அரசு வெற்றிபெற்றால் முற்றுகையிடுவோம் –அத்துலிய ரத்தின தேரர் - TK Copy அரசு வெற்றிபெற்றால் முற்றுகையிடுவோம் –அத்துலிய ரத்தின தேரர் - TK Copy

  • Latest News

    அரசு வெற்றிபெற்றால் முற்றுகையிடுவோம் –அத்துலிய ரத்தின தேரர்

    அரசாங்கம் எந்த சூழ்ச்சிகளையும் செய்து வெற்றி பெற முடியாது. அவ்வாறு வெற்றி பெற முனைந்தால் பத்து லட்சம் பேரைத் திரட்டி கொழும்பை முற்றுகையிட்டு அரசாங்கத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் அத்துலிய ரத்தின தேரர் கண்டியில் நேற்று சூளுரைத்தார்.


    கண்டியில் நடைபெற்ற எதிரணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் அரசாங்கம் சர்வதேச சூழ்ச்சி என்று கூறி வாக்குகளைப் பெற முயற்சிப்பதாகவும் அவ்வாறு ஒரு சூழ்ச்சியும் இல்லை என்றும் அரசிற்குள்ளேயே சூழ்ச்சிக்காரர்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

    இதேவேளை கசினோக்காரர்கள் மற்றும் குடுக்காரர்களும் ஜனாதிபதி மகிந்தவுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஜனாதிபதி மகிந்தவுக்கான எதிரி பொது எதிரணியில் இல்லை என்றும் அந்த எதிரியும் ஜனாதிபதி மகிந்தவின் அணியிலேயே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: அரசு வெற்றிபெற்றால் முற்றுகையிடுவோம் –அத்துலிய ரத்தின தேரர் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top