இலங்கை நாடாளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் நாடாளுமன்ற
உறுப்பினர்களின் தரவரிசை பட்டியலை ஆங்கில இணையம் ஒன்று வெளியிட்டுள்ளது.தரப்படுத்தல்படி நாடாளுமன்றில் துடிப்பாக சிறந்து செயற்படும் உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இறுதி இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஆளும் கட்சிக்குத் தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன உள்ளார்.
தரவரிசையில் இரண்டாம் இடத்தை மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் மூன்றாம் இடத்தை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் பெற்றுள்ளனர்.
31ஆவது இடத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் முன்னணியில் உள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 40ஆவது இடத்திலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 84ஆவது இடத்திலும் உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் 33ஆவது இடத்திலும் அரியநேத்திரன் 44ஆவது இடத்திலும் உள்ளனர்.