அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த 7-வது பிரீமியர் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடந்த பைனலில் பஞ்சாப் அணியும் கோல்கட்டா அணியும் மோதின.
முதல் பிளே ஆப் சுற்றில் பஞ்சாப்
அணி கோல்கட்டா அணியிடம் தோல்விடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் முதல் முறையாக கோப்பை வெல்ல பஞ்சாப் அணியும், இரண்டாவது முறையாககோப்பை வெல்ல கோல்கட்டா அணியும் தீவிரம் காட்டின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பீர் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து பஞ்சாப் அணி களமிறங்கியது.
துவக்க வீரராக களமிறங்கிய சேவக் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். பியூஸ் சாவ்லா 67 ரன்னிலும், கேப்டன் பெய்லி ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் டக் அவுட்டானார்.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சகா சிறப்பாக விளையாடி சதமடித்தார். 55 பந்துகளை சந்தித்த சகா, 115 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். பிரீமியர் கிரிக்கெட் தொடரின் பைனலில் முதல் சதமடித்த வீரர் என்ற பெருமையையும் சகா பெற்றார்.
இதன் பின்னர் 200 ரன்கள் என்ற இலக்குடன் கோல்கட்டா அணி களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய உத்தப்பா 6 ரன்னில் அவுட்டானார். கேப்டன் காம்பீர் 23 ரன்னில் அவுட்டானார்.
அதிரடியாக விளையாடிய மணிஸ் பாண்டே 94 ரன்னில் அவுட்டானார். யூசுப் பதான் 36 ரன்னிலும், அல் ஹசன் 12 ரன்னிலும், ரியான் டென் 4 ரன்னிலும் அவுட்டானார்கள்.
இறுதியில் கோல்கட்டா அணி 19.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.
இது கோல்கட்டா அணி கைப்பற்றும் இரண்டாவது கோப்பையாகும்.