தமிழினத்தின் மீது கோரத்தாண்டவம் ஆடித் தமிழின அழிப்பை மேற்கொண்டவர்களில் ஒரு முக்கிய சிங்கள இராணுவத் தளபதியும்,
இன்று யாழ்மாவட்டத்தில் ஒரு தலைமுறையையே அழிவின் திசை நோக்கி நகர்த்திக் கொண்டு இன்னமும் இனப்படுகொலையின் வேறொரு வடிவத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பவருமான மேஜர் ஜெனரல் உதய பெரேரா அமெரிக்க இராணுவப் பல்கலைக்கழகத்தில் 2012 ஆம் ஆண்டு பட்டம் பெற்றுள்ளார். ஒட்டு மொத்தத் தமிழினத்தையே பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி எம் மீதும் எமது தேசிய இனத்தின் காவலர்களான விடுதலைப் புலிகள் மீதும் மக்கள் மீதும் மேற்கொண்ட இனவழிப்பின் உச்சத்திற்கே இவருக்கு இந்தப் பயிற்சி கிட்டியுள்ளது.பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற அமெரிக்காவின் ஆயுதத்தை வைத்தே ஓர் இனத்தின் பெரும்பகுதியை அழித்த சிங்களம் அதே பாடத்தைச் சர்வதேசத்திற்குக் கற்பிக்கும் நிலையில் உள்ளது. இந்த உதயபெரேரா தமிழின அழிப்பின் பின்னர் தமிழனத்தின் வேர்களை அறுக்கவும் தமிழினத் துரோகிகளைத் தம் பக்கம் திருப்பவும் புலம்பெயர் நாடுகளிலிருந்து சிங்களத்தின் கைக்கூலிகளாகச் செயற்பட்டவர்களை மீண்டும் அவர்களின் தலைமையகமான கோத்தபாயவிடம் அழைத்துச் செல்லவும் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதன் பின்னர் யாழ் தீபகற்பத்திற்கு இவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
இன்று யாழ். மாவட்டத்தில் சிங்களத் தளபதி உதய பெரேரா ஒரு புதிய வடிவ இனவழிப்பை ஆரம்பித்துள்ளார். 18 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களையும் 18 முதல் 32 வயது வரையான ஆண்களையும் இராணுவத்தில் இணைக்கும் ஓர் இனத்தின் இளைய சமுதாயத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். இதனைத் தடுத்து நிறுத்தும் சக்தியோ அல்லது மக்களை எச்சரிக்கும் சக்தியோ இன்று அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இல்லாமையினாலும் முதலமைச்சரின் சிங்கள விசுவாசத்தாலும் மக்களின் குறிப்பாக இளையோரின் வறுமை நிலையைச் சிங்களம் தனது இனவழிப்பு ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
இதற்கு எம் கோடரிக்காம்புகளே கருவிகளாக உள்ளனர். கையறு நிலையில் நிற்கும் மக்களிற்கு உதவும் புனர்வாழ்வு மையங்கள், புனர்வாழ்வுத் திட்டங்கள் என்ற கண்துடைப்பு நாடகங்களை அரசு அரங்கேற்றி வருகின்றது. இதன் மூலம் இளைஞர்களிற்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாகக் காட்டப்படுகின்றது. பிரித்தானியாவில் இருந்து தமிழினத்திற்குள் ஆபாசச் செய்திகளையும் அசிங்கமான செய்திகளையும் தனது தளத்தின் தலையாயக் கடமையாகக் கொண்டு சிங்களத்தின் ஏவல் நாயாக எம்மக்களிற்குக் கலாச்சாரச் சீர்கேட்டை உருவாக்கும் பசுத்தோல் போர்த்திய ஓநாயாக இயங்கி வந்தவன் ‘தமிழ்.சி.என்.என்.’ கண்ணன்.
