தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்ட்ரால் குறையும் - TK Copy தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்ட்ரால் குறையும் - TK Copy

  • Latest News

    தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்ட்ரால் குறையும்

    கொய்யாவின் சுவையை அறியாதவர்கள் யாரும்
    இருக்க முடியாது. மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் கொய்யா, அதிக சத்துகளைக் கொண்டதாகத் திகழ்கிறது. கொய்யா கோடைக் காலத்தில்தான் அதிகமாக விளையும். தற்போது உயிரித் தொழில்நுட்ப முறையில் ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

    கொய்யாவில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, நெல்லிக்கு அடுத்து அதிக வைட்டமின் 'சி' சத்து உள்ள பழம் கொய்யாதான். கொய்யாவின் பிற மருத்துவ குணங்கள்... நோயின் ஆரம்பமே மலச்சிக்கல் தான். அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்து தான் தொடங்கும். நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் நீங்கும். 

    குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும். தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகின்றன. இதைப் போக்க, உணவுக்குப் பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள் கொய்யாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் மூல நோய் தீர்ந்துவிடும். கொய்யா கோடைக் காலத்தில்தான் அதிகமாக விளையும். 

    தற்போது உயிரித் தொழில்நுட்ப முறை தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகின்றன. இதைப் போக்க, உணவுக்குப் பின் கொய்யாப் உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடலின் பித்தத் தன்மை மாறுபடும். இதனால் உடல்நல பாதிப்பும் ஏற்படும். 

    இதைத் தவிர்த்து, கல்லீரலைப் பலப்படுத்த அடிக்கடி கொய்யாப்பழத்தை உண்பது நல்லது. சர்க்கரை நோய் ஏற்பட்டாலே, அதைச் சாப்பிடக்கூடாது, இதைச் சாப்பிடக் கூடாது என்று அநேக கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். ஆனால் நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு. 

    ரத்தத்தில் இரும்புச் சத்து குறையும்போது ரத்தசோகை ஏற்படுகிறது. இந்தியக் குழந்தைகளில், அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இக்குறையை பழங்களும், கீரைகளும் நிவர்த்தி செய்யும். குறிப்பாக கொய்யாப்பழம், ரத்த சோகையை மாற்றும் தன்மை கொண்டது. குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் 'சி' சத்து கொய்யாப் பழத்தில் அதிகம் உள்ளது. 

    குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்துவந்தால் அவர்களின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். அறிவுத்திறன் அதிகரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும். நரம்புகளைப் பலப்படுத்தி, உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்ட்ரால் குறையும். இதயப் படபடப்பையும் கொய்யா போக்கும். Back to News Bookmark and Share Seithy.com
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்ட்ரால் குறையும் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top