ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உருவாகும் புதிய அரசு, தேசிய இனப்பிரச்சினைக்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்..
பொது எதிரணி கோட்பாடுகளில், இன்று இனப்பிரச்சினை இல்லை. ஜனாதிபதி முறைமை, 18ம், 17ம் திருத்தங்கள் ஆகியவை பற்றியே பேசப்பட்டுள்ளன. நாம் இன்று இவற்றுக்கு தடையாக இருக்கவில்லை. ஆகவே இனப்பிரச்சினை தீர்வை ஒரு நிபந்தனையாக நாம் இன்று முன்னிறுத்தவில்லை. ஆனால், அதற்காக இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள். இதற்கான தீர்வு தேடல்தான் தமிழ், முஸ்லிம் மக்களின் முதன்மை தேவை. ஞாபகப்படுத்துகின்றேன் என அவருக்கு நான் தோழமையுடன் கூறுகிறேன்.
குடும்ப ஆட்சி, நண்பர்- உறவினர்களுக்கான பொருளாதார கொள்கை, சட்ட ஆட்சியின் வீழ்ச்சி, ஊழல், வீண் விரயம், ஊடக ஒடுக்குமுறை, குற்றம் செய்யும் சிலருக்கு கிடைக்கும் பாதுகாப்பு ஆகியவை ஒழிக்கப்பட வேண்டுமென நாங்களும் விரும்புகிறோம். ஆகவே அதற்கான தேசிய போரட்டத்தில் நாங்களும் இருக்கின்றோம். ஆனால், அதைவிட தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு எங்களுக்கு முக்கியம். எங்கள் பட்டியலில் அதற்குதான் முன்னுரிமை தருகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.