புலம்பெயர்ந்த மண்ணில் தமிழினத்திற்குச் செய்ய வேண்டிய அநியாயங்களைச் சிங்களத்தின் கட்டளைக்கிணங்கி அவன் பணத்தோடு செயற்பட்டுவிட்டு அதே சிங்களத்தின் இன்னொரு கையாளிடம் இன்று அந்தத் தளத்தை ஒப்படைத்துள்ளான். இவரும் சிங்கள இராணுவ வலையமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர். இன்று யாழ்நகர் சென்று சிங்களத் தளபதி உதய பெரேராவுடன் கண்ணன் எனும் இந்த ஓநாய் தமிழினத்தைக் கருவறுக்கக் கைகோர்த்து நிற்கின்றது.
அங்கு கரவெட்டியைச் சேர்ந்த இன்னுமொரு மெத்தப்படித்த துரோகியான செல்வா என்றழைக்கப்படும் யாதவன் சோமசுந்தரம் எனும் கரவெட்டி மாலுசந்தியைச் சேர்ந்தவரை வைத்து மக்களை ஏமாற்றும் ஒரு பாரிய துரோகத்தைத் தமிழ்.சி.என்.என். கண்ணன் செய்து வருகின்றான். இராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கும் போர்வையில் தழிழ் இளைஞர்களையும் தமிழ் யுவதிகளையும் உள்வாங்கச் சிங்களம் எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்காமல் போனது. இனப்படுகொலை இராணுவத்தில் இணையத் தமிழ் இளைஞர்கள் தயாராக இருக்கவில்லை.
அதனால் தமிழ்.சி.என்.என்.கண்ணன் யாதவனை வைத்து புனர்வாழ்வு மையம் என்ற போர்வையில் இளைஞர்களிற்கும் யுவதிகளிற்கும் அரசாங்க உத்தியோகம் வழங்குவதாகக் கூறி ஒரு நாடகத்தை ஆரம்பித்துள்ளான். பல உத்தியோகங்களிற்கான வேலைவாய்ப்பப் பட்டியலையும் விண்ணப்ங்களையும் தயாரித்துள்ளான். அங்கு உண்மையில் அப்படி ஒரு புனர்வாழ்வுத் திட்டமோ அல்லது அரசாங்க உத்தியோக நியமனமோ இல்லை. இவன் விரித்த வலையில் வீழ்ந்த இளைஞர்களையும் யுவதிகளையும் நேராக இராணுவப் பயிற்சிக்கு இவன் அனுப்பி வைக்கின்றான்.
மக்களிற்குச் சேவை செய்வதாகப் பசுத்தோல் போர்த்திக் கொண்டு ஒரு சமூக அழிவையும் ஒரு தலைமுறையின் இருப்பையும் அழிவிற்குள்ளாக்கும் வேலையைச் செய்யும் கண்ணண் சிங்களத்தின் ஏவல் ஓநாயாக இனப்படுகொலையாளனுக்குச் சேவகம் செய்யும் அடியாளாக இருக்கின்றான். இந்த இளைஞர்களை ஏமாற்றும் அரசாங்க உத்தியோக விண்ணப்பங்களை கிராமசேவகர்களைத் தனது அராஜகத்தினால் மிரட்டி அவர்களின் மூலமே மக்களிற்கு விநியோகிக்கின்றான். அங்கு அந்த விண்ணப்பங்களை வாங்கிப் பூர்த்தி செய்து நேர்முகத் தேர்விற்குச் செல்லும்போது அங்கு சிங்கள இராணுவத்தினரே நேர்முகத் தேர்வினை நடாத்தும் இடத்தில் இருந்திருக்கின்றார்கள்.
அதன் பின் அந்த இளைஞனோ அல்லது யுவதியோ தப்பிக்க இயலாது. இராணுவத்தின் பிடிக்குள் அவர்கள் சிக்கிக் கொள்கின்றார்கள். அவர்களிடம் அவர்களது கல்விச் சான்றிதழ்களின் மூலப்பிரதிகளை வாங்கி வைத்துக்கொண்டு, அவர்களை மிரட்டி இராணுவத்தில் சேர்த்துக் கொள்கின்றனர். இதற்கான மூலப் பிரச்சாரத்தினையும் இளைஞர்களையும் யுவதிகளையும் சிங்களத்தின் படுகுழிக்குள் தள்ளும் வேலையினைக் கண்ணனும் யாதவனும் ஒவ்வொரு பகுதியிலும் நிறைவேற்றுகிறார்கள். இவர்களிடம் சிக்குபவர்கள் மூன்று மாதகாலத்திற்குப் பலாலி இராணுவ முகாமில் பயிற்சி வழங்கப்பட்டுப் பின்னர் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள்.
