பிரிட்டனில் சிக்ஸர் விளாசத் தடை - TK Copy பிரிட்டனில் சிக்ஸர் விளாசத் தடை - TK Copy

  • Latest News

    பிரிட்டனில் சிக்ஸர் விளாசத் தடை

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சிக்சர் என்பது சர்வ
    சாதரணமாக பேட்ஸ்மன்களால் அடித்து நொறுக்கப்படுகிறது. ஐபிஎல் மட்டும் அல்ல 20 ஓவர் போட்டிகளே சிக்ஸர்களால் தான் இவ்வளவு பிரபலம் அடைந்தது என்றால் மிகையாது. அடிக்கடி சிக்சர் பறக்கும் அதிரடி கிரிக்கெட்டை பார்க்கத்தான் ரசிகர்களும் விரும்புவர். ஆனால் இந்த அதிரடி விளையாட்டில், சிக்சர் விளாச தடை விதித்தால் எப்படியிருக்கும்? அப்படி ஒரு தர்மசங்கடமான நிலைதான் இங்கிலாந்தில் உள்ள கிரிக்கெட் அணி ஒன்றுக்கு ஏற்பட்டுள்ளது. இதை நீங்கள் நம்பாக இருக்க முடியாது ஏனெனில் இதுதான் உண்மை. 

    இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள பிரிட்வெல் சாலோம் கிரிக்கெட் அணியினர் அப்பகுதியில் அடிக்கடி கிரிக்கெட் விளையாடுவர். அப்போது இந்த வீரர்கள் சிக்சர் அடித்தால், பந்து அருகே உள்ள தோட்டத்தில் போய் விழும். எனவே அந்த பந்தை எடுக்க வீரர்கள் அடிக்கடி தோட்டத்துக்குள் நுழைந்ததால், அந்த தோட்டம் சேதமடைந்தது. பொறுத்து பொறுத்து பார்த்த தோட்டக்காரர், கிரிக்கெட் அணியினரை கோர்ட்டில் கொண்டுபோய் நிறுத்திவிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதியும், கிரிக்கெட் அணியினர் சிக்சர் அடிக்க தடை விதித்து தீர்ப்பு வழங்கி விட்டார்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: பிரிட்டனில் சிக்ஸர் விளாசத் தடை Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top