதித்தேன்.இயக்கத்தில் கூட பெரும்பாலானோருக்கு அப்போது தெரியாமல் இருந்த விடயம் அது!

    "நீங்கள் போய் அவனோடு கொஞ்ச நேரம் ஆங்கிலத்தில் பேசுங்கள் அண்ணை"-என்றார் சூசை.

    என்னுடன் ஓர் போராளியை அனுப்பினார்.இருவரும் சென்றபோது ,வெளிறிய நிறத்தில் ஓர் தடியன் ஓர் வீட்டில் ஒய்யாரமாக 'குசன்' ஆசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.

    இவர்தான் கப்டன்..என்று சொன்னார் என்னுடன் வந்த போராளி..

    ஓ..சிறைப் பிடிக்கப் பட்ட ஓர் போர்க் கைதிபோலவா இயக்கம் இவரை வைத்திருக்கிறது.?

    ஐந்து நட்சத்திர உல்லாச விடுதியில் அமர்ந்திருக்கும் விருந்தாளிபோல் அவரை வைத்திருந்தார்கள். என்னை அறிமுகப் படுத்தி விட்டு என்னுடன் வந்த போராளி விலகிவிட்டார்.அவருடன் ஆங்கிலத்தில் பேசினேன்..

    என்ன குறை இங்கே உள்ளது..சாப்பாடு எப்படி?
    என்று அவரிடம் கேட்டேன் "கப்பல் நொறுங்கியதும் நான் தப்ப நினைத்தேன் முடியவில்லை..

    புலிகள் முரடர்கள்,பயங்கரவாதிகள்,இவர்களின் கையில் சிக்குவதை விட சாகலாம் என்று நினைத்தபோது,பெண் புலிகள்-ஆண்புலிகள் சேர்ந்து என்னைக் கைது செய்தார்கள்..

    ஆனால், இங்கே கொண்டு வந்து அவர்கள் விட்டபோதும்,விதம் விதமான உணவுகள் தந்து உபசரித்தபோதும், புதிய உடைகளை அணியச் சொல்லியபோதும்,தளபதி முதல் புலிகள் எல்லோரும் என்னுடன் அன்பாக பழகியபோதும் நான் மனத்தால் உடைந்து விட்டேன்....

    இவர்களையா இத்தனை காலம் தப்பாக நினைத்திருந்தேன் என்று......"
    இது அன்று நடந்தது .இன்று போர்முனையில் பிடிபட்ட புலிகளை 
    சித்திரவதை செய்து கொல்கிறது சிங்கள இனவாத அரசு..
    பார்வையின் இரு பக்கங்கள் இவை......

    மு .வே .யோகேஸ்வரன் 


    சாகரவர்த்தனா மூழ்கடிப்பு சம்பவத்தில் வீரகாவியமான கரும்புலி மாவீரர்கள்.



    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: புலிகளைப் புகழ்ந்த சில சிங்களத் தளபதிகள் --அங்கம் 1. Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top