ஏற்கனவே பல்லாயிரக் கணக்கான இளைஞர்களைப் பயங்கரவாதப் புனர்வாழ்வு என்ற போர்வையில் அடைத்து அவர்களில் பலரைக் கொன்றும் பலரைத் தமது கருவிகளாக மாற்றியும் உள்ள சிங்களம், இன்று எஞ்சியுள்ள தமிழினத்தின் இளைய தலைமுறையையும் தனது இரும்பு வேலிக்குள் கொண்டு வந்து எக்கணமும் அழித்துவிடக் கூடிய நிலைக்குக் கொண்டு வருகின்றான். இது ஒரு பாரிய இனப்படுகொலையின் தொடர்ச்சியாகும். இதற்கு எம்மிடையே ஊடகப் போர்வையில் இருந்த கரவெட்டி இரும்பு மதவடியைச் சேர்ந்த கண்ணனும் யாதவனும் இணைந்து அவர்களும் இனப்படுகொலைக் குற்றவாளிகளாக மாறி உள்ளார்கள்.
கண்ணனும் யாதவனும் ஒவ்வொரு கிழமையும் பலாலி முகாமில் உதய பெரேராவுடனான சந்திப்பை மேற்கெள்வதோடு அவரது ஆணைகளை ஏற்று மக்களைப் படுகுழியில் தள்ளி வருகிறார்கள். உதய பெரேரா தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் பாதிக்கப்பட்ட அவர்களின் குடும்பங்களிலிருந்து பிரித்தெடுத்து தமழீழத் தேசிய நீரோட்டத்தில் கலந்திடா வண்ணம் செய்யும் இராணுவ அரசியல் இராஜதந்திரத்தை இந்தப் புதிய துரோகக் கும்பலை வைத்துச் செய்து வருகின்றார்.
இதே தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் இராணுவத்தில் இணைத்துவிட்டு அடிக்கடி அரசாங்கம் நடாத்தும் ‘புலி’ நாடகத்திற்கு இவர்களையே பலியாகக் கொடுக்கும். இதன் மூலம் விடுதலைப்புலிகள் தமிழ் இராணுவத்தினரையே கொன்று விட்டார்கள் என்ற சர்வதேசப் பிரச்சாரத்தையும் தமிழ் மக்கள் மீதான பிரச்சாரத்தையும் மேற்கொள்ள இந்த இராஜதந்திரம் பயன்பட இந்த ஊடகப் போர்வை போர்த்திய ஓநாய் கைகொடுக்கின்றது.
வடமாராட்சியின் கரவெட்டியைச் சேர்ந்த, பிரித்தானியாவில் வியாபாரியாக இருந்த கண்ணன், கே.பி.யின் வலையமைப்பினுடாகக் கோத்தபாய ராஜபக்சவினுடன் தொடர்பைப் பேணிவந்தவன். இவனிற்குப் பிரித்தானியாவிலேயே சிங்கள அரசின் நிதிகள் கே.பியினுடாக வழங்கப்பட்டே இணையத்தளமும் நடாத்தப்பட்டது. இன்று தமிழ் இளைஞர்களின் அழிவிற்குக் காரணமாக இயங்கும் கண்ணனுக்கு உதய பெரேராவின் ஆசியுடன் வடமாராட்சியில் மண் அள்ளும் அராஜகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது ‘நெய்தல்’ என்ற அமைப்பின் போர்வையில் செய்யப்படுகின்றது.
