வா தமிழா - கவிதை - TK Copy வா தமிழா - கவிதை - TK Copy

  • Latest News

    வா தமிழா - கவிதை

    கோடுபோட்டு வாழ்ந்த கூட்டம்
    கொடுங்கோலில் சிக்கி யின்று
    சின்னாபின்ன மாகும் நிலை
    தாங்கவொணா துயர மையா
    இராவணன் தேச மென்றும்
    சிவபூமி என்றும் அன்று
    பேசப்பட்ட பூமி யின்று
    மாற்றானிட மான நிலை
    சேர சோழ பாண்டியரில்
    சோழனவன் நல்ல ஆட்சி
    செய்தகதை உங்க ளுக்கும்
    தெரிந்தகதை தானே இங்கு
    நாமிங்கு எங்க ளினம்
    பற்றித் தீரக் கதைப்பதற்கு
    நாமின்றி இவர்கள் செய்த
    பாரபட்சம் தானே கெதி
    சிங்களவர் முஸ்லி மெனும்
    ஈரினமும் சண்டை போட
    தீர்த்து வைத்து புத்திசொன்ன
    சீத்துவ இன மெமது
    உலகத்திலே தொகை மதிப்பில்
    குறைவுடைய மக்கள் கூட
    தங்களுக்காய் நாடு கொண்டு
    சுதந்திர மாய்வாழு கயில்

    கிட்டத்தட்டப் பத்துக் கோடி
    பேரைக்கொண்ட எங்க ளினம்
    கூடுஅற்ற குயிலையொப்ப
    அனாதரவாய் வாழ்வ தென்னே?
    எம்மவர்க்கு என்று ஒரு
    பண்பாடு யிருக்க அதை
    சீரழிக்க எடுக்கப் படும்
    முயற்சி யெங்கள் கண்கூடு!
    மூத்த இனம் எங்களினம்
    மூத்த மொழி எங்கள்மொழி
    முன்னோடி யான நாங்கள்
    முளங்காலில் நிற்க லாமா?
    தமிழரென்றால் பெருமை கொள்வர்
    தமிழ்ப்பேச்சில் இனிமை கொள்வர்
    தயக்கம் விட்டு பகையறுத்து
    தரணி கொள்வோம் வாதமிழா!
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: வா தமிழா - கவிதை Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top