ரணில் - சந்திரிக்கா கூட்டு, சிறுபான்மையினருக்கு ஆபத்து- வீரவன்ச - TK Copy ரணில் - சந்திரிக்கா கூட்டு, சிறுபான்மையினருக்கு ஆபத்து- வீரவன்ச - TK Copy

  • Latest News

    ரணில் - சந்திரிக்கா கூட்டு, சிறுபான்மையினருக்கு ஆபத்து- வீரவன்ச

    எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எவ்வித விமோசனமும் கிடைக்காது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

    மருதாணை சங்கராஜ மாவத்தையில் நவீன மயப்படுத்தப்பட்ட தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தினை திறந்து வைத்து உரையாற்றும் வீரவன்ச இந்த கருத்தினை வெளியிட்டார்.
    அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.
    இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களின் பாரியதொரு இனவாத கட்சிதான் எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துள்ளது. அக்கட்சி அந்தரங்கமாக ஒரு உடன்படிக்கையையும் கைச்சாத்திட்டுள்ளது.
    இந்த பௌத்த இனவாதக் கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருக்கும் வரை சிறுபான்மையினருக்கு எதிராக எந்த வரப்பிரசாதங்களையும் கொடுக்காமல் தடுத்துக்கொண்டிருந்த கட்சி. ஆகவே முஸ்லிம்கள் சற்று சிந்தியுங்கள். உண்மையில் ஜனவரி 8ஆம் திகதி வெற்றி பெறுவது மஹிந்த ராஜபக்ஷ தான் ஆகவே நீங்களும் அவருக்கு வாக்களித்து மஹிந்த ராசபக்ஷவின் பங்குதாரர்களாகி விடுங்கள்.
    அழகிய நிலையில் பழைய வீடுகள் வீடமைப்புத்திட்டத்தின் மூலம் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல இவ்வாறாக இதுவரை 35 வீடு அமைப்புத்திட்டங்கள் அழகுபடுத்தி நவீனமயப்படுத்தும் திட்டத்திற்கு ஜனாதிபதி மஹிந்தவே இவ்வாறு பாரிய நிதியை எனக்கு வழங்கினார். கடந்த ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க- ரணில் ஆகியோர் ஆட்சிக் காலத்தில் இவ்வாறானதொரு அபிவிருத்திகளை அவர்களால் செய்ய முடிந்ததா?
    ரணில் யானைச் சின்னத்தில் வந்திருந்தால் இம்முறை ஜனாதிபதித் தோதலில் ஒரு பாரிய போட்டியாகவும் சவாலாகவும் இருந்திருக்கும். ஆனால் அவர் கடந்த முறை சரத் பொன்சேகாவை பழிக்கடாவாக்கினார். இம்முறை சந்திரிக்கா பண்டாரநாயக்காவைப் பயன்படுத்தி மைத்திரிபால சிறிசேனாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். மைத்திரிபால சிரிசேனாவே ஒரு நிலையான கொள்கையில்லாதவர். தலைமைத்துவத்துக்கு பொறுத்தமற்றவர், எல்லாவற்றுக்கும் தலையாட்டுபவர்.
    சந்திரிக்காவோ, அரசில் உள்ள 45 பாராளுமன்ற உறுப்பினரை மஹிந்தவிடமிருந்து எடுத்து ஜ.தே.கட்சியில் உள்ள 43 பேரையும் சேர்த்து அரசைக்கொண்டுபோகலாம். என தப்புக் கணக்கு போட்டுவிட்டார். ஆனால் மஹிந்த அரசில் மிகவும் தலையிடியாக இருந்த 8 பேர்தான் போயிருக்கிறார்கள்.
    வீதியில் செல்கின்ற ஒருவர் மைத்திரிபாலசேனாவுடன் ஒர் ஒப்பந்தம் கைச்சாத்திட வாங்க என்றாலும் மைத்திரி கைச்சாத்திடுவார். அவரைக்கொண்டு ரணிலும்- சந்திரிக்காவும் பேய் ஆட்டம் ஆட்டுகின்றனர். இப்படியான ஒருவரிடம் மக்கள் நாட்டைக் கையளிப்பதா? எனவும் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ரணில் - சந்திரிக்கா கூட்டு, சிறுபான்மையினருக்கு ஆபத்து- வீரவன்ச Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top