அத்தோடு கண்ணன் யாழ்ப்பாணத்தில் சிங்கள அர
சினதும் இராணுவத்தினதும் ஊதுகுழலாக ஒரு பத்திரிகையையும் ஆரம்பிக்க உள்ளான். அது மட்டுமல்லாது பிரித்தானியாவில் கேவலமான இணையத்தளத்தை நடாத்தியது போல் அங்கும் எஞ்சியுள்ளவர்களைக் கலாச்சாரச் சீரழிவிற்குள்ளாக்கவும் உல்லாசப் பயணிகளிற்கு யாழ்ப்பாணத்திற்கு ஓர் அசிங்கமான முகத்தைக் காட்டவும் ஒரு மசாஜ் நிலையத்தையும் மதுபானக் கடையையும் இணைத்து ஒரு கேளிக்கை விடுதியை வதிரி உடுப்பிட்டி வீதியில் யாதவனுடன் இணைந்து கட்டி வருகின்றான்.
இந்த மாதிரி நிறுவனங்களை அமைப்பதையே அமெரிக்கா போன்ற நாடுகளின் பணத்துடன் நடாத்தும் ‘அபிவிருத்தி’யின் சின்னமாகவும் காட்ட முயல்கின்றனர். கண்ணன் குழு கொழும்பிலுள்ள வெளிநாட்டு மிசன் ஒன்றுடன் நெருங்கிய உறவைப் பேணிவருகின்றனர்.
ஐரோப்பிய நாடடொன்றின் துதுவர் குழுவான இவர்கள் கண்ணன் குழுவுடன் இணைந்து சமூகச் சீர்கேடுகளிற்குத் துணைபோய்க் கொண்டும் உள்ளனர். இந்தத் தூதரகம், யாழ் மண்ணில் இந்தக் குழுவுடன் சேரந்து இயங்கி வருவதாக யாழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். இதன் அடுத்த கட்டமாக மேலும் ஒரு தமிழ் ஊடகத்தையும் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்தது அம்பலமாகி உள்ளது. newjaffna என்றறியப்பட்ட இணையத்தளம் உதய பெரேராவின் பணிப்பின் பேரிலேயே இயங்கி வந்துள்ளது. இந்தத் தளம் யாழ்நகர் பற்றிய கிசுகிசுக்களையும் வதந்திச் செய்திகளையுமே பரப்பி வந்தது.
ஆரம்பத்தில் மிரட்டல் மூலமும் பின்னர் அடிபணிவின் பேரிலும் இத்தளம் உதய பெரேராவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் பல இலட்சக்கணக்கான பணத்தையும் இந்த இயங்கு தளத்தின் அனைத்து செலவீனங்களையும் உதய பெரேராவின் வலையமைப்பில் இயங்கும் ஒரு புலம்பெயர்ந்த இணையத்தள நபர் வழங்கும் பணம் மூலம் இராணுவம் கொடுத்து வந்துள்ளது.
ஏற்கனவே பல்லாயிரம் மக்கள் பார்வையிடத் தொடங்கி இருக்கும் இணையத்தளம் மூலம் தமிழ் மொழியிலேயே தமிழ் மக்களிடம் நஞ்சை விதைக்க உதய பெரேரா ஆரம்பித்தார். தமிழ்நாதம் பத்திரிகையை இராணுவப் புலனாய்வாளர்கள் ஆரம்பித்து மக்களிடையே அச்சிட்ட ஊடகம் மூலமாகக் கருத்தை விதைக்க முயன்றும் அப்பத்திரிகையை வாங்க யாருமே இல்லாது அந்தத் திட்டம் பிசுபிசுத்துப் போனதால், இணையத்தளங்களைக் குறிவைக்கும் வேலையை உதய பெரேரா ஆரம்பித்தார்.
இதே உதயபெரேரா திருமதி அனந்தி சசிதரன் ஐக்கிய மக்கள் முன்னணியுடன் இணைந்து விட்டார் என ஒரு பொய் உதயன் பத்திரிகையை வெளியிட வைத்ததும் ஊடக ஜாம்பவான்கள் மூலமும் ஊடக விருது வாங்கியவர்கள் மூலமும் செயற்படுத்தியதும் இவரது இராஜதந்திரமே. ஆனாலும் அதுவும் பிசுபிசுத்துப் போனது.
இப்போதும் இராணுவத்தில் தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் கண்ணன் ஊடாக இணைக்கும் செய்தியை யாழ்ப்பாணப் பத்திரிகைகள் எதுவும் எழுதிவிடாதபடி கொழும்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றை நடாத்தும் பணமுதலை ஒருவர் மூலம் யாழ்ப்பாணப் பத்திரிகைகளிற்கு உதய பெரேரா அழுத்தங்களை ஏற்படுத்தி உள்ளார். தமிழர்களை உபயோகித்தே தமிழர்களை அடக்கும் உத்தியை இந்தச் சிங்களத் தளபதி துரோகிகளை வைத்துத் திறம்படச் செய்து வருகின்றான்.
இங்கிலாந்தில் இயங்கும் தமிழ்.சி.என்.என் மூலம் தமிழ் மக்களைக் கையகப்படுத்தும் உதய பெரேரா தனது இந்திய நண்பர்களின் மூலமும் ஜரோப்பாவில் இயங்கும் ஏனைய இணைய ஊடகங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளார். அதற்கு இங்கிலாந்தில் ஊடகவியலாளர் வேடத்தில் இருக்கும் ஈ.பி.டி.பி.
நபரையும் தன்னைப் பிரபலமாகக் காட்டிக் கொள்ளும் இந்திய வழிகாட்டலில் இயங்கித் தமிழ் மக்களைச் செய்திகள் மூலம் அதிரவைக்க எண்ணும் ஓர் இணைய ஊடகத்தின் மூலமும் இணைய ஊடக மாநாடொன்றை நடாத்தி அவர்களைச் சிங்களத்தின் ஏவல் ஓநாய்களாக மாற்ற நடந்திய முயற்சியும் அவர்கள் முகத்தில் கரியைப் பூசியதோடு தோல்வியில் முடிந்தது.
இதன் அடுத்த கட்டமாகக் கோத்தபாய தன் குழுவிற்குக் கண்ணனாலும் மற்றவர்களாலும் ‘வழிக்குக்’ கொண்டு வரப்பட்ட ஊடகவியலாளர்கள் பலரை அண்மையில் சிறீலங்காவில் இருந்து தப்பி வருபவர்கள் போல் காட்டி வெளிநாடுகளிற்கு முக்கியமாக ஜரோப்பாவிற்குள் அனுப்பி வைத்துள்ளார்.
இவர்கள் எல்லையற்ற ஊடகவியலாளர் அமைப்பின் மூலமும் வேறு பலர் மூலமும் ஊடுருவித் தமிழீழத் தேசியத்தின் விடுதலையின்பால் உறுதியுடன் நிற்கும் பத்திரிகை மற்றும் இணையங்களை உடைக்கவும் ஊடுருவவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஊடுருவல்களிற்கான பல முயற்சிகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளனர். இவர்களில் பலர் ஏற்கனவே புலம்பெயர் மட்டங்களில் அறியப்பட்டவர்கள்.
இந்தச் சிங்கள அரசின் ஏவல் ஓநாய்களாக இயங்கும் இணைய ஊடகக் கண்ணண் போன்று இயங்கும் இன்னும் பல இணையங்களை மக்கள் மிகவும் கவனமாக அவதானிப்பதுடன் இந்த இணைய ஓநாய்களின் கோரப்பற்களில் எமது தாயகத்தில் வாழும் இளைஞர்களும் யுவதிகளும் பலியாகாமல் அவர்கள் சுய தொழில் வாய்ப்புகளிற்குக் கைகொடுத்து உதவும் கடமை எங்களுக்கு உள்ளதை உணர்ந்து செயற்படவேண்டிய முக்கிய தருணம் இது. உங்கள் உறவுகள் இந்த வலைகளில் விழாது எச்சரிக்கும் கடமையும் உண்டு.